அஸ்கரியேசிஸ் (உருளைப்புழு நோய்) என்றால் என்ன?
அஸ்கரியேசிஸ் என்பது உருளைப்புழுவால் ஏற்படும் ஒரு ஒட்டுண்ணி தொற்றாகும்.இந்த ஒட்டுண்ணி 40 செமீ நீளமும் 6 மிமீ விட்டமும் கொண்டது மற்றும் இதுதான் இந்தியாவில் அதிகமாக காணப்படும் புழுத்தொற்றாகும். உலகெங்கிலும் இந்த புழுக்களால் ஒரு பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.இது அனைத்து வயது குழுக்களிலும் ஏற்படுகிறது, குறிப்பாக பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வெப்பமண்டல மற்றும் துணைவெப்பமண்டல பகுதிகளில் அஸ்கரியேசிஸ் அதிகமாக வியாபித்திருப்பதாக கருதப்படுகிறது.உலக சுகாதார மையத்தை (டபுள்யூ.ஹெச்.ஓ) பொறுத்தவரை 870 மில்லியன் குழந்தைகள் புழுத்தொற்றுக்கான வாய்ப்புள்ள இடங்களில் வசிக்கின்றனர்.
அஸ்கரியேசிஸின் அறிகுறிகள் மற்றும் நோய்க்குறிகள் என்னென்ன?
பெரும்பாலும் மனிதர்களுக்கு குறைவான அறிகுறிகள் இருக்கலாம் அல்லது எந்த அறிகுறியும் இல்லாமல் போகலாம்.
எனினும் சில பொதுவான அறிகுறிகள் கீழ்கண்டவாறு:
லேசான மற்றும் மிதமான பாதிப்புள்ளவர்களுக்கு
- வயிற்று வலி அல்லது அசௌகரியம்.
- குமட்டல்.
- வாந்தி எடுத்தல்.
- பேதி.
- மலத்தில் ரத்தம்.
தீவிரமான பாதிப்புள்ளவர்களுக்கு:
- கடுமையான வயிற்று வலி.
- சோர்வு.
- வாந்தி எடுத்தல்.
- எடை இழப்பு.
- வாந்தி அல்லது மலத்தில் புழுக்கள் இருப்பது.
குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு கடுமையான தொற்று அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு,குடல் அடைப்பு மற்றும் பலவீனமான வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடும். சிலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் இருமல் போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.
கீழே குறிப்பிட்டுள்ள சிக்கல்கள் ஏற்படலாம்:
- மலக்குடல் வழியாக ரத்தப்போக்கு.
- குடல் அடைப்பு.
- குடல்வாலழற்சி.
- கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்.
- கணைய போலி நீர்க்கட்டி.
அஸ்கரியேசிஸின் முக்கிய காரணங்கள் என்ன?
அஸ்கரியேசிஸ், அஸ்காரிஸ் லம்பிரிகொய்ட்ஸ் எனப்படும் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. இது நேரடியாக ஒருவருடன் மற்றொருவர் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுவதில்லை ஆனால் பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலுள்ள அஸ்கரியேசிஸின் முட்டைகள் வழியாக பரவுகிறது. இந்த முட்டைகள் இயற்கை உரங்கள் மூலம் பண்ணை மண்ணிற்கு செல்கிறது.
இந்த தொற்று பரவும் முறை இவையாகும்:
- உருளைப்புழு முட்டைகளால் மாசுபடுத்தப்பட்ட உணவையோ அல்லது திரவதையோ அருந்துவது.
- மாசுபடுத்தப்பட்ட நிலத்தில் விளையாடுவது மற்றும் அதன் தூசி துகள்களை சுவாசிப்பது.
- மோசமான சுகாதார நிலையில் திறந்தவெளியில் மலம் கழிப்பது மற்றும் சரியான சுகாதாரமின்மை.
- பன்றி போன்ற விலங்குகளுடன் தொடர்பு ஏற்படுவது.
இது எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
இந்த புழுக்களின் வாழ்க்கை சுழற்சி 4-8 வாரங்களாகும்.
இதனை கண்டறியும் முறைகள் கீழ்கண்டவாறு:
- நுண்ணியல்: மலத்தை நேரடியாக பரிசோதிப்பது.
- ஈஸினோபிலியா: உயர்ந்த ஈஸினோபில் எண்ணிக்கையின் (ஒரு வகையான வெள்ளை ரத்த அணுக்கள் [டபுள்யூ.பி.சி க்கள்]) இருப்பை கண்டுபிடிப்பது.
- தோற்றமாக்கல் சோதனைகள்: புழுக்களின் இருப்பையும் அதனால் ஏற்பட்டுள்ள அடைப்பையும் காட்சிப்படுத்துவது.
- ஊனீரியல் (அரிதாக): ஒட்டுண்ணிக்கு எதிராக உள்ள ஆன்டிபாடிக்களின் இருப்பை தீர்மானிப்பது.
புழுக்களை வெளியேற்றும் அல்லது கொல்லும் குடற்புழுக்கொல்லி மருந்துகளும் சிகிச்சையில் அடங்கும்.இந்த மருந்துகள் கருவிலிருக்கும் சிசுவுக்கு தீங்கு விளைவிக்க வல்லது என்பதால் கர்ப்பகாலத்தில் இவற்றை தவிர்க்க வேண்டும்.
- அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு மற்றும் புனர்வாழ்வுக்கு தேவையானவை:
- குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ வை மிகுதியாக அளிப்பது.
- 3-6 மாதங்கள் வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒதுங்கி வாழ்வது.
- அதிகபட்ச நன்மைகளை பெறுவதற்கு மருந்து சிகிச்சையுடன் இணங்கியிருப்பது.
சுய-பராமரிப்பு குறிப்புகள்:
- சிறப்பான சுகாதாரத்தை பராமரிப்பதும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணுவதும் எந்த ஒரு வருங்கால தொற்றையும் விரட்டுவதற்கு சிறந்த வழியாகும்.
- மனித கழிவுகளை உரங்களாக பயன்படுத்துவதை தவிர்ப்பது.
- உணவருந்துவதற்கு முன் உணவுப்பொருட்களை மூடி வைப்பதை உறுதிசெய்தல்.
- உணவருந்துவதற்கு முன்னும் அதற்கு பின்னும் கைகளை கழுவுவதை கற்றுக்கொடுப்பதும் பின்பற்றுவதும்.
- குழந்தைகளை மண்ணில் விளையாட விடாமல் முடிந்தவரை தடுப்பது.
- பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை அருந்துவது, சமைக்கப்பட்ட மற்றும் சூடான உணவை உண்பது, பச்சை பழங்கள் மற்றும் காய்கறிகளை நீரில் அலசிவிட்டு உரிப்பது போன்றவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது.
இப்படிப்பட்ட தொற்றுக்களை தவிர்ப்பதே இதற்கெதிரான முக்கிய நடவடிக்கையாகும். மேலே குறிப்பிட்ட சிகிச்சை முறைகளை பின்பற்றுவது பெரிய சிக்கல்களை தவிர்ப்பதில் பெருமளவு உதவும்.