சுருக்கம்
இரத்த சிவப்பணுக்களின் (RBC) எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபின்னின் செறிவு குறைவதை குறிப்பிடும் ஒரு நிலைதான் இரத்த சோகை(அனீமியா) ஆகும். இரத்த சோகையில் இரும்பு சத்து குறைபாட்டினால் வரும் இரத்த சோகை, மெகாலோபிளாஸ்டிக் இரத்த சோகை, அஃப்ளாஸ்டிக் இரத்த சோகை மற்றும் இன்னும் பல பலவிதமான இரத்த சோகைகளும் உள்ளன. இதற்க்கு ஒட்டுண்ணி நோய்த்தொற்று, கடுமையான மாதவிடாய் ரத்தப்போக்கு, கர்ப்பம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளது. இரத்த சோகைசோர்வு, பலவீனம், வெளிர் தோல் மற்றும் சுவாசத்தில் சிரமம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கலாம். ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் எண்ணிக்கை உட்பட முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனை, ஒட்டுண்ணி தொற்று நோயை உறுதிப்படுத்துவதற்கான மல சோதனை மற்றும் அஃப்ளாஸ்டிக் இரத்த சோகையை உறுதிப்படுத்துவதற்கான எலும்பு மஜ்ஜை பரிசோதனை போன்ற நோயறிதல் சோதனைகள் மூலம் இது கண்டறியப்படலாம். இரத்த சோகை சிகிச்சையானது அதன் அடிப்படை காரணத்தை பொறுத்தது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரமாணமாக இரத்த சோகை இருந்தால் சரியான ஊட்டச்சத்து மற்றும் இரும்புச்சத்து மிகுந்த உணவுகளை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம். கடுமையான இரத்த சோகை முழு ரத்த இரத்தமாற்றம் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. அஸ்பெஸ்டிக் அனீமியா, அல்லது தொடர்ச்சியான இரத்த சோகைக்கு, ஒரு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை வழக்கமாக கடைசி கட்ட தீர்வு ஆகும்.அனீமியாவினால் ஏற்படும் விளைவானது அடிப்படை காரணங்களைப் பொறுத்தது, மேலும் பெரும்பாலான காரணங்களுக்கு சிகிச்சைகள் இருப்பதால் விளைவு நல்லதாகவே இருக்கும். இரத்த சோகைக்கான காரணம் என்னவென்று தெரியாமலே இருந்தால், குறை பிரசவம், பிறந்த குழந்தைக்கு ரத்த சோகை, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பு, வலிப்பு, உறுப்பு சேதம் போன்றவை ஏற்படலாம்.