ஆசனவாய் வெடிப்பு - Anal Fissure in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

November 21, 2018

April 28, 2023

ஆசனவாய் வெடிப்பு
ஆசனவாய் வெடிப்பு

ஆசனவாய் வெடிப்பு என்றால் என்ன?

ஆசனவாய் வெடிப்பு என்பது குடல் கால்வாயில் உள்ள சிறிய, குறுகலான, ஓவல் (முட்டை) வடிவிலான வெட்டுகள் அல்லது புண்கள் ஆகும். அவை வழக்கமாக குடல் கால்வாயின் உட்பூச்சில், குறிப்பாக பிற்  பகுதியில் ஏற்படுகின்றன. குடல் கால்வாய் என்பது மலக்குடல் மற்றும் ஆசனவாய் இடையே உள்ள ஒரு குழாய் போன்ற அமைப்பு. ஆசனவாய் அருகே ஏற்படும் இரத்தப்போக்கு மற்றும் வலியுடன்  கூடிய நரம்புப் பிடிப்பே இதற்கான மிக பொதுவான அறிகுறிகளாகும். இது எந்த வயதிலும் ஏற்படலாம். வழக்கமாக, இது ஹெமராய்ட்ஸ் அல்லது மூலநோய் என்று தவறாக எண்ணப்படுகிறது. பிளவுகள் குறுகிய காலமாக அல்லது நாள்பட்டதாக இருக்கலாம் . குறுகிய கால பிளவுகள், ஒரு காகிதத் தாள் கிழிந்ததை போல் காணப்படும, ஆனால் நாட்பட்ட பிளவுகள் ஆசனவாய் கால்வாயின் உட்பூச்சு தோலின் மேல் ஒரு கட்டியை போல் இருக்கும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

வலி மற்றும் இரத்தப்போக்கு, இதன் வழக்கமான அறிகுறிகள் ஆகும். பொதுவாக, கழிவை வெளியேற்றும்போது தொடங்கும் வலியானது நீண்ட நேரத்திற்கு தொடரக்கூடும்.  நமைச்சல் மற்றும் வீக்கமும் இருக்கும். வலியின் தீவிரம் தாங்கக்கூடியதாக இருக்கும், ஆனால் சில நேரங்களில் கடுமையான வலியை அனுபவிக்கக் கூடும். மலம், கழிப்பறை திசு காகிதம் அல்லது ஆசனவாய் சுற்றியுள்ள பகுதிகளில் சிகப்பு இரத்த துளிகள் காணலாம். ஆசனவாயின் தோலின் மீது ஒரு மெல்லிய வெடிப்பு ஏற்படும். பொதுவாக, முதல் கழிவு வெளியேற்றதிற்கும் அடுத்த கழிவு வெளியேற்றதிற்கும் இடையில் உள்ள நேரங்களில் இந்த அறிகுறிகள் ஒருவரால் உணரப்படுவதில்லை.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

மலச்சிக்கல் காரணமாக, கடினமான மற்றும் பெரிய அளவிலான மலம் ஆசனவாய் வழியாக வெளியேறும்போது ஆசனவாய் வெடிப்பு ஏற்படுகிறது. குரோன்ஸ் நோய் போன்ற குடல் அழற்சி நோய்களினாலும், ஆசனவாய் வெடிப்பு ஏற்படுகிறது.  கர்ப்பம் மற்றும் பிரசவ காலத்தில் கூட வெடிப்புகள் ஏற்படலாம். தளர்வான மலம் மற்றும் தொடர் வயிற்றுப்போக்கு ஆகியவையும் இதற்கான உள்ளார்ந்த காரணங்களாக இருக்கலாம்.

இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

மருத்துவர்கள் உங்கள் ஆசனவாயில் கையுறை அணிந்த விரலை செலுத்தி பரிசோதிக்கலாம் அல்லது ஒரு அனோஸ்கோப்-ஐ உள்ளே செலுத்தி (ஒரு பக்கம் மட்டும் கேமரா பொறுத்தபட்ட குழாய்) பரிசோதிக்கலாம். வெடிப்பு ஏற்படும் இடங்களே, அதற்கான காரணங்களையும் சுட்டிகாட்டுகிறது. முன்புறம் அல்லது பின்புறம் இல்லாமல், பக்கவாட்டில் அமைந்துள்ள வெடிப்புகள் குரோன்ஸ் நோய் காரணமாக இருக்கலாம். மேலும் பரிசோதனை செய்வதற்கு அல்லது உள்ளார்ந்த நிலைகளை கண்டறிவதற்காக, பாதிக்கப்பட்ட நபரின் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் வளையத்தக்க சிக்மயோடோஸ்கோபி அல்லது கோலன்ஸ்கோபி கருவியை மருத்துவர்கள் பயன்படுத்தலாம்.

ஆசனவாய் வெடிப்பு எளிதில் சிகிச்சை அளிக்கக்கூடியது மற்றும் சில வாரங்களில் தானாகவே சரியாகக் கூடியது என்றாலும், உள்ளார்ந்த காரணங்களை அறிந்து அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், மீண்டும் நோய் வரும் அபாயம் இருக்கிறது. பொதுவாக, நார்-சத்து நிறைந்த உணவு மற்றும் அதிகப்படியான தண்ணீர் குடித்தல் போன்ற பழக்கங்களை அதிகரிப்பதன் மூலம், மலம் இருகாமல் மற்றும் அளவில் பெரியதாகவும் வெளியேறகூடும், எனவே மேலும் காயங்கள் அதிகரிக்காமலும், ஏற்கனவே ஏற்பட்ட வெடிப்புகள் குணமாகவும் வழிவகுக்கும். ஆசனவாய் வலியில் இருந்து நிவாரணம் பெற மேற்பூச்சு மயக்க மருந்துகள் பயன்படுத்தலாம். மல மென்மைப்படுத்திகளும் சிகிச்சையளிக்க உதவுகின்றன.

ஒரு சூடான குளியல் தொட்டியில் 10முதல் 20 நிமிடங்கள் வரை பலமுறை குளிக்கும்போது, ஆசன வாய் தசைகள் தளர்வடையவும், புண்கள் ஆறவும் உதவுகிறது. மலசிக்கலை தூண்டக்கூடிய நார்க்கோடிக் வலி மருந்துகளை பயன்படுத்தகூடாது. நைட்ரோ-கிளிசரின் களிம்பு மற்றும் கால்சியம் சேனல் பிளாக்கர்கள் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் அரிதாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பொட்டலினம் டோக்ஸின் ஊசி மற்றும் ஸ்பிண்ச்செரோடோமி (குடல் அழற்சி அறுவை சிகிச்சை) ஆகியவை அறுவைசிகிச்சை முறைகளில் அடக்கம். அறுவை சிகிச்சை முறையில் குடல் இயக்க கட்டுப்பாடு செயலிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் குறைவாகவே உள்ளது.



மேற்கோள்கள்

  1. American Society of Colon and Rectal Surgeons [Internet] Columbus, Ohio; Anal Fissure Expanded Information.
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Anal fissure
  3. National Health Service [Internet]. UK; Anal fissure symptoms
  4. Am Fam Physician. 2003 Apr 1;67(7):1608-1611. [Internet] American Academy of Family Physicians; Diagnosis and Management of Patients with Anal Fissures.
  5. Steven Schlichtemeier et al. Anal fissure. Aust Prescr. 2016 Feb; 39(1): 14–17. PMID: 27041801

ஆசனவாய் வெடிப்பு க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஆசனவாய் வெடிப்பு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.