வயிற்றுப் பிடிப்புகள் என்றால் என்ன?
வயிற்றுப் பிடிப்புகள் என்பது மார்பின் கீழும், இடுப்பு மண்டலத்திற்கு மேலேயுள்ள எந்தவொரு பகுதியிலும் ஏற்படுக்கூடிய ஒரு வலியாகும். தசை சுருக்கங்களின் போது ஏற்படும் வலியே வயிற்றுப் பிடிப்புகள் ஆகும்.பிடிப்புகள் மிகவும் பொதுவானது மற்றும் நாம் அனைவரும் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறையேனும் இந்த பிடிப்புகள் பிரச்சனையை அனுபவத்திருப்போம். அவற்றின் தீவிரம் மற்றும் அடுத்தடுத்து வருதல் ஆகியவை அடிப்படை காரணத்தை சார்ந்துள்ளது.
வயிற்றுப் பிடிப்புகளோடு முக்கிய தொடர்புடைய அறிகுறிகள் என்ன?
-
பிடிப்புகள் தொடர்புடைய லேசான அறிகுறிகள்:
- சாப்பிடுகையில் அஜீரணம் மற்றும் அசௌகரியம்.
- மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு.
- ஏப்பம் மற்றும் வாய்வுத்தொல்லை அல்லது வயிற்று வாயு.
- நெஞ்செரிச்சல் அல்லது அமிலத்தன்மை (அசிடிட்டி) மற்றும் வாந்தி.
- காய்ச்சல், இது ஒரு நுண்ணுயிரி தொற்று காரணமாக இருக்கலாம்.
-
வயிற்றுப் பிடிப்புகளின் கடுமையான அறிகுறிகள்:
- வலியுடன் சிறுநீர் கழித்தல் மற்றும் குடல் இயக்கங்கள்.
- சிறுநீரில் இரத்தம் அல்லது மலத்தில் இரத்தம்.
- உடல் நீர்வறட்சி.
- பசியின்மை மற்றும் கடுமையான எடை இழப்பு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
வயிறு, கல்லீரல், சிறுநீரகம், கணையம் அல்லது அடிவயிற்றில் உள்ள வேறு எந்த உறுப்புடன் தொடர்புடைய ஏதேனும் ஒரு காரணத்தால் வயிற்று பிடிப்புகள் ஏற்படுகிறது. லேசான நோய்த்தொற்றிலிருந்து புற்றுநோயைப் போன்ற கடுமையான நோய் வரை இந்த பிடிப்புகள் வரையறுக்கப்படுகின்றன. வயிற்றுப் பிடிப்புகளின் பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
- ஃபுட் பாய்சனிங் காரணமாக வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு வீங்குதல் (வீக்கம்).
- வாந்தியெடுத்தல் மற்றும் இரைப்பை குடல் அழற்சி நோய் (இது வயிற்றில் உள்ள உணவுப்பொருள் உணவு குழாய்க்குள் மேலெழும்பும் ஒரு நிலை).
- மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி.
- லாக்டோஸ் சகிப்புத்தன்மை (லாக்டோஸ் அல்லது பால் சர்க்கரை ஜீரணிக்க முடியாதது).
- சிறுநீரக கல் அல்லது பித்தநீர்க்கட்டி.
- எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (குடல் அழற்சி).
- குடல் வால் அழற்சி.
- இரைப்பை அல்லது வயிற்று புண்கள்.
- வயிறு அல்லது பெருங்குடல் புற்றுநோய்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது?
சரியான மற்றும் திறனான சிகிச்சை முறையைப் பயன்படுத்துவதற்கு அதன் காரணங்களைக் கண்டறிவது முக்கியம். பிடிப்பின் வகை, தீவிரம், வலியின் தொடர்ச்சி மற்றும் பிற தொடர்புடைய அறிகுறிகள் ஆகியவற்றின் அடிப்படையில், உங்கள் மருத்துவர் வயிற்றுப் பிடிப்புகளின் சாத்தியமான காரணிகளை சுருக்கிக் கண்டறிந்து கொள்வார்.
பின்வரும் சோதனைகள் மூலமாக நோயறிதல் கண்டறியப்படலாம்:
- தொற்றுநோய்களை சோதித்துப் பார்க்க இரத்தப் பரிசோதனை.
- சிறுநீரக மற்றும் மலக்குடலில் உள்ள நுண்ணுயிர்களை சோதிக்க, சிறுநீரில் இரத்தம், சீழ் வெளியேற்றம் மற்றும் இன்னும் பலவற்றிற்கான பரிசோதனை.
- சிறுநீரக கல் அல்லது பித்தப்பை கற்களை பரிசோதிக்க வயிறு எக்ஸ்ரே.
- வயிற்றில் அல்லது சிறு குடலில் உள்ள அடைப்புகளை சரிபார்க்க எண்டோஸ்கோபி.
- பெருங்குடல் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கு கொலோனோஸ்கோபி.
- கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி அல்லது சிடி ஸ்கேன்.
- அல்ட்ராசவுண்ட்.
பிடிப்பிற்கான காரணத்தை பொறுத்து சிகிச்சை முறையானது வேறுபடலாம். அது பின்வருவதை உள்ளடக்கியிருக்கலாம்:
- நோய்த்தொற்று அல்லது வீக்கத்திற்கு, உங்கள் மருத்துவர் உங்களுக்கு மருந்துகள மற்றும் உணவு மாற்றத்த்தை பரிந்துரைப்பார்.
- ஏதேனும் உறுப்புகளில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால், அதை தடுப்பதற்கு அறுவைச் சிகிச்சையைத் திட்டமிடலாம்.
- கேன்சர் சிகிச்சையில் அறுவை சிகிச்சைக்கு கூடுதலாக கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி சம்பந்தப்பட்ட சிகிச்சை முறை மற்றும் விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. இது புற்று நோய் அல்லது புற்றுநோயின் இடத்தையும், அளவையும் சார்ந்துள்ளது.
வயிற்றுப் பிடிப்பிற்கான சுய பராமரிப்பு:
காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை முறை வேறுபட்டாலும், உங்கள் அசௌகரியத்தை எளிதாக்க சில அடிப்படை வழிமுறைகள் உள்ளன. இவை:
- அமிலத் தன்மை நிறைந்த மற்றும் காரசாரமான மசாலா உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும். இது உங்கள் வயிற்றில் மற்றும் குடலிறக்கத்தில் அதிகப்படியான எரிச்சலை உண்டாக்குகிறது.
- நிறைய தண்ணீர் குடிக்கவும், அதிக அளவு திரவங்களை எடுத்துக்கொள்ளவும். இருப்பினும், அதிகமாக வாயுவை உண்டாக்கும் கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்க்கவும்.
- படுக்கை நேரத்திற்கு முன் அதிகமாக எதையும் சாப்பிட வேண்டாம். நீங்கள் தூங்குவதற்கு குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு முன் இரவு உணவை சாப்பிட்டு செரிமானத்திற்கு அனுமதிக்கவும்.
- வயிற்று தசைகளுக்கு அதிக அழுத்தம் தரும்படியான கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும்.