வலுக்குறைவு (பலவீனம்) என்றால் என்ன?
வலுக்குறைவு என்பது உடலின் ஒரு அல்லது அதற்கு மேற்பட்ட தசைகள் குறைந்த வலிமையுடன் இருத்தலே ஆகும். சில மக்கள் வலுக்குறைவாக இருப்பதை உணர்கிறார்கள், ஆனால் உடல் ரீதியாக வலுக்குறைவாக இருப்பதாக அனுபவிக்கமாட்டார்கள், உதாரணமாக வலியின் காரணமாக வலுக்குறைவாக உணர்தல். சிலர் உடல் பரிசோதனையின் போது மட்டுமே வலுக்குறைவை அனுபவிக்கக்கூடும்; இது "புறநிலை வலுக்குறைவு" என்றும் அழைக்கப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதனோடு தொடர்புடைய தாக்கங்களும் அறிகுறிகளும் பின்வருமாறு:
- உணர்வின்மை.
- கடுமையான தலைவலிகள்.
- குழப்பம்.
- நடப்பதில் சிரமம்.
- சோர்வு.
- வலி மிகுந்த அல்லது புண்ணான தசைகள்.
- தூக்கக் கலக்கம்.
- தலைச்சுற்றுதல்.
- பசியிழப்பு.
- மூச்சு திணறல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இதற்கான உள்ளார்ந்த காரணங்கள் பின்வரும் குறிப்பிட்ட சுகாதார பிரச்சினைகளைச் சார்ந்துள்ளது:
- குறைந்த சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவு.
- சுவாச அல்லது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்.
- குறைவான அல்லது அதிக அளவிலான தைராய்டு ஹார்மோன்.
- குயில்லன்- பார்ரே கூட்டறிகுறி.
- தசைக் களைப்பு (தசைகள் பலவீனமடையும் ஒரு நாள்பட்ட கோளாறு).
- பாரிசவாதம்.
- நோயுற்றதன் காரணமாக, குறிப்பாக முதியவர்களிடையே ஏற்படும் செயலற்ற நிலை.
- தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யூ) தசைநலிவு (ஐ.சி.யு.வில் நீண்ட காலம் இருப்பதால் தசை வலுகுறைந்து சுருங்கி அழிந்து போதல்).
- தசை வளக்கேடு, இரத்தப் பொட்டாசியக் குறை (குறைந்த பொட்டாசியம் அளவுகள்) மற்றும் நீண்ட காலமாக மது அருந்துவதால் ஏற்படும் தசை நலிவு போன்ற பொதுவான தசை நலிவு (தசை திசுக்களின் நோய்கள்).
- இளம்பிள்ளை வாதம் (போலியோ).
- கடுமையான உடல் உழைப்பு.
- தூக்கம் இல்லாமை.
- ஒழுங்கற்ற உடற்பயிற்சி.
- காய்ச்சல் போன்ற நோய்கள்.
- மோசமான உணவுத் திட்டம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
பின்வரும் முறைகள் மூலமாக இது கண்டறிப்படுகிறது:
- உடல் பரிசோதனை: மோட்டார் செயல்பாடு, மறிவினை மற்றும் மண்டை நரம்பு செயல்பாடுகள் ஆகியவை ஆய்வு செய்யப்படுகின்றன.
- வலிமை சோதனை: எதிர்ப்புகளுக்கு எதிரான வலுக்குறைவு, தசைகளின் காணக்கூடிய சுருக்கம், புவியீர்ப்புக்கு எதிரான பக்க உறுப்புகளின் இயக்கம், மறிவினை மற்றும் உணர்ச்சி ஆகியவை பரிசோதிக்கப்படுகின்றன.
- நடைப்பாங்கு கவனிக்கப்படுகிறது.
- வலுக்குறைவு காரணங்களுக்கு மருத்துவ பின்புலம் சோதிக்கப்படுகிறது.
உள்ளார்ந்த காரணத்திற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் வலுக்குறைவு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடுமையான வலுக்குறைவு ஒருவருக்கு இருப்பின், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு தசைச் செயல்பாடு தசைகளின் செயல்பாட்டின் இழப்பை குறைக்க நோயாளிகளுக்கு தொழில்சார் சிகிச்சை மற்றும் உடல் சிகிச்சை ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.