சிபிலிஸ் என்றால் என்ன?
சிபிலிஸ் என்பது ஒரு தொற்று நோயாகும், இது முக்கியமாக பாலுறவு மூலம் தொற்றுகிறது. சில நேரங்களில், அது நெருங்கிய உடல் தொடர்பு மூலமும் ஏற்ப்படலாம்.
இது ஒரு நபருக்கு நீண்ட காலமாக மறைந்திருக்கலாம், இதனால் அவர்கள் நோய் தொற்றை ஏற்படுத்துபவராக செயல்படுவார். சிபிலிஸ் என்பது ஒரு வகை பாக்டீரியாவால் உண்டாகும் தொற்று ஆகும்.
அதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் என்ன?
சிபிலிஸ் மூன்று வெவ்வேறு நிலைகளில் ஒவ்வொரு குறிப்பிட்ட அறிகுறிகள் கொண்டு தோன்றும்.
- முதன்மைச் சிபிலிஸ்:
- தொற்றுநோய் ஏற்பட்ட 3 மாதங்கள் வரை இது ஆரம்ப நிலையில் உள்ளது.
- நோய் ஏற்பட்ட நபருக்கு சிறு வலியற்ற புண்கள் உருவாகும் வேறு எந்த முக்கிய அறிகுறிகளும் காணப்படாது.
- முதன்மை நிலை சிபிலிஸ் வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல் சில வாரங்களில் குணமடைகிறது.
- இரண்டாம் நிலை சிபிலிஸ்:
- மூன்றாம் நிலை சிபிலிஸ்:
- இது முற்றிய நிலை, முக்கிய உறுப்புக்கள் போன்றவை பாதிக்கப்படைகிறது.
- இந்த கட்டத்தில், குருட்டுதன்மை, பக்கவாதம் மற்றும் இதய பிரச்சினைகள் முக்கிய கவலைக்கிடமான நிலை உண்டாகும்.
- சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது மரணத்தை ஏற்படுத்தும்.
முக்கிய காரணங்கள் என்ன?
- சிபிலிஸை ஏற்படுத்தும் பாக்டீரியம் ட்ரிஃபோனிமா பாலிடம் ஆகும்.
- பாதுகாப்பற்ற பாலுறவே இந்த தொற்று பரவுவதற்கு மிகவும் பொதுவான முறை ஆகும்.
- ஓரினச்சேர்க்கை பழக்கமுள்ள ஆண்களுக்கு சிபிலிஸ் பரவும் ஆபத்து அதிகமாக உள்ளது.
- தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணால் அவளுக்கு பிறந்த குழந்தைக்கும் தொற்று ஏற்படலாம், இதுவே பிறவி சிபிலிஸ் எனப்படுகிறது.
- ஒரு வெளிப்படையான சொறி அல்லது புண் கொண்ட நபரை தொடுவதன் மூலமும் நோய் மற்ற நபருக்கு தொற்ற முடியும்.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
சிபிலிஸ் நோய் கண்டறிதல்:
- சோதனைகள் செய்வதற்கு முன்பாக, மருத்துவர் உங்கள் பாலியல் வரலாற்றை அறிந்து கொண்டு, குறிப்பாக பிறப்புறுப்பு பகுதியின் தோலை சோதனை செய்வார்.
- சிபிலிஸ் நோயின் அறிகுறிகள் மற்றும் சிபிலிஸை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை விவரங்கள், இரத்த பரிசோதனையுடன், புண் பரிசோதனை ஆகியவற்றின் மூலமாக சிபிலிஸ் பாக்டீரியாவை சோதிக்கலாம்.
- மூன்றாம் நிலை சிபிலிஸ் என்று சந்தேகிக்கப்பட்டால், தனிப்பட்ட உறுப்புகளின் நிலையை சோதிக்க சோதனைகள் நடத்தப்படுகின்றன.
- முதுகு தண்டிலிருந்து இருந்து திரவம் சேகரிக்கப்பட்டு மற்றும் நரம்பு மண்டலங்களில் இந்த பாக்டீரியாவினால் பாதிப்புகள் எவ்வளவு ஏற்பட்டுள்ளது என்று பரிசோதிக்கப்படுகிறது.
- சிபிலிஸ் உறுதிபடுத்தப்பட்டால், பாதிக்கப்பட்ட நபரின் வாழ்கை துணையை பரிசோதிக்கப்படுவதற்கு டாக்டர் அறிவுறுத்துவார்.
சிபிலிஸ் சிகிச்சை:
- பொதுவாக ஊசியின் மூலம் செலுத்தும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் முதன்மை நிலையிலுள்ள சிபிலிஸிற்கு பரிந்துரைக்கப்படுகின்றன, பென்சிலின் நுண்ணுயிர் கொல்லி சிபிலிஸின் சிகிச்சையளிப்பதற்காக பொதுவாக பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக் ஆகும்.
- முக்கியமாக அறிகுறிகளை மேம்படுத்துவதற்கு, தொற்றுக்கு காரணமாக உள்ள பாக்டீரியாவை இந்த கட்டத்தில் முற்றிலும் உடலை விட்டு அழிக்க முடியாததால் மூன்றாம் நிலை சிபிலிஸிற்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.
- சிகிச்சை காலம் முழுவதும் பாலியல் செயல்பாடுகளையும் அல்லது நெருக்கமான உடல் தொடர்புகளையும் தவிர்க்க வேண்டும்.