சுருக்கம்
தோல் அரிப்பு என்பது தோலில் எங்கு வருகிறதோ அங்கு சொறிய வேண்டும் என்ற உணர்வு ஆகும். தோல் அரிப்பு நரம்புகளில் ஏற்படும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு அமைப்பு தொடர்பான பிரச்சினைகள், சில மருந்துகளின் பக்க விளைவு அல்லது அடிப்படை சுகாதார நிலைமைகள், உடல் நல கோளாறு ஆகியவற்றின் அறிகுறியாகும். பல்வேறு வகையான அரிப்புகள் உள்ளன. அவற்றை பொதுவாக அதன் தோற்றத்தை அல்லது அதை ஏற்படுத்தும் காரணத்தின் அடிப்படையில் அடையாளம் காணலாம். தோல் அரிப்பு வகையில் மிகவும் பொதுவானது வெடிப்பு, படை நோய், பூஞ்சைத் தழும்புகள், மற்றும் பூச்சிக் கடி. அரிப்பு வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு மிகவும் பொதுவானது. இது கண் கூட தெரியக் கூடிய தோல் சிவந்திருத்தல், வீக்கம், கொப்புளங்கள் மற்றும் வெடிப்பு போன்ற தோற்ற விளைவுகளைக் கொண்டிருக்கிறது. அரிப்பு பொதுவாக ஒரு ஆபத்தான அறிகுறி அல்ல, ஆனால் அது நீண்ட காலத்திற்கு நீடித்தால் அது சிறுநீரகம் அல்லது கல்லீரல் செயலிழப்பு போன்ற சில கடுமையான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். அரிப்பு ஏற்படுவதற்கான காரணம் கண்டறியப்பட்ட பின் அதை சரி செய்ய தொடங்குவதற்கு பல பயனுள்ள சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் தோல் மேற்பூச்சு களிம்புகள் அல்லது வாய்வழி உட்கொள்ளும் மருந்துகளின் பயன்பாடு ஆகிய சிகிச்சை முறைகள் அடங்கும். வீட்டு வைத்தியம் தற்காலிக நிவாரணத்தையும் வழங்கலாம்.