களைப்பு என்றால் என்ன?
களைப்பு என்பது அதீத சோர்வு மற்றும் அளவுக்கு மீறிய அசதி, தம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவு ஒருவரிடத்தில் காணப்படுவது மற்றும் எவ்வளவு ஓய்வு எடுத்தாலும் கூட இந்த களைப்பு நீங்காது.நோய்கள் காரணமாக, அதிக உழைப்பு அல்லது தூக்கமின்மை, உணவுமுறை மாற்றங்கள் அல்லது வழக்கமான நடவடிக்கைகளினால் ஏற்படும் களைப்புகள் 6 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால் போதுமான அளவு ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும்.ஆனால் 6 மாதங்களுக்கும் மேலாக தொடரும் நாள்பட்ட களைப்புக்கு தகுந்த காரணங்கள் இல்லை.அடிக்கடி ஏற்படும் களைப்பு அல்லது நாள்பட்ட சோர்விற்கு மனதில் ஏற்பட்ட குழப்பமும் ஒரு காரணமாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
களைப்பு ஏற்படுவதற்கு பல அறிகுறிகள் இருந்தாலும், அதனோடு தொடர்புடைய சில முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- நாள்பட்ட களைப்பிற்கு மைலஜிக் என்செபலோமைல்டிஸ் (எம்.இ) என்று சொல்லப்படக்கூடிய நாள்பட்ட சோர்வு நோய்க்குறியீட்டின் ஒரு முக்கிய அறிகுறி ஆகும் மற்றும் இதன் பண்புகளாவன:
- களைப்பு ஆரம்பிக்கும் முன்னரே தினசரி நடவடிக்கைகளில் மேற்கொள்ளும் திறனில் தொய்வு ஏற்படுதல்.
- மைலஜிக் என்செபலோமைல்டிஸ் (எம்.இ)க்கு முன்பாகவே தினசரி நடவடிக்கைகளின் போது வழக்கமில்லாத அளவு களைப்பு ஏற்படுதல்.
- ஓய்வெடுத்த பிறகும் அதாவது தூக்கத்திற்கு பிறகும் கூட சோர்விலிருந்து மீளமுடியாமல் இருப்பது.
- நாள் முடிவில் மனநிலை அல்லது உடல் செயல்பாடுகளுக்குப் பிறகு, அதிக களைப்பையும் மற்ற அறிகுறிகளையும் இந்த நாட்பட்ட களைப்பு இன்னும் அதிகமாக்கும்.
- ஞாபகம் வைத்துகொள்வதிலும் மற்றும் யோசிப்பதிலும் பிரச்சனைகள் ஏற்படும், மனதை ஒருமுகப்படுத்துவதில் கடினம் ஏற்படும் மற்றும் எளிதில் உணர்ச்சிவசப்படுவது அதிகரிக்கும்.
- உறக்க நிலைகளில் ஒழுங்கற்றத்தன்மை ஏற்படும் (அதிக தூக்கம், குறைவான தூக்கம், தொந்தரவுடன் கூடிய தூக்கம்).
- தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் மங்கலான பார்வை ஏற்படும்.
- உடல் சக்தியற்று இருத்தல், தசை மற்றும் மூட்டு வலிமையின்மை .
- அடிக்கடி தொண்டைப்புண் ஏற்படுதல் .
- செரிமானத்தில் தொந்தரவு ஏற்படுதல் (மேலும் படிக்க: செரிமான சிகிச்சைகள்).
- காய்ச்சல் போன்ற அறிகுறிகள்.
- நிணநீர் மண்டலங்கள் மென்மையாகி அதில் வலி ஏற்படுதல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
களைப்பு ஏற்படுவதற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படலாம் அவையாவன:
- இரத்தசோகை, நாள்பட்ட வலிகள், கர்ப்பம், தொற்று நோய்கள் , அறுவை சிகிச்சை, தைராய்டு மற்றும் காசநோய் போன்ற மருத்துவ நிலைமைகள் மற்றும் நோய்கள்.
- புற்றுநோய் மற்றும் மனஅழுத்தம் காரணமாக மேற்கொண்டிருக்கும் மருத்துவ சிகிச்சைகள்.
- மனஇறுக்கம், மனஅழுத்தம் மற்றும் கவலை .
- உணவுமுறை மற்றும் உறக்கநிலைகளில் மற்றும் தினசரி நடவடிக்கைளில் ஏற்படும் தொந்தரவு காரணமாகவும் நாட்பட்ட களைப்பு ஏற்படுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
களைப்பு எதனால் ஏற்பட்டு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க பல்வேறு வகையான ஆய்வக சோதனைகள் மற்றும் மற்ற பரிசோதனைகளை மருத்துவர் மேற்கொள்ளவர்.எந்த ஒரு திட்டவட்ட காரணங்களும் இல்லாமல் உடல்சோர்வை கண்டுபிடிக்க நோயாளியின் மருத்துவ பின்புலம் மற்றும் முழுஉடல் பரிசோதனைகள் மிகவும் இன்றியமையாததாக விளங்குகின்றன.
- மருத்துவ பின்புலம் சம்பந்தமானது:
- அறிகுறிகள் எப்போது தொடங்கின மற்றும் அதன் காலஅளவு
- தினசரி நடவடிக்கைகள், தூண்டுதல்கள், முன்பு ஏற்பட்ட நோய்கள் மற்றும் அதன் சிகிச்சைகள், மற்றும் பல.
- உடல் பரிசோதனைகள் சம்பந்தமானது:
- நிணநீர் மண்டலங்கள் மற்றும் பாத வீக்கத்தினை சோதனை செய்வது.
- அசாதாரண இதயத்துடிப்புகள் மற்றும் மூச்சுவிடுவதில் ஏற்படும் பிரச்சனைகளை மார்பில் பரிசோதித்துப் பார்த்தல்.
- நரம்பு மண்டலங்களில் மற்றும் தைராய்டு சுரப்பிகளில் பரிசோதனை மேற்க்கொள்ளுதல்.
- ஆழ்ந்த பரிசோதனை மற்றும் ஆய்வக சோதனைகளாவன:
- இரத்த பரிசோதனை: முழுமையான இரத்த அணுக்களின் எண்ணிக்கை (சிபிசி), எரித்ரோசைட்டுகள் அலகுகளின் விகிதம் (இஎஸ்ஆர் ) மற்றும் தைராய்டு பற்றிய விவரம்.
- சிறுநீர் பரிசோதனை.
- மார்பில் எடுக்கப்படும் எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை மற்றும் எலக்ட்ரோகார்டியோகிராஃபி.
- களைப்பு ஏற்படுவதற்கான காரணங்களை பொறுத்து மற்ற சிறப்பு பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
உள்ளடக்கிய சிகிச்சைகள்:
- களைப்பு ஏற்படுவதற்கு காரணமான காரணிகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள்.
- புற்றுநோய், தொற்று, மனஅழுத்தம், தைராய்டு போன்ற நோய்களுக்கு எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள்.
- அறிகுறிகள் மூலம் நிர்வகித்தல்.
- வழக்கமாக மிதமான உடற்பயிற்சிகளை செய்தல்.
- பணிகளை ஒரேடியாக செய்யாமல் சிறிய சிறிய பகுதிகளாக பிரித்து செய்வது.
- பணிகளை செய்யும்போது அடிக்கடி இடைவேளைகளை எடுத்துக்கொள்ளலாம்.
- ஒரு நேரத்தில் ஒரு சிறிய பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம்.
- தியானம் மற்றும் யோகா.
- போதுமான ஓய்வு மற்றும் தூக்கம்.