கிரிப்டோகோக்கோசிஸ் என்றால் என்ன?

கிரிப்டோகோக்கோசிஸ் என்பது க்ரிப்டோகாக்கஸ் இனங்கள் மூலம் ஏற்படும் ஒரு பூஞ்சை தொற்று ஆகும். இது புறா எச்சங்கள் அல்லது கழுவப்படாத பச்சை பழங்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இது முதன்மையாக நுரையீரல், மூளை மற்றும் மூளையுறை(மூளை மூடியிருக்கும் உறை) ஆகியவற்றை  பாதிக்கிறது. அமெரிக்காவில், இது பொதுவாக 40-60 வயதுள்ளவர்களிடம் காணப்படுகிறது. பெண்களை விட ஆண்களே இதனால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில், ஹெச்.ஐ.வி நோயாளிகளில் மூளையுறைசார் தொற்று மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது, மற்றும் இந்த நோயின் பாதிப்பு 2.09% என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

பூஞ்சைக் கூறுகளின் தொடர்ச்சியான வெளிப்பாடுகளால் நுரையீரலே முதன்மையாக பாதிக்கப்படுவதோடு  கீழேயுள்ள அறிகுறிகளையும் கொண்டிருக்கிறது:

மூளையுறை தொற்றினால் வெளிப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

இது முக்கியமாக க்ரிப்டோகாக்கஸ் நியோஃபார்மன்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு ஈஸ்ட்-போன்ற பூஞ்சையினாலேயே ஏற்படுகிறது. இந்த ஈஸ்ட் பெரும்பாலும் மண், அழுகிய மரம் மற்றும் புறா அல்லது கோழி எச்சங்களில் காணப்படுகிறது; இருப்பினும், பறவைகள் பெரும்பாலும் அடிக்கடி நோய்வாய்ப்படுவதில்லை. ஏரோசோலிஸ்களை கொண்ட பூஞ்சை துகள்களை சுவாசிப்பதின் மூலம் ஏற்படும் முதன்மை நோய்த்தொற்று லேசானது. இது முக்கியமாக நோய்த்தடுப்புடைமையை உடைய நபர்களையே பாதிக்கிறது.

தொடர்ச்சியான அறிகுறிகளுக்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

  • மண்டை ஒட்டுக்குள் உண்டாகும் அதிக அழுத்தம்.
  • சிகிச்சை தோல்வி.
  • மருந்து எதிர்ப்புத்திறன்.
  • இவற்றுடன் ஒன்றுசேர்ந்த மற்ற நோய்த்தொற்றுகள்.

பிற சிக்கல்கள் பின்வருமாறு:

கிரிப்டோகோக்கோசினை கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

சுகாதார நிபுணர்கள் நோயின் நிலையை கீழ்கண்ட வழிமுறைகளின் உதவியால் கண்டிறிவார்கள்:

  • மருத்துவ வரலாறு.
  • உடல் பரிசோதனை.
  • ஆய்வக சோதனைகள்: திசுக்களின் மாதிரிகள் அல்லது இரத்தம், மூளை தண்டுவட நீர்மம் (சி.எஸ்.எஃப்) அல்லது சளி போன்ற உடல் திரவங்களை ஆய்வு செய்வதன் மூலம்  க்ரிப்டோகாக்கஸ் நியோஃபார்மன்ஸின் இருப்பு சோதிக்கப்படுகிறது.
  • மார்பு எக்ஸ்-கதிர்கள் அல்லது சி.டி ஸ்கேன் மூலம் நோயின் முன்னேற்றத்தை கண்டறியலாம்.
  • சி.எஸ்.எஃப் ஐ கண்காணித்தல் மற்றும் மூளையில் அதிகரித்த சி.எஸ்.எஃப் அழுத்தத்தை குறைத்தல்.

ஆண்டி ஃபங்கல் தெரபி சிகிச்சை முறை மூன்று கட்டங்களாக கொடுக்கப்படுகிறது: இவை தூண்டுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் பராமரிப்பு கட்டங்கள். ஆண்டி ஃபங்கல் மருந்துகள் 6 மாததிற்கோ அல்லது அதற்கும் மேலாகவோ பரிந்துரைக்கப்படலாம். நோய்த்தொற்றின் தீவிரம், பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் ஒருவரின் நோய் எதிர்ப்பு நிலையை பொறுத்தே மருந்துகள் வழங்கப்படுகின்றன. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் குறைந்த வளங்களைக் கொண்ட பகுதிகளில் வாழும் மக்கள் என நோயாளியின் நிலையை பொறுத்து சிகிச்சையின் அளவு, காலம் மற்றும் சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன.

  • தூண்டுதல் கட்டம்: ஆண்டி ஃபங்கல் மருந்துகள் குறுகிய கோர்ஸ்களாக பரிந்துரைக்கப்படுகிறது.
  • ஒருங்கிணைப்பு மற்றும் பராமரிப்பு கட்டங்கள்: நீடித்த சிகிச்சை இந்த நோய் திரும்பும் வாய்ப்புகளை குறைக்கிறது.
  • பூஞ்சை வளர்ச்சியை அகற்ற சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
  • நோயின் பாதிப்பளவையும் இறப்புக்களையும் குறைப்பதற்கு ஆரம்பகட்ட நோயறிதல் மற்றும் சிகிச்சை தேவைப்படுகிறது.

பின்தொடர்தல்:

  • ஆரம்ப மருத்துவ சோதனை முடிவுகளை இரண்டு வாரங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
  • முறையான மருத்துவ பரிசோதனை செய்வதன் மூலம்  நீண்டகாலத்திற்கு இதனால் விளையவிருக்கும் சிக்கலைகளை தடுக்கலாம்.
Read more...
Read on app