சுருக்கம்
மருக்கள் என்பவை, உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றக் கூடிய, அசாதாரணமான சிறிய வளர்ச்சிகள் ஆகும், ஆனால், பொதுவாக அவை முகம், கைகள் மற்றும் பாதங்களில் காணப்படுகின்றன. இவை, ஹியூமன் பாப்பில்லோமா வைரஸ் (எச்.பி.வி) எனப்படும், தோலின் மேலேயுள்ள வெடிப்புகள் மற்றும் சிராய்ப்புகள் மூலம் உடலுக்குள் நுழையும் வைரஸ் ஏற்படுத்தும் நோய்த்தொற்றின் காரணமாக வருகிறது. மருக்கள் மிகவும் தொற்றக்கூடியவை மற்றும் தொடுதல் மூலம் விரைவாகப் பரவுகின்றன. இவை மாறுபட்ட வடிவங்கள் மற்றும் அளவுகளில் தோன்றுகின்றன, மேலும் அவற்றின் தோற்றம் மற்றும் தோன்றுகின்ற இடத்தைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன. பொதுவான மருக்கள், பாத மருக்கள், தட்டை மருக்கள், மெலிந்த மருக்கள் மற்றும் பலவண்ண மருக்கள் ஆகியன மருக்களின் முக்கிய வகைகள் ஆகும். மருக்களை குணப்படுத்த இயலாது, எனவே, சிகிச்சை கிரியோதெரபி அல்லது எலெக்ட்ரோதெரபி மூலம் அந்த மருவை அழிப்பது அல்லது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பைத் தூண்டி விட்டு, அந்த வைரஸை எதிர்த்துப் போராட எதிர்மங்களை உற்பத்தி செய்ய வைப்பதில் கவனம் செலுத்துகிறது. இது,சாலிசிலிக் அமிலம் அல்லது நாள நாடா அல்லது மற்ற மருத்துவங்களின் உதவியோடு செய்யப்படுகிறது. மருக்கள் அழிக்கப்பட்டால், பின்பு எப்போதும் திரும்ப வரும் வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலான மருக்கள், உடல் அந்த வைரஸுக்கு எதிராக எதிர்மங்களை உற்பத்தி செய்வதால், ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் தாமாகவே மறைந்து விடும். ஆரோக்கியமான மக்களுக்கு, மருக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவதில்லை. மருக்கள் குணப்படுத்த கடினமானவைகளாக இருந்தாலும், பொதுவாக அவை எந்த ஒரு அச்சுறுத்தல்களையும் தருவதில்லை.