வைட்டமின் பி 12 குறைபாடு - Vitamin B12 Deficiency in Tamil

Dr. Anurag Shahi (AIIMS)MBBS,MD

May 12, 2019

July 31, 2020

வைட்டமின் பி 12 குறைபாடு
வைட்டமின் பி 12 குறைபாடு

வைட்டமின் பி 12 குறைபாடு என்றால் என்ன?

வைட்டமின் பி 12 என்பது சையனோகோபாலமின் எனவும் அழைக்கப்படுகிறது.உயிரணு வளர்சிதை மாற்றத்தில் குறிப்பாக டி.என்.ஏ தொகுப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தியில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.வைட்டமின் பி 12 வயிற்றில் இருந்து வெளியாகும் அகக் காரணி என்ற காரணியுடன் இணைந்த பிறகு சிறு குடலில் உறிஞ்சப்படுகிறது.வைட்டமின் பி 12 குறைபாட்டினால் அசாதாரண சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி ஏற்படுகிறது.இது மெகாலோபிளாஸ்டிக் இரத்தசோகைக்கு வழிவகுக்குகிறது.இதனைத் தவிர்த்து, வைட்டமின் பி 12 குறைபாடு நரம்பு நரம்புக்கணத்தாக்குகளின் பரிமாற்றத்தை தடைசெய்து மயிர்க்கால்கள், முதுகுத் தண்டு போன்ற பல திசுக்களை பாதிக்கிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இதன் ஆரம்ப கால அறிகுறிகள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன:

இதன் கடுமையான அறிகுறிகள் பின்வருமாறு:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இக்குறைபாடு ஏற்படுவதற்கான சில காரணங்கள் பின்வருமாறு:

  • குடலில் பி 12 அகத்துறிஞ்சாமைக்கு வழிவகுக்கும் வாழழி சோகை என்ற தன்னுடல் தாக்கு நிலைமை.
  • குடும்பத்தினரிடத்தில் ஏற்கனவே வாழழி சோகை இருத்தல்.
  • மீன், முட்டை, இறைச்சி, மற்றும் காளான்கள் போன்ற வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமை.
  • இன்சுலின் மற்றும் அமிலத்தன்மைக்கான மருந்துகள் வயிற்றில் அகக் காரணியின் போதுமான அளவு உற்பத்தியை தடுக்கிறது.
  • வயிறு அல்லது குடல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுதல்.
  • வயிற்று அழற்சிநோய் போன்ற குடல் சார்ந்த கடுமையான நோய்கள்.
  • புற்றுநோய்.
  • கருத்தரிப்பு.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

உடல் சார்ந்த அறிகுறிகளின் மதிப்பீடு மற்றும் நோய் சார்ந்த விரிவான வரலாற்றுடன் கூடிய பொது பரிசோதனை, இந்த நிலைமையை கண்டறிய உதவுகிறது.

இதற்கான இரத்த பரிசோதனைகளில் பின்வருவன அடங்கும்.

  • ஹீமோகுளோபின் அளவுகள் - குறைந்த ஹீமோகுளோபின் அளவு இரத்த சோகை இருப்பதைக் குறிக்கிறது.
  • வைட்டமின் பி 12 அளவுகள்.
  • இரத்த சிவப்பணுக்களின் படம் - இரத்த உயிரணுக்களின் அளவு பெரிதாக இருந்தால், அது குறைபாடு இருப்பதைக் குறிக்கிறது.
  • பி12 குறிக்காட்டிகளின் அளவீடு, அதாவது, சீரம் ஹோமோசிஸ்டீன் அல்லது மெத்தில் மலோனிக் அமிலம்.
  • வாழழி சோகையை கண்டறிய சில்லிங் சோதனை.

சிகிச்சை முறைகளில் பின்வருவன அடங்கும்.

  • வாய்வழியாக அல்லது ஊசி மூலமாக வைட்டமின் பி12 - ஐ கூடுதலாக சேர்த்தல்.
  • வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளை உங்கள் உணவுத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளுதல்.



மேற்கோள்கள்

  1. Fiona O’Leary,Samir Samman. Vitamin B12 in Health and Disease. Nutrients. 2010 Mar; 2(3): 299–316. PMID: 22254022
  2. Green R et al. Vitamin B12 deficiency . Nat Rev Dis Primers. 2017 Jun 29;3:17040. PMID: 28660890
  3. Oh R,Brown DL. Vitamin B12 deficiency. Am Fam Physician. 2003 Mar 1;67(5):979-86. PMID: 12643357
  4. Langan RC,Zawistoski KJ. Update on vitamin B12 deficiency. Am Fam Physician. 2011 Jun 15;83(12):1425-30. PMID: 21671542
  5. Wolfgang Herrmann et al. Causes and Early Diagnosis of Vitamin B12 Deficiency. Dtsch Arztebl Int. 2008 Oct; 105(40): 680–685. PMID: 19623286
  6. National Institutes of Health; Office of Dietary Supplements. [Internet]. U.S. Department of Health & Human Services; Vitamin B12.

வைட்டமின் பி 12 குறைபாடு டாக்டர்கள்

Dr. Narayanan N K Dr. Narayanan N K Endocrinology
16 Years of Experience
Dr. Tanmay Bharani Dr. Tanmay Bharani Endocrinology
15 Years of Experience
Dr. Sunil Kumar Mishra Dr. Sunil Kumar Mishra Endocrinology
23 Years of Experience
Dr. Parjeet Kaur Dr. Parjeet Kaur Endocrinology
19 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

வைட்டமின் பி 12 குறைபாடு க்கான மருந்துகள்

Medicines listed below are available for வைட்டமின் பி 12 குறைபாடு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for வைட்டமின் பி 12 குறைபாடு

Number of tests are available for வைட்டமின் பி 12 குறைபாடு. We have listed commonly prescribed tests below: