வைட்டமின் B1 குறைபாடு - Vitamin B1 deficiency in Tamil

Dr. Anurag Shahi (AIIMS)MBBS,MD

November 28, 2018

October 28, 2020

வைட்டமின் B1 குறைபாடு
வைட்டமின் B1 குறைபாடு

வைட்டமின் B1 குறைபாடு என்றால் என்ன?

வைட்டமின் B1, தையமின் என்றும் அழைக்கப்படுகிறது. இது நம் உடல் சரியாக செயல்படுவதற்கான ஒரு முக்கியமான வைட்டமின் ஆகும். வைட்டமின் B1 குறைபாடு சில பிரச்சனைகளை விளைவிக்கக்கூடும் அவற்றில் சில பிரச்சனைகள் உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடியது ஆகும்.

வைட்டமின் B1 குறைபாட்டின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?

பொதுவான அறிகுறிகள்

  • தையமின் குறைபாட்டால் ஏற்படும் நோயின் பெயர் பெரி பெரி. பெரி பெரி இரண்டு வகைப்படும் - வறண்ட பெரி பெரி மற்றும் நீர்ப்பசை பெரி பெரி.
  • வறண்ட பெரி பெரி நரம்புகளை பாதிக்கிறது.வறண்ட பெரி பெரி உள்ளவர்கள் கை கால் வலி மட்டும் சோர்வுடன் சேர்த்து கை கால் கூச்சம் மற்றும் கை கால் உணர்வின்மையை உணர்வார்கள்.
  • நீர்ப்பசை பெரி பெரி உள்ளவர்கள் இதயம் பெரிதாகுதல், மூச்சுத் திணறல், கால் வீக்கம் மற்றும் வேகமான இதயத்துடிப்பு போன்றவற்றை உணரலாம்.

மற்ற அறிகுறிகள்

  • இந்நோய் உள்ளவர்களுக்கு பசியின்மை மற்றும் எடை குறைவு உண்டாகலாம்.
  • அவர்களுக்கு மனக்குழப்பம், மறதி போன்ற மனநலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
  • மது அருந்துபவர்களுக்கு தையமின் குறைபாட்டால் வெர்னிக்கே-கோர்சாகோவ் சிண்ட்ரோம் ஏற்படலாம். இதனால் அவர்களுக்கு தசை பலவீனம் , இரட்டை பார்வை, நிலை தடுமாற்றம் ஏற்படலாம் மற்றும் நரம்புகள் ஒருங்கிணைந்து வேலை செய்யும் திறனை இழக்கலாம்.

நிரந்தர நரம்பு பிரச்சனை, நினைவற்ற நிலை மற்றும் இதய செயலிழப்பு ஆகியவை B1 குறைபாட்டால் ஏற்படும் மோசமான விளைவுகள் ஆகும்.

B1 குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்ன?

  • எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் போதுமான உணவு உட்கொள்ளாமை அல்லது உணவு உறிஞ்சப்படுதலில் ஏற்படும் பிரச்சனைகளே காரணம்.

சில காரணிகள் மனிதர்களை தையமின் குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளவர்களாக மாற்றுகிறது.

  • மது அருந்துதல் தையமின் உடலில் உறிஞ்சப்படுதலை குறைப்பதால் அது ஒரு முக்கிய காரணியாகும்.
  • சிறுநீரக நோயாளிகள் மற்றும் டியூரெடிக்ஸ் மாத்திரை எடுத்து கொள்பவர்களுக்கு தையமின் குறைபாடு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளது.
  • உணவுத்தரம் ஒரு முக்கிய காரணியாகும். உதாரணத்திற்கு அரிசியில் தையமின் அளவு குறைவாக இருப்பதால் உணவில் அரிசியை அதிகமாக சேர்த்துக்கொள்பவர்களுக்கு தையமின் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • புற்றுநோய் மற்றும் எச்ஐவி  நோயாளிகளுக்கு வைட்டமின் B1 குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதை எவ்வாறு கண்டறிந்து சிகிச்சை அளிப்பது?

அறிகுறிகள் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் மூலம் B1 குறைபாட்டை கண்டறியலாம்.

  • ரத்த அணுக்களில் தையமின் பைரோபாஸ்பேட் அளவை கண்டறிய சிறப்பு பரிசோதனை செய்யப்படும்.
  • தையமின் உட்கவர்தல் மற்றும் தைராய்டு வேலை செய்வதற்கு தேவையான என்சைம் அளவை கண்டறிய பரிசோதனைகள் செய்யப்படும்.

முதல்கட்ட சிகிச்சையில் வாய்வழி அல்லது நரம்புகளில் தையமின் அளிக்கப்படும். அதன் பிறகு நோய்க்கான அறிகுறிகள்  உடனடியாக குறைய ஆரம்பிக்கும்.

  • நரம்பு பிரச்சனைகள் சரியாவதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம். உடற்பயிற்சி மற்றும் சில மாதங்களுக்கு தையமின் அளிப்பதே முக்கியமான சிகிச்சை முறையாகும்.
  • ஊட்டச்சத்து நிறைந்த, சமச்சீரான உணவு உண்பது மற்றும் தையமின் அதிகம் உள்ள உணவையோ அல்லது மாத்திரையோ எடுத்துக்கொள்வது உடல் நிலையை மேம்படுத்த உதவும். தானியங்கள், இறைச்சி,பீன்ஸ் மற்றும் கொட்டைகள் போன்ற உணவுப்பொருட்களில் தையமின் அதிக அளவில் உள்ளது.



மேற்கோள்கள்

  1. Gibson GE, Hirsch JA, Fonzetti P, Jordan BD, Cirio RT, Elder J. Vitamin B1 (thiamine) and dementia. Ann N Y Acad Sci. 2016 Mar;1367(1):21-30. PMID: 26971083
  2. Chandrakumar A, Bhardwaj A, Jong GW. Review of thiamine deficiency disorders: Wernicke encephalopathy and Korsakoff psychosis. J Basic Clin Physiol Pharmacol. 2018 Oct 2;30(2):153-162. PMID: 30281514
  3. National institute of health. Thiamin. Office of dietary supplements; U.S. Department of Health & Human Services
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Thiamine
  5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Vitamin B

வைட்டமின் B1 குறைபாடு டாக்டர்கள்

Dr. Narayanan N K Dr. Narayanan N K Endocrinology
16 Years of Experience
Dr. Tanmay Bharani Dr. Tanmay Bharani Endocrinology
15 Years of Experience
Dr. Sunil Kumar Mishra Dr. Sunil Kumar Mishra Endocrinology
23 Years of Experience
Dr. Parjeet Kaur Dr. Parjeet Kaur Endocrinology
19 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

வைட்டமின் B1 குறைபாடு க்கான மருந்துகள்

Medicines listed below are available for வைட்டமின் B1 குறைபாடு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹149.63

Showing 1 to 0 of 1 entries