வெர்டிகோ என்றால் என்ன?
வெர்டிகோ என்பது ஒரு சுற்றல் உணர்வு, சமநிலை இழத்தல் அல்லது நிலை தவறுதல். மோட்டார் உணர்வுகள் பாதிக்கப்படும் போது வெர்டிகோ நிகழ்கிறது. இது புலன் செயல்பாட்டின் சமநிலையை பாதிக்கும் ஒரு கோளாறு, அசைவுகளை உணர்தல் மற்றும் பார்வை போன்ற தீவிரமான அடிப்படையான நோய் அல்லது குறைபாட்டுடன் இது தொடர்புடையது. வெர்டிகோ அனுபவம் உள்ளவர்கள் தலைசுற்றல் மற்றும் போலியான சுழலும் உணர்வு போன்றவற்றை உணருவார்கள்.
இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
வெர்டிகோ உடன் தொடர்புடைய முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்:
- காதிரைச்சல் (காதுகளில் ஒலித்தல்).
- காது கேளாமை.
- தலைசுற்றலின் போது குமட்டல்.
- சுவாச முறை மற்றும் இதய துடிப்பு மாற்றங்கள்.
- வியர்வை.
- நடக்க இயலாமை.
- உஷார்நிலை மாற்றங்கள்.
- அசாதாரணமான கண் அசைவுகள்.
- இரட்டை பார்வை.
- முகத்தில் ஆற்றலிழந்த நிலைமை.
- பேசுவதில் சிரமம்.
- கை அல்லது காலில் பலவீனம்.
முக்கிய காரணங்கள் யாவை?
வெர்டிகோ உண்டாவதற்கான காரணம் பின்வரும் சூழ்நிலைகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்:
- நீரிழிவு நோய்.
- தமனித் தடிப்பு.
- ஒற்றை தலைவலி.
- நரம்பியல் கோளாறுகள்.
- அளவுக்கு அதிகமான ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்துகள்.
- தலையில் காயம்.
- பக்கவாதம்.
- உட்செவி அழற்சி (உள் காதில் வீக்கம்).
- உள் காதில் ஓட்டை.
- புற்றுநோய் அல்லாத கட்டிகள்.
- வலிப்பு.
- மேனியரின் நோய்.
- இரத்தக் குழாய்களில் ஏற்படும் நோய்கள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
மருத்துவர், தலையின் சிடி ஸ்கேன் மற்றும் காந்த அதிர்வு இமேஜிங் (எம்.ஆர்.ஐ), எலெக்ட்ரோனிஸ்டாகுமோகிராபி (கண் அசைவுகளின் அளவீடு), இரத்த பரிசோதனைகள் மற்றும் மூளையின் மின் செயல்பாட்டை அளவிடும் எலெக்ட்ரோஎன்செபாலோகிராம் (இஇஜி) ஆகியவற்றை உத்தரவிடுவார். நீரிழிவு நோய், இதய நோய், அல்லது வேறு ஏதேனும் கோளாறினால் வெர்டிகோ உண்டாகிறதா என்று தெரிந்து கொள்ள மருத்துவ பின்னணியை மருத்துவர் ஆராய்வார்.
வெர்டிகோ உண்டாவதற்கான காரணத்தை கண்டறிந்த பின், அதற்கான சிகிச்சை கொடுக்கப்படும். வெர்டிகோவுக்கு பரிந்துரைக்கப்படும் பொதுவான சிகிச்சைகள்:
- கவலை எதிர்ப்பு மருந்துகள்.
- தசை தளர்த்திகள்.
- நடையை பலப்படுத்த உடற்பயிற்சிகள்.
- பழக்க வழக்க உடற்பயிற்சி.
- புலன் உணர்வு அமைப்புக்கான பயிற்சி.
- மேலும் சமநிலையடைய, நிலையான மற்றும் மாறும் தன்மையுடைய சமநிலை பயிற்சிகள்.
- கேனலித் மறுசீரமைப்பு சிகிச்சை (CRT) - இந்த சிகிச்சை பொதுவான வெர்டிகோ (தீங்கற்ற பராக்ஸிஸ்மல் தலைச்சுற்றல் நிலை) பிரச்சனைக்காக கொடுக்கப்படுகிறது.
- ஏரோபிக் கண்டிஷனிங் - தொடர்ச்சியான தாள இயக்கங்களால், நுரையீரல் மற்றும் இதய தசைகள் திறம்பட இரத்தத்தை பம்ப் செய்து தசைகள் மற்றும் உறுப்புகளுக்கு அதிக ஆக்ஸிஜன் வழங்கும் ஒருசிகிச்சை முறையாகும்.