சிறுநீர் அடங்காமை என்றால் என்ன?
சிறுநீர் அல்லது சிறுநீர்ப்பை, கட்டுப்பாட்டை இழந்து சிறுநீர் கசிவிற்கு வழிவகுப்பதே சிறுநீர் அடங்காமை என அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களிலும், குறிப்பாக பெண்களிடத்திலும் ஏற்படுகிறது. வயது அதிகரிப்பதுடன், சிறுநீர் அடங்காமைக்கான அபாயமும் அதிகரிக்கிறது.சிறுநீர்ப்பையிலிருக்கும் சுருக்கு தசைகளால் சிறுநீரின் ஓட்டத்தை கட்டுப்படுத்த முடியாதபோது இவ்வாறு நிகழ்கிறது. அவை அழுத்தம், அவசரம், வழிதல், கலப்பு, செயல்பாடு மற்றும் மொத்தமாக தற்கட்டுப்பாட்டையும் இழப்பது என பல்வேறு வகைப்படுகின்றன.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
சில பொதுவான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
- படுக்கையில் சிறுநீர் கழித்தல்.
- இடுப்பு மண்டலத்தில் அழுத்தத்தை உணர்தல்.
- கடுமையாக சிரிக்கும் போதோ அல்லது இருமும் போதோ சிறுநீர் கசிவு ஏற்படுதல்.
- சிறுநீர் சிறு சிறு துளிகளாக ஒழுகுதல்.
- கழிவறை பயன்படுத்திய பிறகும் முழுமையாக சிறுநீர் கழிக்காதது போன்ற உணர்ச்சி.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
சிறுநீர் அடங்காமை பல்வேறு காரணிகளால் ஏற்படுகின்றது அவை பின்வருமாறு:
- சிறுநீர்ப்பையின் உட்பூச்சி.ல் ஏற்படும் அழற்சி.
- ஸ்ட்ரோக்.
- புரோஸ்டேட்டின் ஈடுபாடு.
- சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பைகற்கள்.
- மலச்சிக்கல்.
- சிறுநீர்ப்பையில் அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய கட்டி.
- மது பழக்கம்.
- சிறுநீர் பாதை தொற்றுகள் (யூ.டி.ஐ.).
- செடேடிவ்ஸ்.
- தூக்க மாத்திரைகள்.
- தசை தளர்த்திகள்.
- கடுமையான பொருட்களை தூக்குதல்.
- பல ஸ்களீரோசிஸ் போன்ற நரம்பு கோளாறுகள்.
- அறுவை சிகிச்சை செய்யும் போதோ அல்லது வெளிப்புற அதிர்ச்சியினாலோ சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்தும் நரம்புகளில் உண்டாகும் காயம்.
- மன அழுத்தம் அல்லது பதட்டம்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
மருத்துவர் விரிவான மருத்துவ வரலாற்றை எடுத்துக் கொண்ட பிறகு, சாத்தியமான குறைபாடுகள் இருக்கின்றதா என நேரடி பரிசோதனை செய்து பார்க்கக் கூடும். மேற்கொள்ளக்கூடிய சில சோதனைகள் பின்வருமாறு:
- சிறுநீர்ச் சோதனை - நுண்ணோக்கி கொண்டு சிறுநீர் கலாச்சாரத்தை பரிசோதித்தல்.
- மீதமுள்ள சிறுநீர் பரிசோதனை(பிவிஆர்): சிறுநீர் கழித்த பிறகு சிறுநீர்ப்பையில் மீதமுள்ள சிறுநீரின் அளவை அடையாளம் காண உதவும் சோதனை.
- ஆட்டோ இம்யூன் ஆன்டிபாடிகள் இருக்கிறதா என்பதை பார்க்க இரத்த பரிசோதனைகள், மேலும் பல சோதனைகள்.
- சிஸ்டோகிராம் - இது சிறுநீர்ப்பையை சோதிக்கும் எக்ஸ்-கதிர்களின் ஒரு வகை சோதனையாகும்.
- இடுப்பில் எடுக்கப்படும் அல்ட்ராசவுண்ட்
- யூரோடைனமிக் சோதனை - இந்த சோதனை சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக சுருக்கு தசைகள் தாங்கக்கூடிய அழுத்தத்தின் அளவை மதிப்பிட உதவுகிறது.
- கிரிஸ்டோஸ்கோபி.
இந்நிலை கண்டறிந்த பின், நோயாளிக்கு பின்வரும் பல்வேறு சிகிச்சை முறைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன:
- சிறுநீரை சேகரிக்க சிறுநீர் வடிகாலமைப்பு கொண்ட பைகளை உபயோகப்படுத்தலாம்.
- பேட்கள், பேண்ட்டி லைனர்கள், வயது முதிர்ந்தவர்கள் பயன்படுத்தும் டயப்பர்கள் போன்ற உறிஞ்சும் தன்மைக்கொண்ட பொருட்களை பயன்படுத்தலாம்.
- சிறுநீர் கசிவினால் தோல் சிவந்திருத்தல் மற்றும் தோல் ராஷஸ் போன்றவைகளை குறைக்க ஆன்டிமைக்ரோபியல் சுத்தப்படுத்திகளை பயன்படுத்தலாம்.
- இடைவிட்ட வடிகுழாய் - இம்முறையில் யூரித்ராவில் செருகப்பட்ட கேதேட்டரில் சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. கேதேட்டர்/வடிகுழாய் என்பது சிறுநீர்ப்பையில் பொருத்தப்படும் வளையக்கூடிய குழாய் ஆகும். இவை டெஃப்லான் அல்லது சிலிக்கான் பூச்சினால் உருவாக்கப்படுகின்றன. வடிகுழாய் செருகப்பட்டவுடன், வடிகுழாய் கீழே விழுகாதப்படி இருக்க பலூன் காற்று நிரப்பி உப்பப்படுகிறது.
- ஆணுறை அல்லது டெக்சாஸ் கேதேட்டர் என அழைக்கப்படும் வெளிப்புற சேகரிப்பு அமைப்புகள் ஆண்களின் ஆண்குறியை சுற்றி வைக்கப்படுகிறது.
- படுக்கை பக்கம் இருக்கும் கோக்காலி அல்லது கோக்காலி சீட்கள், படுக்கை தட்டுகள், யூரினல் போன்ற கழிவறை மாற்றேற்பாடுகளை பயன்படுத்தலாம்.
- கீஜெல் உடற்பயிற்சிகள் போன்ற இடுப்பு தசைக்கான பயிற்சிகள் கூட உதவியாக இருக்கும்.
- டைம்டு வாய்டிங்/ நேர இடைவெளியின் பிறகு சிறுநீரை வெளியேற்றும் முறை: இந்த முறையில், சிறுநீர்கழிப்பதற்காக கொடுக்க பட்டிருக்கும் நேரதினுள் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை பின்பற்றுவதால் இது சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.
- உயிர் பின்னூட்டம் - இந்த சிகிச்சை முறை ஒருவரை உடல் அறிகுறிகளை அறிந்துகொள்வதற்கு உதவுகிறது. இது சிறுநீர்ப்பை மற்றும் யூரித்ராவின் தசை கட்டுப்பாட்டினை மீண்டும் பெறுவதற்கு பயன்படுகிறது.
- காஃபின், மது மற்றும் புகையிலை போன்றவைகளை உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.