சிறுநீர்க்குழாய் புற்றுநோய் என்றால் என்ன?
சிறுநீர்ப்பைக்குழாயில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற மற்றும் ஒழுங்கற்ற வளர்ச்சியானது இந்த சிறுநீர்க்குழாய் புற்றுநோயினை குறிக்கிறது. இந்நோய் மிகவும் அரிதாக ஏற்படும் நோயாகும். பொதுவாக இந்நோயினால் ஆண்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் ஆகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்த சிறுநீர்க்குழாய் புற்றுநோய் ஏற்பட சில பொதுவான தாக்கங்கள் மற்றும் காரணங்கள் பின்வருமாறு:
- சிறுநீர்ப்பைக்குழாயின் மீது புடைப்பு அல்லது வீக்கம்.
- சிறுநீரில் இரத்தம்.
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
- குறைவான சிறுநீரக ஓட்டம்.
- சிறுநீர் கழித்தலின் போது தொந்தரவு அல்லது வலி.
- குறைவான சிறுநீர் வெளியேற்றம்.
- இரத்த கறை படிந்த சிறுநீர் வெளியேற்றம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இந்த புற்றுநோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை. இருப்பினும், இந்நோய் ஏற்பட சில காரணங்கள் பின்வருமாறு:
- சிறுநீர்க்குழாய்சார் நாளச்சுவர்ப் பிதுக்கம்.
- நாள்பட்ட சிறுநீர் பாதை நோய் தொற்று.
- மனித 'பாபிலோமா வைரஸ்' (ஹெச்பிவி) தொற்று.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
கட்டிகளின் சாத்திய கூறுகள் மற்றும் அசாதரண அறிகுறிகளை அறிய உடல் ரீதியாக மருத்துவர் பரிசோதிப்பார். நோயாளியின் உடல்நிலை பற்றிய முழு அறிக்கை முழுமையாக சேகரிக்கப்படுகிறது. இந்நோயினை கண்டறிய மேற்கொள்ளப்படும் சில சோதனைகள் பின்வருமாறு:
- இடுப்புப் பகுதியினை சுற்றி சோதனை - யோனி, கருப்பை வாய், கருப்பைக்குழாய், சூலகங்கள் மற்றும் ஆசன வாய் போன்ற குறைபாடுகளை கண்டறிய சோதிக்கப்படுகின்றன.
- சிறுநீர்ப் பகுப்பாய்வு - இந்த பகுப்பாய்வு சிறுநீரில் சர்க்கரை, புரதம், இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் சிறுநீரின் நிறம் ஆகியவற்றை பரிசோதிக்க எடுக்கப்படுகிறது.
- டிஜிட்டல் மல குடல் சார்ந்த பரிசோதனை.
- சிறுநீரக உடல்அணு அமைப்பியல்- பாக்டீரியா தொற்றினை சோதிக்க மைக்ரோஸ்கோபிக் சிறுநீரக சோதனை.
- முழுமையான இரத்த அணுக்களின் எண்ணிக்கை - இரத்த சிவப்பணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள், சிறு தட்டணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் விகிதங்கள் ஆகியவை இம்முறையில் சரிபார்க்கப்படுகின்றன.
- இரத்தம் சார்ந்த வேதியியல் ஆய்வுகள்.
- சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ மற்றும் அல்ட்ராசவுண்ட்.
- யுரெட்ரோஸ்கோப்பி - சிறுநீர்க்குழாய் மற்றும் சீறுநீரகம் அமைந்துள்ள இடுப்பெலும்பு பகுதியின் உள்ளே ஏற்படும் அசாதாரண நிலையை முறையாக காண ஒரு கேமராவைப் பயன்படுத்துதல்.
நோயறிதலுக்குப் பின், இந்நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் பல்வேறு சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- அறுவைசிகிச்சை.
- திசுப்பரிசோதனை.
- ரேடியோதெரபி - இது காமா மற்றும் பிற கதிர்களை பயன்படுத்தி புற்றுநோய் அல்லது கட்டி செல்களை அளிப்பதற்கு உதவுகிறது.
- கீமோதெரபி-இது புற்று நோயை உருவாக்க கூடிய செல்களை மேலும் வளர விடாமலும், அவை பல்கி பெருக்காமலும் அழிக்கிறது அல்லது சிறப்பு மருந்துகளை பயன்படுத்தி அதன் பரவல் ஏற்பட அனுமதிப்பதில்லை.
- செயல்நிலை கண்காணிப்பு - செயல்நிலை கண்காணிப்பு என்பது சோதனை முடிவுகளில் முன்னேற்றங்கள் ஏதும் ஏற்படாத வரை இதற்கென்று சிகிச்சைகள் ஏதும் வழங்கப்படமாட்டாது. சோதனைகள் மற்றும் ஆய்வுகள் ஒரு வழக்கமான கால அட்டவணையின் கீழ் மேற்கொள்ளப்படும்.