மேல் காற்றுக்குழாய் அடைப்பு என்றால் என்ன?
மேல் காற்றுப்பாதையில் ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்படும் அடைப்பு, மேல் காற்றுக்குழாய் அடைப்பு என அழைக்கப்படுகிறது.மூச்சுவிட ஏதுவான தளத்தில் அதாவது மூக்கிற்கும், குரல்வளைக்கும் இடையே உள்ள பகுதி (குரல் பெட்டி) குறுகுதல் அல்லது அடைப்பதால் இந்த மேல் காற்றுக்குழாய் அடைப்பு ஏற்படுகிறது. இது தொண்டைப்பகுதி, மூச்சுக்குழாய் மற்றும் குரல் பெட்டியை பாதிக்கிறது. மேல் காற்றுக்குழாய் அடைப்பு சுவாசிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மேல் காற்றுக்குழாய் அடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- மூச்சுத்திணறல்.
- திடீர் மூச்சடைப்பு.
- சுவாசிப்பதில் சிரமம்.
- இருட்டடிப்பு அல்லது மயக்கம்.
- சயனோசிஸ் (சருமம் நீல நிறமாக இருத்தல்).
- மன குழப்பம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மேல் காற்றுக்குழாய் அடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- ரசாயனங்களால் ஏற்படும் எதிர்வினைகள் அல்லது தீக்காயம்.
- வேர்கடலை, தேனீ கொட்டுதல் அல்லது மருந்துகளைப் பயன்படுத்துதல், எடுத்துக்காட்டாக, ஆண்டிபயாடிக்குகள் (பென்சிலின்) போன்றவற்றின் காரணமாக ஏற்படும் ஒவ்வாமை எதிர்விளைவுகள்.
- மேல் மூச்சு சார்ந்த குழாய்களில் எங்கேனும் காயம் ஏற்படுதல்.
- தீவிர ஆஸ்துமா தாக்கம்.
- அரளிவிதை நச்சு.
- எப்பிகுளோடிடிஸ் (எப்பிகுளோடிஸ் பாக்டீரியா தொற்று).
- குரல் வளையில் பிரச்சனை.
- நினைவிழந்து இருத்தல் அல்லது வெளியேறும் போது, நாக்கு வெளி தொங்குதல் மற்றும் மூச்சுக்குழாயை அடைத்தல்.
- நோய்த்தொற்றுகள்.
- தொண்டை புற்றுநோய்.
- தொண்டைக் கரகரப்பு (மூச்சு விடுதல் சம்பந்தமான நோய்).
- ரெட்ரோஃபாரன்ஜியல் அப்சஸ் (தொண்டைக் குழாயின் பின்புறத்தில் சீழ் பிடித்தல்).
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மேல் காற்றுக்குழாய் அடைப்பு சோதனை செய்ய மருத்துவர் உடல் பரிசோதனையை மேற்கொள்வார். மேல் காற்றுக்குழாய் அடைப்பு ஏற்படுவதற்கான காரணி ஏதெனும் உள்ளதா என அறிய நோயாளியின் மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்வார். சில சமயங்களில், இந்த மேல் காற்றுக்குழாய் அடைப்பு ஏற்படுவதை தீர்மானிக்க லேரிங்கோஸ்கோபி, ப்ரோன்சோஸ்கோபி அல்லது எக்ஸ் ரே போன்ற சோதனை முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
காற்றுப்பாதையில் அடைப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அடிப்படையாகக் கொண்டு மேல் காற்றுக்குழாய் அடைப்பு நோய்க்கான சிகிச்சை முறைக்கு பின்வரும் வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன:
- சுவாசிப்பதற்கு ஏதுவாக தொண்டை பகுதியின் வழியாக காற்றுக்குழலினுள் மூச்சு பெருங்குழலுள் குழாய் உட்செலுத்தப்படுகிறது.
- டிராகேஸ்டோமி அல்லது கிரிகோதைரோட்டோமி: கழுத்தின் ஒரு பகுதி திறக்கப்பட்டு காற்றுப்பாதைக்குள் செல்வதற்கான ஒரு செயல் முறை.
- ஏதேனும் பொருளோ அல்லது உணவுப்பொருளோ சுவாசப்பாதையில் சிக்கியிருக்கலாம் மற்றும் தடையை ஏற்படுத்தும் என்று நம்புகிற வகையில் மார்பில் அழுத்தம் தருவது, கைகளால் வெளியில் எடுத்தல் , அல்லது வயிற்றுப்பகுதியை அழுத்தி உந்துதல் ஆகியவை அப்பொருளை அகற்றுவதற்காக செய்யப்படுகின்றன.
மருத்துவரின் மதிப்பீடு, காற்றுப்பாதையில் அடைப்பு ஏற்படுவதற்கான காரணி மற்றும் உயர்நிலை காற்றுப்பாதை சிகிச்சை முறைகள் செய்ய தேவையான உதவி ஆகியவற்றின் அடிப்படையில் இந்நோய்க்கான சிகிச்சை முறை தேர்வு செய்யப்படுகிறது.