டூலரீமியா நோய் என்றால் என்ன?
டூலரீமியா நோய் என்பது விலங்குகளை தொடுவதன் மூலம் மனிதனுக்கு பரவும் ஒரு வகை நுண்ணுயிர் (பாக்டீரியல்) நோய்த்தொற்றாகும். இது மிகவும் அரிதான ஒரு நோய், ஆனால் அநேகமாக வடஅமெரிக்காவிலும் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளிலும் இந்த தோற்று உள்ளதாக தகவல் பதிவாகி உள்ளது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
டூலரீமியா நோயின் அறிகுறிகள் பின்வருமாறு:
- காய்ச்சல்.
- வியர்த்தல்.
- கண் அரித்தல்.
- தலை வலி.
- தசைகளில் வலி.
- மூட்டு வலி.
- மூச்சு விடுதலில் சிரமம்.
- உடல் எடை குறைதல்.
- நாளடைவில் புண்ணாக மாறும் சிகப்பு புள்ளிகள்.
- தொலில் சீழ்ப்பண்.
- வாயில் சீழ்ப்பண்.
- கழுத்தின் நிணநீர்ச்சுரப்பியின் வீக்கம்.
அறிகுறிகள் நுண்ணுயிரிக்கு வெளிப்பட்ட 3-5 நாட்களுக்குப் பின் துவங்கும்.
நோய்தாக்குதலுக்கான முக்கியக் காரணங்கள் என்ன?
டூலரீமியா நோயை ஏற்படுத்தும் முதன்மைக் காரணம் ஃப்ரான்சிசெல்லா டுலாரென்சிஸ் எனப்படும் நுண்ணுயிரி ஆகும். இந்நுண்ணுயிரி காடார்ந்த கொறித்துண்ணிகளில் இருப்பவை.
நோய்த்தொற்றுள்ள விலங்கு கடித்தாலோ அல்லது உண்ணிகள், கொசுக்கள், அல்லது குதிரை ஈக்கள் மூலமாகவோ மனிதனுக்கு தொற்றலாம்.
இந்நுண்ணுயிரி உள்ள மண் துகளை சுவாசிப்பதன் மூலமாகவும் தொற்று ஏற்படலாம்.
நோய்த்தொற்றுள்ள விலங்கு நேரடியாக உடல் மீது படுவதன் மூலமாகவும், இறந்த உடலைக் கையாள்வதன் மூலமாகவும் தோற்று வரக்கூடும்.
நோய்த்தொற்றுள்ள இறைச்சியை சமைக்காமல்/வேகவைக்காமல் உட்கொள்ளுதலும் தொற்றை பரப்பும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
டூலரீமியா நோயின் அறிகுறிகள் வேறு பொதுவான நோய்களின் அறிகுறிகளுடன் ஒத்துப்போவதால் இதனைக் கண்டறிதல் கடினமாகிறது. எனினும் இரத்த பரிசோதனை மற்றும் மார்பக எக்ஸ்-கதிர்கள் சோதனை மூலம் டூலரீமியா நோயை குறிப்பிட்டு கண்டறியலாம். கொறித்துண்ணிகளை கையாண்ட வரலாறு மற்றும் நேரடி உடல் பரிசோதனை மூலம் இதனைக் கண்டறியலாம்.
நோய் இருப்பதை உறுதி செய்த பிறகு, சிகிச்சை முறையாக நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். டூலரீமியா நோயின் சிகிச்சையில் பொதுவாக பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் பின்வருமாறு:
- ஸ்ட்ரெப்டோமைசின்.
- ஜென்டாமைசின்.
- சிப்ரோபிளாக்சசின்.
அறிகுறிகளின் வீரியத்தை பொறுத்து சிகிச்சை மூன்று வாரங்கள் வரை நீடிக்கலாம்.
விலங்குகளை கையாளும் போது அல்லது மண்ணை கையாளும் போது கையுறை அணிவதன் மூலம் மற்றும் நான்கு சமைக்கப்பட்ட இறைச்சியை உண்பதன் மூலம் டூலரீமியா நோயினை தடுக்கலாம்.
டூலரீமியாஒரு குணப்படுத்தக்கூடிய நோய் எனினும் கண்டறியப்படாவிட்டால் நிமோனியா மற்றும் எலும்பு நோய்த்தொற்று போன்ற விளைவுகள் ஏற்படலாம்.