தைராய்டு புற்றுநோய் என்றால் என்ன?
கழுத்தின் முன் பகுதியில் உள்ள குரல்வளையின் கீழே இருக்கும் தைராய்டு சுரப்பியில் உண்டாகும் புற்றுநோயே தைராய்டு புற்றுநோய் ஆகும். தைராய்டு சுரப்பி உடலின் பல்வேறு வளர்சிதை செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை கொண்டது. சுரப்பியிலிருந்து உற்பத்தியாகும் கட்டுப்பாடற்ற உயிரணுகளின் வளர்ச்சியின் விளைவால் உண்டாகும் பெருந்திரள் உருவாக்கமோ அல்லது கட்டியோ தைராய்டு புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கின்றது.
இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
தைராய்டு புற்றுநோய் ஏற்பட்ட எல்லா வழக்குகளும் ஆரம்பத்திலிருந்தே அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை; எனினும், தைராய்டு புற்றுநோயின் மிக பொதுவான ஆரம்பக்கட்ட அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- கழுத்தின் முன்பகுதியில் ஏற்படும் கட்டி (பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காணும் படி தோன்றுவதில்லை).
- விழுங்குவதில் அல்லது மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம்.
- குரல் கரகரப்பு.
- தொண்டை அல்லது கழுத்து பகுதியில் ஏற்படும் வலி மற்றும் இருமல்.
- முடி உதிர்தல்.
- பசியிழப்பு மற்றும் எடை இழப்பு.
- தொண்டைப் பகுதியில் ஏற்படும் வீக்கம்.
- வியர்வை.
- வெப்ப பருவநிலைக்கான சகிப்புத்தன்மையின்மை.
- மாதவிடாயில் ஏற்படும் ஒழுங்கின்மை.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
தைராய்டு புற்றுநோய் வளர்ச்சியடைதளுக்கு மரபுவழி பரிமாற்றத்தால் ஏற்படும் சில காரணிகளினாலோ அல்லது மரபணுக்களே காரணிகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது; இருப்பினும், தைராய்டு புற்றுநோயை விளைவிக்கும் முக்கியக் காரணி இன்னும் அறியப்படவில்லை. தைராய்டு புற்றுநோயுடைய எல்லா வழக்குகளிலிருந்தும், தைராய்டு புற்றுநோய்க்கான காரணிகள் அல்லது அதற்கு வழிவகுக்கக்கூடிய மிகப்பொதுவான பல காரணிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
ஆன்கோஜீன்கள் மற்றும் டியூமர் கட்டுப்படுத்தும் மரபணுக்களின் இடையே ஏற்படும் சமநிலையின்மை ஒரு முக்கிய காரணியாகும். ஆன்கோஜீன்கள், மனித உடலில் புற்றுநோய் உயிரணுக்கள் வளர்வதற்கான பொறுப்பாகும், இத்தகைய வளர்ச்சியை மெதுவாகக் குறைக்கவும் அல்லது கட்டியின் வளர்ச்சியை தடுக்கவும் புற்றுநோயுடைய உயிரணுக்களை சரியான நேரத்தில் அழிக்கவும் டியூமர் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் உதவுகின்றன.
தைராய்டு புற்றுநோயின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் பிற காரணிகள்:
- உடல் பருமன்.
- தைராய்டு புற்றுநோய் கொண்ட குடும்ப பின்னணி.
- கதிர்வீச்சுக்கு உட்படுதல்.
- மரபுவழி நிலையான குடும்ப ஆடெனோமாட்டஸ் பாலிபோசிஸ்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
ஒருவருக்கு தைராய்டு புற்றுநோய் வளர்ச்சிக்கான அறிகுறிகள்அல்லது அடையாளங்கள் புலப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்திப்பது அவசியம். மருத்துவர் தைராய்டு புற்றுநோய்கான சாத்திய கூறுகள் மற்றும் அதன் உறுதியான காரணத்தை கண்டறிய உதவும் சில பரிசோதனைகளுக்கு உத்தரவிடலாம். இந்த சோதனைகளில் பின்வருவன அடங்கும்:
- இரத்தப் பரிசோதனை - இரத்த பரிசோதனை என்பது தைராய்டு செயல்பாடு பரிசோதனை என்றும் அறியப்படுகின்றது, இது இரத்த ஓட்டத்தில் இருக்கும் தைராய்டு ஹார்மோன்களின் அசாதாரண அளவுகளை சோதிக்க செய்யப்படுகிறது. புள்ளிகளின் அளவு அதிகரித்து இருப்பது தைராய்டு புற்றுநோயிக்கான சாத்தியமான நிலையை குறிக்கின்றது.
- திசுப்பரிசோதனை.
- எம்ஆர்ஐ ஸ்கேன்.
- சிடி ஸ்கேன்.
தைராய்டு புற்றுநோயின் வழக்கு என தீர்மானிக்கும்போது, மருத்துவர்கள் புற்றுநோயின் நிலையை நிலைப்படுத்துவதோடு (புற்றுநோயின் தீவிரத்தன்மை மற்றும் அளவு நிர்ணயம்) அதற்கு தகுந்த சிகிச்சையை வழங்கக்கூடும். தைராய்டு புற்றுநோயின் வழக்குகளில் உபயோகப்படுத்தும் சில அடிப்படை மற்றும் மிகவும் பொதுவான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- கதிரியக்க அயோடின் சிகிச்சை.
- தைராய்டெக்டமி - தைராய்டின் பகுதியை அல்லது முழுவதுமாக அகற்றும் அறுவை சிகிச்சை.
- ரேடியோதெரபி.
- கீமோதெரபி.