தசை வலிப்பு (டெட்டானி) என்றால் என்ன?
டெட்டானி என்பது அறிகுறிகளின் குழுவாகும், இது உடல் தசைகளில் வலிமிகுந்த பிடிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. இந்நிலை கால்சியத்தின் குறைந்த அளவைக் கொண்டிருக்கும் ஹைப்போபராதிராய்டிசம் போன்ற எண்டோகிரைன் கோளாறுகளுடன் தொடர்புடையது. எனவே குறைவான கால்சியம் அளவு டெட்டானிக்கு வழிவகுக்கக்கூடும்.
இதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
டெட்டானியுடன் தொடர்புடைய முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:
- கட்டுப்பாடற்ற மற்றும் வலிமிகுந்த தசைப்பிடிப்புகள்.
- தசை இழுத்துக்கொள்தல்.
- வலிப்பு தாக்கங்கள்.
- உணர்வு நிலையின் குறைந்த அளவு.
டெட்டானியுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடிய கூடுதல் அறிகுறிகள் பின்வருமாறு:
- சோர்வு மற்றும் பொதுப்படையான பலவீனம்.
- தசைகளில் ஏற்படும் வலி.
- தலைவலி.
- பதட்டம் மற்றும் கவலை.
- வறட்சியான தோல்.
- திட்டுதிட்டான முடி இழப்பு.
- நொறுங்கும் நகங்கள்.
- குழந்தைகளின் பற்களில் ஏற்படும் முறையான வளர்ச்சியின்மை மற்றும் ஒழுங்கின்மை.
- அதிகரித்திருக்கும் டென்டல் கேவிட்டிகள்.
குரல்வளை மற்றும் மூச்சுக்குழல்களில் ஏற்படும் தசைப்பிடிப்புக்களே டெட்டானியைச் சார்ந்த மிகவும் மோசமான அறிகுறிகளாகும்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
டெட்டானியின் காரணங்கள் பின்வருமாறு:
- குறைந்த கால்சியம் அளவுகள் (ஹைபோகல்கேமியா).
- குறைந்த மெக்னீசியம் அளவுகள் (ஹைப்போமக்னெஸ்மியா).
- குறைந்த பொட்டாசியம் அளவு (ஹைபோகலேமியா).
- உடலில் ஏற்படும் ஆசிட்-பேஸ் சமநிலை இழப்பு (அல்கலோசஸ்).
பொதுவாக, பாராதைராய்ட் ஹார்மோன்களின் குறைந்த அளவுகள் அல்லது பாராதைராய்ட் ஹார்மோன் அகற்றப்படுத்தல் அல்லது பாராதைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் காயம் போன்றவை டெட்டானியின் முக்கிய காரண காரணிகளான குறைந்த கால்சியம் அளவுகள் மற்றும் அல்கலோசஸ் போன்றவைகளுக்கு வழிவகுக்கின்றது.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
பொதுவாக இந்நிலைக்கான நோய்கண்டறிதல் நோயாளி எதிர்கொள்ளும் அறிகுறிகளைப்பற்றி விசாரிப்பதிலேயே துவங்கும். சீரம் எலக்ட்ரோலைட்கள், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அளவுகளை சரிபார்க்கவும் நோயறிதலை உறுதி செய்யவும் இரத்த பரிசோதனையை மேற்கொள்ள மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
முதன்மையான காரணியாக கால்சியம் குறைபாடு இருக்கும் பட்சத்தில், 100 முதல் 200 மில்லிகிராம் என்ற அளவில் அடிப்படையான கால்சியம் வடிவில் கால்சியம் சப்ளிமென்ட்டேஷனை நரம்புவழியாக செலுத்துதலே சிறந்த சிகிச்சை ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்நிலைக்கு சிகிச்சை அளிக்கும் போது உடலில் கால்சியம் உறிஞ்சப்படுதளுக்காக கால்சியதுடன் வைட்டமின் டி செலுத்துதல் அவசியம். மெக்னீசியம் பற்றாக்குறையால் தூண்டப்பட்ட டெட்டானிஸ் வழக்குகளுக்கு, மெக்னீசியம் சப்ளிமென்ட்டேஷன் தேவைப்படுகின்றது. எனவே இதற்கான தெரபி டெட்டானியின் அடிப்படை காரணத்தை சார்ந்துள்ளது.