டெட்டனஸ் என்றால் என்ன?
டெட்டனஸ் அல்லது லாக்ஜா என்பது புதிதாக காயம் ஏற்படும் போதோ அல்லது திறந்த காயத்திலோ உண்டாகும் பாக்டீரியா தொற்றினால் வளர்ச்சியடையக் கூடிய நரம்பியல் நிலை, இது கிளஸ்டிரிடியம் டெட்டானி என்றும் அழைக்கப்படுகிறது.
அதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் என்ன?
தாடை தசைகளில் ஏற்படும் விறைப்பே டெட்டனஸின் முக்கிய அறிகுறியாகும், எனவே அதற்கு லாக்ஜா என்றும் குறிப்பிடப்படுகிறது. காயம் மற்றும் தசைகளை சுற்றி வலியும் காணக்கூடும். டெட்டனஸின் மற்ற முக்கியத்துவம் வாய்ந்த அறிகுறிகள் பின்வருமாறு:
- வயிற்றுப்போக்கு.
- உயர் உடல் வெப்பநிலை.
- தலைவலி மற்றும் வியர்வை.
- அதிர்வினால் ஏற்படும் நடுக்கம் மற்றும் தசைகள் இழுத்துக்கொள்தல்.
- விழுங்குதலில் உண்டாகும் சிரமம்.
- உயர் இரத்த அழுத்தம்.
- அதிகரித்த இதய துடிப்பு.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
கிளஸ்டிரிடியம் டெட்டானி பாக்டீரியாவிலிருந்து வெளிப்படும் நச்சுகளினால் டெட்டனஸ் ஏற்படுகின்றது. இந்த பாக்டீரியாக்ககளால் அவை உயிர்வாழும் உடலுக்கு வெளியே கணிசமான நேரத்திற்கு உயிருடன் இருக்கமுடியும். அவைகள் மண்ணில் அல்லது விலங்குகளின் சாணத்திலும் உயிர் வாழும். இந்த பாக்டீரியாக்கள் மனித உடலில் வெட்டு அல்லது காயத்தின் மூலம் நுழைவதோடு, பொதுவாக 3 முதல் 21 நாட்களுக்கு விரைவான விகிதத்தில் பெருகக்கூடும். இவை வெளியிடும் நச்சு, நரம்புகளை பாதிப்பதோடு அதன் பண்பின் அறிகுறிகளுக்கு வழிவகுக்கக்கூடியது.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
ஒருவருக்கு மேல் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏற்பட்டாலோ அல்லது அண்மையில் ஏற்பட்ட வெட்டு அல்லது நெருப்பு காயத்திற்கு பிறகு திடீரென தசை பிடிப்பை எதிர்கொள்ள நேர்ந்தாலோ மருத்துவர் டெட்டனஸ்க்கான சாத்தியத்தை கருத்தில் கொண்டு பரிசோதனைகளை மேற்கொள்வார். மேலும், மருத்துவர் நோயாளி டெட்டனஸ் தடுப்பூசியை முன்பே போட்டிருக்கிறாரா அல்லது டெட்டனஸ் பூஸ்டர் ஷாட்டை உட்செலுத்திக்கொள்ள தாமதமாக வந்திருக்கிறாரா என்பதை கேட்டு அறிந்துகொள்ள நேரிடும். டெட்டனஸ் நோயறிதலை உறுதிசெய்வதற்கான உறுதியான சோதனைகள் அல்லது டெஸ்ட்கள் இல்லையென்பதால், இதன் அறிகுறிகள் மற்றும் நோய்எதிர்ப்புத் திறனூட்டலின் வரலாறு ஆகியவற்றின் அடிப்படையிலேயே சிகிச்சையளிக்கப்படும்.
தொற்றுநோய் வளர்ச்சிக்கு எதிராக காயத்திற்கேற்ற முறையான பராமரிப்பு மற்றும் டெட்டனஸ் தடுப்பூசி வழங்குதல் ஆகிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்தல் அவசியம். டெட்டனஸ் என்பது உடனடி மருத்துவமனை சேர்க்கை மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சையை வேண்டுகிற அவசர மருத்துவ சிகிச்சை நிலையாகும். ஒருவர் பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்டால், டெட்டனஸ் இம்யூனோகுளோபலின் (பாக்டீரியாவைக் கொல்லும் ஆன்டிபாடிகள்) மற்றும் பென்சிலின் போன்ற மருந்துகளை கொண்ட ஆன்டிபயாடிக்கள் மற்றும் தசை தளர்த்திகள் போன்றவைகள் அளிக்கப்பட வேண்டும். கடுமையான நோய்த்தாக்கங்கள் ஏற்படும் வழக்குகளில், ஒருவர் சுவாசிப்பதற்கு உதவ வெண்டிலேட்டரின் ஆதரவு தேவைப்படலாம்.