விரைச்சிரை வீக்கம் - Testicular Swelling in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

May 14, 2019

March 06, 2020

விரைச்சிரை வீக்கம்
விரைச்சிரை வீக்கம்

விரைச்சிரை வீக்கம் என்றால் என்ன?

விரைகள் என்பவை விரைப்பை என்னும் பைக்குள் அமைந்திருக்கும் ஆண்களின் பால் உறுப்புகள் ஆகும். இதன் முக்கிய செயல்பாடு விந்தணு உருவாக்குதலும் டெஸ்டோஸ்ட்ரோன் என்னும் ஹார்மோன்/இயக்குநீர் உற்பத்தியும் ஆகும். விரைச்சிரை வீக்கம் என்பது மிகுந்த வலி உண்டாக்கும் ஒரு நிலை ஆகும். இது காயம், நோய்த்தொற்று அல்லது விரைகள் முறுக்கப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் உண்டாகலாம். விரை வீக்கத்தை ஒருபோதும் உதாசீனப்படுத்த கூடாது. இந்த நிலைக்கு உடனடி மருத்துவ உதவி பெற வேண்டும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

விரைச்சிரை வீக்கம், மிகுந்த வலியுடனான பெரிதான விரைப்பையை கொண்டு காணப்படும். வயிறு-தொடை இணைவிடத்தில் சிவத்தலும் எப்பொழுதும் கனமாக கீழிழுக்கும் உணர்வும் இருக்கலாம். சில ஆண்கள் விந்துடன் இரத்தம் வெளியேறுவதையும் சிலர் காணலாம். வீக்கத்துடன் நோய்த்தொற்று இருப்பின் காய்ச்சல், சிறுநீர் கழிக்கையில் வலி மற்றும் உடல் நலக்குறைவு ஆகிய அறிகுறிகள் காணப்படும்.

நோய்தாக்குதலுக்கான முக்கியக் காரணங்கள் என்ன?

விரைச்சிரை வீக்கம் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் பொதுவானவை பின்வருமாறு:

  • நேரடி காயம்.
  • பால்வழிபரவும் நோய்களால் ஏற்படும் நுண்ணுயிர் (பாக்டீரியல்) நோய்த்தொற்று.
  • விரையழற்சி எனப்படும் வீங்கிய விரைகள்.
  • எபிடிடைமிடிஸ் /விரைமேல் நாள அழற்சி (விரைகளில் இருந்து விந்தணு சுமந்து செல்லும் குழாய் வீங்குதல்).
  • நுண்ணுயிரி (வைரல்) நோய்த்தொற்று (பொதுவாக பொன்னுக்கு வீங்கி நுண்ணுயிர் கிருமியால் உண்டாகும்).
  • விரைத் திருகல் (மிகுந்த வலியுடன் திருகப்பட்ட விரை).
  • விரைப் புற்றுநோய்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

மருத்துவ வரலாறு மற்றும் பாதிக்கப்பட்ட உறுப்பின் முழுமையான பரிசோதனை அடங்கிய உடல் பரிசோதனை மூலம் நோயைக் கண்டறியலாம். புரோஸ்டேட் சுரப்பியின் பங்கீட்டை சரிபார்க்க ஒரு மலக்குடல் பரிசோதனையை மருத்துவர் மேற்கொள்வர். இதைத் தவிர நோய்த்தொற்றைக் கண்டறிய இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்படுகிறது. அல்ட்ராசவுண்ட் எனப்படும் கேளாஒலி அல்லது வண்ண டாப்ளர், வீக்கத்தின் சரியான தன்மையையும் வீக்கம் ஏற்படுவதன் காரணத்தையும் கண்டறிய உதவுகிறது.

சிகிச்சை வீக்கத்தின் அடிப்படை காரணத்தைப் பொறுத்து அமையும். நுண்ணுயிர் (பாக்டீரியல்) தோற்று இருக்கும் நிலையில் 10-14 நாட்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. தேவை இருப்பின் வீக்கம் குறைக்கும் மருந்துகளுடன் வலி நிவாரணி மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. காய்ச்சல் இருப்பின் உடல் வெப்பம் தணிக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். பாலியல் உயிர்ப்புள்ள ஆண்கள் ஆணுறை அணியவும், அறிகுறிகள் நீங்கும் வரை பாலியல் தொடர்பு கொள்ளாமல் இருக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர். ஒய்வு, விரைப்பை தாங்குதல், தினம் 15-20 நிமிடங்களுக்கு ஐஸ் பேக் பயன்படுத்துதல் ஆகியவை சில சுய பாதுகாப்பு முறைகள் ஆகும்.



மேற்கோள்கள்

  1. Marcozzi D, Suner S. The nontraumatic, acute scrotum. Emerg Med Clin North Am. 2001 Aug;19(3):547-68. PMID: 11554275
  2. Chirag G Gordhan, Hossein Sadeghi-Nejad. Scrotal pain: Evaluation and management . Korean J Urol. 2015 Jan; 56(1): 3–11. PMID: 25598931
  3. Patrick Günther, Iris Rübben. The Acute Scrotum in Childhood and Adolescence. Dtsch Arztebl Int. 2012 Jun; 109(25): 449–458. PMID: 22787516
  4. Leslie SW, Siref LE. Chronic Testicular Pain (Orchialgia). [Updated 2019 May 2]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.
  5. Lucile Packard Foundation [Internet]. Stanford Health Care, Stanford Medicine, Stanford University. Scrotal Swelling in Children.

விரைச்சிரை வீக்கம் டாக்டர்கள்

விரைச்சிரை வீக்கம் க்கான மருந்துகள்

Medicines listed below are available for விரைச்சிரை வீக்கம். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹225.0

Showing 1 to 0 of 1 entries