சுருக்கம்
விரைச்சிரை வலி என்பது, ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு முக்கியமான உறுப்பான விரைச்சிரையில் ஏற்படும் வலியைக் குறிக்கிறது. விரைச்சிரை வலி, விரைச்சிரையில் ஏற்படும் ஒரு நோய்த்தொற்று அல்லது காயத்தினால், அரிதாக ஒரு கட்டியினால் ஏற்படக் கூடும். வழக்கமாக விரைச்சிரைகளில் ஏற்படும் வலி, மறைந்திருக்கும் ஒரு பிரச்சினையின் அறிகுறியாக இருக்கிறது. அது போன்ற நிலைகளில், விரைப்பை சிவந்து போதல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளும் மற்றவையோடு இணைந்து காணப்படுகின்றன. பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பான உடலுறவு கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதால், முறையே காயங்களை மற்றும் நோய்த்தொற்றுக்களைத் தவிர்ப்பதன் மூலம் இதனைத் தடுப்பது சாத்தியமாகிறது. விரிவான மருத்துவ சரித்திரம், உடல் பரிசோதனை மற்றும் சில சோதனைகள் வழியாக நோய் கண்டறிதல் செய்யப்படுகிறது. கையாள்வது, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகளோடு, போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்வதோடு தொடர்புடையது. சிலநேரங்களில், மறைந்திருக்கும் காரணத்தைச் சார்ந்து ஒரு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லையெனில், அந்த மறைந்திருக்கும் காரணம், விரைச்சிரைகளின் நிரந்தர இழப்பு, மலட்டுத்தன்மை மற்றும் உடல் முழுவதும் நோய்த்தொற்று பரவுதல் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும்.