பற்கள் நோய்த்தொற்றுகள் என்றால் என்ன?
பற்கள் நோய்த்தொற்றுகள் அல்லது சீழ்கட்டி என்பது பற்களின் தொற்றுநோய் ஆகும், இது வேர் வரை பரவி அதன் விளைவாக சீழ் குவிதல் ஏற்படுகிறது. நோய்த்தொற்று மிகவும் வேதனையளிக்கும் மற்றும் ஒரு பல் மருத்துவரின் உதவி தேவைப்படுகிறது. பற்களைச் சுற்றியுள்ள தசைநார்கள் மற்றும் திசுக்களின் தொற்று, பற்புறத் திசு நோய் (பிரியோடோன்ட்டிடிஸ்) என்று அழைக்கப்படுகின்றன.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஒரு பல் நோய்த்தொற்றின் மிக உறுதியான அறிகுறி தொடர்ச்சியான பல் வலி ஆகும், இது ஈரின் அடியில் உள்ள நிணநீர் முனையில் வீக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. பற்கள் தொற்றுநோய்க்கான மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- சூடான அல்லது குளிரானதை உண்ணும்போது கூச்சம்/வலி.
- காய்ச்சல் போன்ற உணர்வு.
- கடிக்கும் போது அல்லது மெல்லும் போது சிரமம் மற்றும் வலி.
- வாயிலிருந்து துர்நாற்றம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மோசமான பல் சுகாதாரம், தொற்றுநோய் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இந்த பாக்டீரியாவில் சுரக்கும் அமிலமானது பற்படலம் மற்றும் சொத்தை உருவாக காரணமாக இருக்கிறது. பல் நோய்த்தொற்றின் மற்றொரு பிரதான காரணம் இனிப்பு மற்றும் சர்க்கரைப் பொருட்களை அதிக அளவில் உட்கொள்வது ஆகும், இது பாக்டீரியாவை வளர்க்கும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மேலே குறிப்பிட்டுள்ள அடையாளங்களையும் அறிகுறிகளையும் கண்டறிந்த பிறகு செய்யப்படவேண்டிய முதல் மற்றும் மிக முக்கியமான வேலை, ஒரு பல்மருத்துவரை சந்தித்து, நோய்க்கான காரணத்தை ஆய்வு செய்து, மற்ற ஈர் பகுதிகளில் பரவியிருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். நோய்த்தொற்றின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தீர்மானிக்க பல் மருத்துவர் சில சோதனைகளை செய்யலாம். ஒரு தொற்றுநோயைத் தீர்மானிக்க பொதுவாக பயன்படுத்தப்படும் சோதனைகள் பின்வருமாறு:
- எக்ஸ்-கதிர்கள் சோதனை - தொற்றின் இடத்தை கண்டறிய உதவுகிறது.
- ஓ.பி.ஜீ - உங்கள் பற்கள் மற்றும் தாடைகளின் நோய்த்தொற்றின் அளவை தீர்மானிக்க ஒரு ஆய்வு செய்ய வேண்டும்.
நோய்த்தொற்றை தவிர்க்க மிகவும் பொதுவான மற்றும் பழமையான முன்னெச்சரிக்கை வழி என்னவென்றால், பல் ஆரோக்கியத்தை பராமரித்தல். எந்தவொரு பற்படலம் மற்றும் தொற்று ஏற்படாமல் தடுக்க ஒரு நாளுக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர் பரிந்தரைக்கிறார்.
எனினும், தொற்று ஏற்பட்டுவிட்டால் அல்லது பரவிவிட்டால், நுண்ணுயிர் எதிர்ப்பிகளோடு இணைந்து பின்வரும் சிகிச்சை செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்:
- சீழ்கட்டியை உடைத்தல் - ஒரு சீழ்கட்டி உருவானால், வலியை போக்க பல் மருத்துவர் அதை வெட்டி, சீழை எடுத்து விடுவர்.
- சீழ்கட்டியை உடைத்தல் - ஒரு சீழ்கட்டி உருவானால், வலியை போக்க பல் மருத்துவர் அதை வெட்டி, சீழை எடுத்து விடுவர்.
- பாதிக்கப்பட்ட பல்லை பிரித்தெடுத்தல் - பாதிக்கப்பட்ட பல்லைக் காப்பாற்றுவதற்கு வேர்க்குழல் சிகிச்சை கூட போதுமானதாக இல்லை என்றால் இது தான் கடைசி கட்ட முயற்சி.
இந்த நடைமுறைகளுடன் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பல்மருத்துவர் பரிந்துரைக்கிறார்.