தற்கொலை எண்ணம் என்றால் என்ன?
தற்கொலை என்பது உங்கள் சொந்த வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருவதாகும். தற்கொலை எண்ணங்கள் மற்றும் யோசனைகளை நோக்கி ஒரு நபர் நகரும்போது அது தற்கொலை எண்ணம் என்று அழைக்கப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஒரு நபர் தற்கொலை செய்துகொள்ள போவதை நேரடியாக சொல்லுவதற்கு வழி இல்லை என்றாலும், பின்வருவனவற்றைப் போல சில எச்சரிக்கை அறிகுறிகள் காணப்படும்:
- ஒரு நபர் தங்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளலாம் மற்றும் வழக்கமான செயல்களில் விருப்பமில்லாதவராக இருக்கலாம்.
- ஒரு தனிமையான, உதவியற்றவராக உணரலாம் மற்றும் அவர்களது வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று உணரலாம்.
- அடிக்கடி மனம் அலைபாய்வது கூட ஒரு அறிகுறியாகும்.
- மரணத்தை பற்றி அடிக்கடி பேசுவார்கள் மற்றும் அதற்கு தயாராக இருப்பார்கள் அல்லது திட்டமிடுவார்கள்.
- தற்கொலை எண்ணங்கள் கொண்ட நபர் போதை பழக்கம், குடிபழக்கம் ஆகியவற்றின் ஆதிகத்தின் கீழ் இருக்கலாம் அல்லது பிற அடிமைதனத்தில் இருக்கலாம்.
- தற்கொலை மனப்பான்மை கொண்டவர்களிடம் குற்ற உணர்வுகள், தவிப்பு மற்றும் பயனற்றவராய் உணர்தல் ஆகியவை பொதுவாக குறிப்பிடப்படுகின்றன.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஏன் தங்கள் வாழ்க்கையை முடிக்க வேண்டும் என்று ஒரு முழுமையான காரணத்தை யாரும் கொடுக்க முடியாது. இருப்பினும், எச்சரிக்கை அறிகுறிகளைப் போல, ஒரு நபருக்கு இத்தகைய எண்ணங்களை ஏற்படுத்தும் சில ஆபத்து காரணிகள் உள்ளன.
- ஒரு பெரிய இழப்பு, உடல் காயம் அல்லது அதிர்ச்சி ஆகியவை தற்கொலை எண்ணங்களை தூண்டலாம்.
- நிதி பிரச்சினைகள், தொழிலில் திருப்தி இல்லாமை அல்லது வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆகியவை தற்கொலை மனப்பான்மைகளை உருவாக்கக்கூடும்.
- உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால், அல்லது அவர்களுக்கு நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஒரு நோய் நிலை இருந்தால், அவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை உணர்வார்.
- குடும்ப பிரச்சினைகள், வீட்டில் பிரச்சினைகள் அல்லது நேசித்தவர்களுடன் மோதல் ஆகியவை ஒரு நபரை உதவியற்றவராகவும் தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
ஒருவரின் நடத்தை, வரலாறு, அணுகுமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தற்கொலை மனப்போக்கு கொண்ட ஒரு நபரை நிபுணர் கண்டறிய முடியும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, உடல்நலப் பிரச்சினைகள், மருந்துகள் எடுத்துக்கொள்வது பற்றிய வரலாறு மற்றும் பிற தொடர்புடைய தகவல்களின் விரிவான வரலாற்றை அவர்கள் எடுப்பார்கள்.
- தற்கொலை எண்ணத்தை போக்க செய்வது என்பது, அத்தகைய எண்ணங்களுக்கு வழி வகுக்கும் காரணத்தை அறிந்து சிகிட்சை அளிப்பது ஆகும்.
- இது பல்வேறு வகையான சிகிச்சைகள் மூலம் செய்யப்படலாம், சில சமயங்களில் மருந்துகள் கூட தேவைப்படலாம்.
- மனோதத்துவ மற்றும் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் உதவலாம்.
- அடிப்படை உடல்நலத்தை கவனித்துக்கொள்வதும் முக்கியம்.
- தேவைப்பட்டால் மன அழுத்தங்களை போக்கும் மருந்துகள் போன்றவை பரிந்துரைக்கப்படலாம்.
- ஒரு நபருக்கு நேர்மறையான வாழ்க்கை முறை மாற்றங்களை கற்றுத் தருதல், தேவையற்ற பழக்கங்களை கைவிடுதல் மற்றும் ஒரு பொழுதுபோக்கு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுதல் போன்ற உங்கள் மனதிற்கு சந்தோஷம் அளிக்கும் விஷயங்களை செய்தல் ஆகியவை மிகவும் அவசியம்.