பக்கவாதம் என்றால் என்ன?
பக்கவாதம் என்பது மூளையின் ஒரு பகுதிக்கு இரத்தஓட்டம் செல்லாத ஒரு நரம்பு சம்பந்தப்பட்ட மருத்துவ நிலை. இது மரணத்திற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு நிலையாகும். விரைவான மற்றும் தீவிரமான மருத்துவ சிகிச்சை மூலம் நிரந்தர சேதம் மற்றும் இயலாமையில் இருந்து மூளையை பாதுகாக்க முடியும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் திடீரென்று ஏற்படும் மற்றும் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு காணப்படும். இவை ஃபாஸ்ட் (எப்.ஏ.எஸ்.டி) என்று நினைவில் கொள்ளப்படுகிறது:
- முகம் - வாய் மற்றும் கண்களுடன் சேர்ந்து முகம் ஒரு பக்கமாக சாய்ந்து கொள்ளுதல் மற்றும் சிரிப்பதில் இயலாமை.
- கைகள் - பலவீனம் அல்லது மறத்துபோதல் காரணமாக இரு கைகளையும் உயர்த்த முடியாது.
- பேச்சு - விழித்திருப்பது போல் தோன்றும் போது பேசுவதற்கு மெல்லியதாகவோ அல்லது இயலாமலோ இருக்கலாம்.
- நேரம் - உடனடியாக மருத்துவ உதவிக்கு அழைக்க வேண்டும்.
மற்ற அறிகுறிகள் பின்வருமாறு.
- ஒரு பக்கம் அல்லது குறிப்பிட்ட பாகங்கள் எ.கா., முகத்தின் ஒரு பாகம் முழுமையாக பக்கவாதத்தால் பாதிக்கப்படுதல்.
- பார்வையில் தெளிவின்மை அல்லது பார்வை இழப்பு.
- தலைசுற்றல்.
- குழப்பம்.
- சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு சிக்கல்கள்.
- விழுங்குவதில் சிரமம்.
- உணர்விழப்பு.
- உடலின் ஒன்று அல்லது இரு பக்கங்களிலும் உணர்வின்மை.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
- இஸ்கிமிக் பக்கவாதம் மூளைக்கு செல்லும் இரத்தத்தை தடுப்பதன் விளைவாக ஏற்படுகிறது.இரத்தக் குழாயின் சுவர்களில் பிளேக் (கொழுப்பு மற்றும் கால்சியம்) படிவதன் காரணமாக இந்த அடைப்பு ஏற்படுகிறது.
- மூளையில் ஒரு தமனி சிதைந்துபோகும் போது ஹீமோராஜிக் பக்கவாதம் (பெருமூளை அல்லது மண்டையோட்டக இரத்தப்போக்கு) ஏற்படுகிறது.உயர் இரத்த அழுத்தம் ஹீமோராஜிக் பக்கவாதத்தின் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
- சிறிய பக்கவாதம் அல்லது எச்சரிக்கை பக்கவாதம் என்று அழைக்கப்படும் ட்ரான்சியெண்ட் இஸ்கிமிக் தாக்குதல், தமனியின் ஒரு பகுதி அல்லது பாதி அடைப்பால் ஏற்படுகிறது. இது ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே நீடிக்கிறது மற்றும் இது வரவிருக்கும் கடுமையான பக்கவாதத்திற்கு ஒரு எச்சரிக்கை அறிகுறியாக உள்ளது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
உங்கள் அறிகுறிகள், மருத்துவ வரலாறு, குடும்ப வரலாறு மற்றும் உடல் பரிசோதனை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மருத்துவர் இந்த நோயறிதலை கண்டறிய முடியும். பாதிக்கப்பட்டவர் முகம், கைகள் மற்றும் கால்கள் ஆகியவை உணர்வின்மைக்காக சோதிக்கப்படுகின்றன; மேலும் மங்கலான பார்வை, குழப்பம் மற்றும் பேசுவதில் சிரமம் ஆகியவை சோதிக்கப்படுகின்றன. இரத்த பரிசோதனைகள், துடிப்பு விகிதம் மற்றும் இரத்த அழுத்தம், சி.டி ஸ்கேன், சி.டி ஆஞ்சியோகிராம், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், விழுங்குதல் சோதனை, கரோட்டிட் அல்ட்ராசவுண்ட் மற்றும் மின்கார்டியோகிராம் ஆகியவற்றைச் செய்யலாம்.
இஸ்கிமிக் பக்கவாதம் சிகிச்சையில் த்ரோம்போலைசிஸ், இரத்தக்குழாயில் குருதி உறைவை நீக்கல் (த்ரோம்பேக்டாமி), ஆன்டிபிலேட்லெட் தெரபி, உறைவு எதிர்ப்பு சிகிச்சை, உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகள், ஸ்டேடின்ஸ் மற்றும் கரோடிட் எண்டர்டெரெக்டாமி.
மூளையிலிருந்து இரத்தத்தை அகற்றி, மூளையில் அதிகரித்த அழுத்தத்தை நிர்வகிக்க அறுவை சிகிச்சை மூலம் ஹீமோராஜிக் பக்கவாத சிகிச்சை அளிக்கப்படுகின்றன.