தண்டுவட எலும்புப் பாதிப்பு (ஸ்பாண்டிலோசிஸ்) - Spondylosis in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

May 14, 2019

March 06, 2020

தண்டுவட எலும்புப் பாதிப்பு
தண்டுவட எலும்புப் பாதிப்பு

தண்டுவட எலும்புப் பாதிப்பு (ஸ்பாண்டிலோசிஸ்) என்றால் என்ன?

ஸ்பாண்டிலோசிஸ்  என்பது முதுகெலும்புகள் மற்றும் குருத்தெலும்புகள் மற்றும் டிஸ்க்குகளில் (முதுகெலும்பு தட்டு) ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். நாளடைவில், ஸ்பாண்டிலோசிஸ் முதுகெலும்புகளுக்கு உதவியாக உள்ள முதுகெலும்புகளின் திசுக்களை (முதுகெலும்பு தட்டு- டிஸ்க்) முற்றிலும் பாதிப்படைய வழிவகுக்கிறது. ஸ்பாண்டிலோசிஸ் இறுதியில் முதுகெலும்பு விறைப்பு அல்லது கீல்வாதம் ஏற்பட வழிவகுக்கும். இது பொதுவாக கழுத்து மற்றும் பின்முதுகில் உள்ள அதாவது இடுப்பு பகுதி முதுகெலும்புகளைப் பாதிக்கிறது.

அதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் என்ன?

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் ஸ்பாண்டிலோசிஸ் வகையை மற்றும் அது எங்கு ஏற்பட்டுள்ளது என்பதை பொறுத்ததாகும். அவை:

லம்பர் (இடுப்பு) ஸ்பாண்டிலோசிஸ்.

  • காலையில் முதுகெலும்பு விறைப்பாகவும் மற்றும் முதுகில் வலி ஏற்படுதல்.
  • அதிக நேரம் உட்கார்ந்திருத்தல் பிறகு ஏற்படும் வலி.
  • வளைதல் மற்றும் குனிதலின் போது உண்டாகும் வலி.

கர்ப்பப்பை வாய் ஸ்பாண்டிலோசிஸ்.

  • பின்புற தலைவலி.
  • கால்கள் மற்றும் கைகளில் பலவீனம் மற்றும் உணர்ச்சியின்மை.
  • கழுத்தில் விறைப்பு தன்மை.
  • சமநிலையை இழத்தல்.
  • கழுத்து வலி தோள்பட்டை கீழ்வரை பரவுதல்.
  • கால்கள் அல்லது தோள்களில் அசாதாரண உணர்ச்சிகள்.
  • சிறுநீர்ப்பை மற்றும் குடல் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் சிரமம்.

மார்பறைச்சிரை  ஸ்போண்டிகோலிஸ்.

  • பின்னோக்கி வளையும் போது நடுமுதுகில் வலி.
  • முன்னும் பின்னும் நகரும் போது முதுகெலும்பில் வலி.

முக்கிய காரணங்கள் என்ன?

ஸ்பாண்டிலோசிஸின் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

  • வயதாதல்.
  • கடந்த காலத்தில் கழுத்தில் ஏற்ப்பட்ட காயம் எ.கா.,  மோட்டார் வாகன விபத்தினால் ஏற்ப்பட்ட   கடுமையான அதிர்வு.
  • கடுமையான கீல்வாதம்.
  • கடந்த காலத்தில்  ஏற்ப்பட்ட முதுகெலும்பு காயம்.

இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

ஸ்பாண்டிலோசிஸின் பின்வரும் சிகிச்சை முறைகள் பயன்படுத்தி கண்டறியப்படுகிறது:

  • கழுத்து மற்றும் முதுகின் நெகிழ்தன்மையை சரிபார்.க்க விரிவான மருத்துவ பின்புலம் மற்றும் உடல் பரிசோதனை.
  • நடைபயிற்சியின் போது எடுக்கப்படும் சோதன.
  • கால்கள், கை மற்றும் முழங்கையின் வலிமை மற்றும் அனிச்சைகளை பரிசோதித்தல்.
  • தேவைப்பட்டால் ஒரு எக்ஸ்ரே, எம்ஆர்ஐ அல்லது ஒரு சி.டி. ஸ்கேன்னுக்கு பரிந்துரைக்கலாம்.

ஸ்பாண்டிலோசிஸிஸ் பின்வரும் முறைகள் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது:

  • வலி நிவாரணத்திற்காக எதிர்வினை மருந்துகள்.
  • பிரேஸ் அல்லது சாஃப்ட் காலர்.
  • அப்பகுதியின் தசைகளை வலுப்படுத்த உடற்பயிற்சிகள்.
  • உடலியக்க சிகிச்சை.
  • கடுமையான வலி ஏற்பட்டால் வலி நிவாரணிகள் மற்றும் ஊசி.
  • வலி நிவாரணிகள் மற்றும் ஊசிகளால் நிவாரணம். அடையாத  நோயாளிகளுக்கு, அவர்களது  அன்றாட வாழ்க்கையில வலியால் தொடர்ந்து இடையூறுகள் இருக்கும்பொருட்டு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படலாம்.



மேற்கோள்கள்

  1. Oregon Health & Science University. [Internet] Corvallis, Oregon; Spondylosis
  2. Hospital for Special Surgery. [Internet] New York; Spondylolysis and Spondylolisthesis
  3. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Cervical Spondylosis: Diagnosis and Tests
  4. UNC Health Care. [Internet] University of North Carolina; Cervical Spondylosis (Neck Arthritis)
  5. National Institute of Arthritis and Musculoskeletal and Skin Diseases [Internet]. National Institute of Health; Ankylosing Spondylitis.
  6. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Ankylosing spondylitis

தண்டுவட எலும்புப் பாதிப்பு (ஸ்பாண்டிலோசிஸ்) டாக்டர்கள்

Dr. Manoj Kumar S Dr. Manoj Kumar S Orthopedics
8 Years of Experience
Dr. Ankur Saurav Dr. Ankur Saurav Orthopedics
20 Years of Experience
Dr. Pritish Singh Dr. Pritish Singh Orthopedics
12 Years of Experience
Dr. Vikas Patel Dr. Vikas Patel Orthopedics
6 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

தண்டுவட எலும்புப் பாதிப்பு (ஸ்பாண்டிலோசிஸ்) க்கான மருந்துகள்

Medicines listed below are available for தண்டுவட எலும்புப் பாதிப்பு (ஸ்பாண்டிலோசிஸ்). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.