முதுகெலும்பு முறிவு - Spine Fracture in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

May 14, 2019

March 06, 2020

முதுகெலும்பு முறிவு
முதுகெலும்பு முறிவு

முதுகெலும்பு முறிவு என்றால் என்ன?

முதுகெலும்பு முறிவு என்பது முதுகெலும்பில் ஏற்படும் காயம் ஆகும். இது முக்கியமாக முதுகின் நடுப்பகுதி அல்லது கீழ் பகுதியில் ஏற்படுகிறது. இந்தியாவில், 15-20 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் இந்த முதுகெலும்பு முறிவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் என்ன?

இவைகள் மருத்துவ வெளிப்பாடுகளுள் அடங்கும்:

  • முதுகு வலி.
  • கூச்சஉணர்வு.
  • முதுகெலும்பு இடம்பெயர்வு மற்றும் முதுகெலும்பு வடிவத்தில் மாற்றம்.
  • நிமிர்ந்து நிற்பதற்கு பதிலாக ஒரே பக்கமாக சாய்ந்திருப்பது.

கடுமையாக பாதிப்படைந்த சில நோயாளிகள் மூளை சேதத்தால் பாதிக்கப்பட்டு மற்றும் உணர்வில்லாமல் கூட  இருக்கலாம்.

முக்கிய காரணங்கள் என்ன?

இத்தகைய முறிவுகளுக்கு முக்கிய காரணங்கள் வாகன விபத்துக்கள் ஆகும். பெண்களைக் காட்டிலும் ஆண்கள் முதுகெலும்பு முறிவிற்கு அதிகம் ஆளாகிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயரத்திலிருந்து கீழே விழுவதும் கூட இந்த முறிவிற்கு காரணமாக அமையலாம். விளையாட்டு செயல்பாடுகள் முதுகெலும்பு காயத்தை ஏற்படுத்தலாம். ஆயுதங்களை கொண்டு தாக்குதல், துப்பாக்கிகள் போன்றவை, முதுகெலும்பு முறிவை சில சமயங்களில் ஏற்படுத்தலாம். முதுகெலும்பு முறிவிற்கு சில முறிவுகள்  அல்லது எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) காரணமாக இருக்கலாம், இது மாதவிடாய் நின்ற பெண்கள் மத்தியில் மிகவும் அதிகமாக உள்ளது. முதுகெலும்பு முறிவு ஏற்படும்  நிலைமைகளைப் பொறுத்து அவற்றின் தீவிரம் மாறுபடலாம்.

இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

ஒரு முழுமையான மருத்துவ பின்புலம் அல்லது நோயாளியின் மருத்துவ குறிப்புகள் மற்றும் உடல் பரிசோதனைக்குப் பின்னர் நரம்பியல் செயல்பாடுகளை கண்காணிக்க உங்கள் மருத்துவர் சில சோதனைகள் செய்யலாம். இந்த சோதனைகள் காயத்தின் இயல்பு மற்றும் காயத்தின் இருப்பிடத்தை தீர்மானிக்க உதவும். ஒன்றுக்கு மேற்பட்ட பகுதியில் ஸ்கேன் செய்வதற்கு இமேஜிங் சிகிச்சை நுட்பங்கள் மேற்கொள்ளலாம். கணினிமயமாக்கப்பட்ட வரைவி (சிடி)மற்றும் காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படலாம். எலும்பு செயல்பாட்டை சரிபார்க்க அணு எலும்பு ஸ்கேனிங் செய்யப்படலாம்.

சிகிச்சையானது பொதுவாக காயத்தின் வகை மற்றும் அதன் அமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.

நரம்பு அல்லது முதுகெலும்பு இடம்பெயர்வினால்முக்கிய காயம் ஏற்பட்டிருந்தால் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட எலும்புகளில் முறிவுகள் இருந்தாலும் அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம். இது வலியில் இருந்து சீக்கிரம் மீண்டு வர உதவும்.

முதுகெலும்பு நீக்கம் (லமினக்டோமி) என்பது முதுகு தண்டு மீது இருக்கும் அதிக அழுத்தத்தை குறைக்க பயன்படுத்தப்படும் மற்றொரு சிகிச்சை முறை ஆகும்.

 

அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை முறைகளில் அடங்குவன

  • 2-3 மாதங்களுக்கு பிரேஸ்களின் பயன்பாடு.
  • உடல் செயல்பாடுகளில் முழு கட்டுப்பாடு.
  • மறுவாழ்வு மையங்கள் மற்றும் பிசியோதெரபி மூலம் அசௌகரியத்தை குறைக்க, உடல் இயக்கங்களை  மேம்படுத்துதல் மற்றும் இயல்பு நிலைக்கு திரும்புதல்.

முதுகெலும்பு முறிவுகள் ஒரு நபரின் இயக்கத்தை பாதிப்படையச்செய்யலாம், எனவே அதனால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் மற்றும் முதுகெலும்பின் ஆரோக்கியத்தை உடனடியாக சரிசெய்வது மிகவும் முக்கியம் ஆகும்.



மேற்கோள்கள்

  1. Prof. Rajeshwar N. Srivastava et al. Epidemiology of Traumatic Spinal Cord Injury: A SAARC Perspective. International Journal of Molecular Biology & Biochemistry.
  2. American Academy of Orthopaedic Surgeons [Internet] Rosemont, Illinois, United States; Fractures of the Thoracic and Lumbar Spine.
  3. Columbia University; Department of Neurological Surgery. [Internet] Compression Fracture
  4. American Association of Neurological Surgeons. [Internet] United States; Vertebral Compression Fractures
  5. Raphael Martus Marcon et al. Fractures of the cervical spine. Clinics (Sao Paulo). 2013 Nov; 68(11): 1455–1461. PMID: 24270959
  6. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Compression fractures of the back