முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு என்றால் என்ன?
முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு (எஸ்.எம்.ஏ) என்பது தண்டுவட நரம்புகளால் கட்டுப்படுத்தப்படும் நம் உடலின் தன்னார்வ தசைகளை பாதிக்கும் ஒரு நோய் ஆகும். நரம்பு செல்கள் பாதிக்கப்படும் போது இந்த நரம்புகளால் வழங்கப்படும் தசைகளில் பலவீனம் மற்றும் சுருக்கம் விளைகிறது. இது குழந்தைகளில் ஏற்படுகிறது மற்றும் பெரும்பாலும் மரபணு வழியாக பரவுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
எஸ்.எம்.ஏ நோயின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள், நோயின் வகையை சார்ந்து இருக்கின்றன. எஸ்.எம்.ஏ நோயில் 4 வகைகள் உள்ளன, அவற்றின் அறிகுறிகள்:
- வகை I - மிக கடுமையான நோய்.
- உட்காருவதில் சிரமம்.
- தலையை நிமிர்ந்து வைத்திருக்க இயலாமை.
- விழுங்குவதில் சிரமம்.
- சுவாசிப்பதற்கு உதவும் தசைகளும் பாதிக்கப்படுகின்றன (குழந்தை 2 வயது கடந்த வாழ்வது அரிது).
- வகை II - 6-18 மாத குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
- மேல் கைகாலுறுப்புகளுடன் ஒப்பிடும்போது கீழ் கைகாலுறுப்புகளின் தசைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.
- தவழ்ந்து செல்வது, நடை போன்றவற்றில் சிரமம்.
- இது நாள்பட்ட மற்றும் குழந்தைகளை பாதிக்கும் எஸ்.எம்.ஏ எனவும் அழைக்கப்படுகிறது.
- வகை III - பாதிக்கப்படும் குழந்தைகள் 2-17 வயதினர் (ஜுவனைல் எஸ்.எம்.ஏ).
- இது எஸ்.எம்.ஏ இன் வீரியம் குறைந்த நோய் நிலை.
- கீழ் கைகாலுறுப்புகள் பாதிக்கப்பட்டு தசை பலவீனம் ஏற்படுகிறது.
- ஓடுவது, மாடிப்படி ஏறுவது, நாற்காலியிலிருந்து எழுவது முதலியவற்றில் குழந்தைக்கு சிரமம் ஏற்படுகிறது.
- வகை IV - இது பொதுவாக பெரியவர்களை பாதிக்கிறது.
- பொதுவாக மேல் மற்றும் கீழ் கைகாலுறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
- தசைகளின் பலவீனம், நிலையான பாணியில் நடப்பதில் சிரமம் போன்றவை.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு ஒரு மரபு நோய் ஆகும். இது மரபணு குறைபாடு அல்லது மரபணு பிறழ்வு காரணமாக ஏற்படுகிறது. இது மோட்டார் நியூரோன் புரதம் (எஸ்.எம்.என்) உற்பத்தி செய்யும் மரபணு மாற்றத்தினால் ஏற்படுகிறது. இதனால் புரதத்தின் உற்பத்தி குறைந்து தசைநார் வலுவிழப்பு உருவாகின்றது.
எஸ்.எம்.ஏ மரபணுக்கள் மூலமாக பரவுகிறது.குழந்தையில் ஒரு சாதாரண மரபணு மற்றும் ஒரு பிறழ்ந்த மரபணு இருந்தால், இந்த குழந்தை பாதிக்கப்படாது ஆனால் இக்குழந்தை ஒரு நோய் கேரியராக இருக்கும்.இந்தக் குழந்தையால் அதன் குழந்தைகளுக்கு நிலையை பரப்ப முடியும்.குறைபாடுள்ள இரு மரபணுக்களையும் குழந்தைகொண்டிருந்தால், அக்குழந்தை நோயினால் பாதிக்கப்படும், மேலும் அக்குழந்தை அடுத்த தலைமுறையினருக்கும் நிலையை பரப்ப முடியும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
மற்ற நிலைகளைப் பிரதிபலிப்பதால், மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை செய்தாலும், எஸ்.எம்.ஏ நோயைக் கண்டறிவது கடினம். சில இரத்த மற்றும் கதிரியக்க பரிசோதனைகள் எஸ்.எம்.ஏ நோயைக் கண்டறிவதில் உதவுகின்றன.
- எஸ்.எம்.ஏ மரபணுக்களுக்கான மரபணு மதிப்பீடு செய்ய இரத்த பரிசோதனை.
- ஈ.எம்.ஜி - தசைகளுக்கு நரம்பு வழி உந்துவிசை பரிமாற்றத்தை மதிப்பிடுவதில் உதவுகிறது.
- சி.டி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் - தசைகள் கட்டமைப்பை மதிப்பீடு செய்வதற்கும், தசை செயல்திறன் இழப்புகளை கண்டறியவும் உதவுகின்றன.
- தசை திசுப்பரிசோதனை - நுண்ணோக்கியின் கீழ் தசை செல்களை மதிப்பீடு செய்ய உதவுகிறது.
எஸ்.எம்.ஏ நோயை குணப்படுத்தக்கூடிய சில சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சிகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன. அறிகுறிகளின் தீவிரத்தை குறைப்பதற்கும், வாழ்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகின்ற சிகிச்சைகள் தற்போது அளிக்கப்படுகின்றன.
- உணவு - குறைவான கார்போஹைட்ரேட்டுகளுடன் கூடுதலான புரதச்சத்து நிறைந்த உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
- உடல் பயிற்சி சிகிச்சை - மேல் மற்றும் கீழ் கைகாலுறுப்புகளின் தசை தொனியை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. மூச்சு பயிற்சிகள் சளியை தவிர்க்கவும் மார்பு தசைகளின் ஏற்றச் செயல்பாட்டிற்காகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
- உதவிக் கருவிகள்- நடமாட்டத்திற்கு உதவும் உபகரணங்கள் (சக்கர நாற்காலிகள்), கைகளுக்கான ஸ்ப்ளின்ட் மற்றும் ப்ரேஸ்கள், மற்றும் கால்களுக்கு உதவும் ஷூ-இன்சர்டுகள் பரிந்துரைக்கப்படுகிறன.