சுருக்கம்
ஒரு தொண்டை புண் (வலி) என்பது குழந்தைகளிடம், அத்துடன் பெரியவர்களிடமும் காணப்படும் ஒரு அறிகுறியாகும். இது, மருத்துவர்கள் வெளிநோயாளி பிரிவுகளில் சிகிச்சையளிக்கும் மிகவும் பொதுவான நிலைமைகளில் ஒன்று. தொண்டை புண் (வலி) உருவாக்கக் கூடிய, பாக்டீரியா உள்பட 200க்கும் மேற்பட்ட நுண்ணுயிர்களும், வைரஸ்களும் இருக்கின்றன. ஒரு நோய்த்தொற்று அல்லது மறு-தொற்று ஏற்படக்கூடிய அபாயம் மிக அதிகமாக உள்ள, மக்கள் நெருக்கடி அதிகமான இடங்கள் மற்றும் வறுமையான வாழ்வியல் சூழல் போன்ற பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு, கடுமையான தொண்டை புண் (வலி) ஏற்படுவது மிகவும் பொதுவானது. தொண்டை புண் (வலி) ஏற்பட மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று காய்ச்சல் அல்லது வழக்கமான ஜலதோஷம். வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு காற்றின் மூலம் பரவுகிறது, பெரும்பாலும் தொற்று ஏற்பட்ட ஒருவரின் மூக்கு அல்லது உமிழ்நீர் சுரப்புகள் மூலமாக. மக்கள் நெருக்கடி அதிகமான இடங்கள், சுகாதாரமின்மை, சுகாதாரமின்றி உணவைக் கையாளுதல், ரசாயனங்கள், புகை மற்றும் எரிச்சலை உண்டாக்கும் பொருட்களை சுவாசிப்பதாலும் தொண்டை புண் (வலி) ஏற்படக் காரணமாகலாம்.. தவிர, விழுங்குவதில் சிரமம், மற்ற அறிகுறிகளான காய்ச்சல், அரிப்பு அல்லது தலைவலி போன்றவற்றோடு சேர்ந்து வரலாம்.
இது ஒரு பெரிய அளவிலான நோய்களின் காரணமாகக் கூட வரக் கூடும் என்பதால், தொண்டை புண் (வலி)க்கான சரியான காரணத்தை மதிப்பிடஒரு விரிவான மருத்துவ சரித்திரக் குறிப்பு அவசியம். பெரும்பாலான தொண்டை புண் (வலி), எந்தவித மருந்துகளும் இல்லாமலே சரியாகின்றன, ஆனால் பல தனிநபர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படலாம். ஸ்ட்ரெப்டோகோக்கஸ் என்ற பாக்டீரியாவினால் ஏற்படும் தொண்டை புண் (வலி)க்கு, கூடுதல் பிரச்சினைகளைத் தடுக்க, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுடன் முறையாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மற்ற காரணங்களால் ஏற்படும் தொண்டை புண் (வலி)க்கு மிகவும் சிக்கலான மற்றும் நோய் சார்ந்த மருத்துவம் தேவைப்படலாம். நோயாளி உடனடியாகவா அல்லது தாமதமாகவா நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து எடுத்துக் கொண்டார் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், 1% நேரங்களில் ஒரு தொண்டை புண் (வலி)யின் சிக்கல்களைக் காணலாம்.