சோடியம் குறைபாடு என்றால் என்ன?
சோடியம் குறைபாடு ஹைபோநட்ரீமியா என்றும் அழைக்கப்படுகிறது, இது இயல்பாக இருக்கும் சோடியம் அளவுடன் ஒப்பிடுகையில் இரத்தத்தில் சோடியத்தின் அளவு குறைவாக இருப்பதை காட்டுகிறது. உடலில் சோடியத்தின் அளவு 135-145 மிலி / லிட்டருக்கு குறைவாக இருக்கும் போது இந்த சோடியம் குறைபாடு ஏற்படுகிறது. சோடியம், எலக்ட்ரோலைட் திரவத்தின் முக்கிய மற்றும் அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளில் ஒன்றாகும், மேலும் திரவ - எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிப்பதில் சோடியம் முக்கிய பங்காற்றுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
சோடியம் குறைபாடு பிரச்சனை லேசானதாக இருக்கும்போது இதன் அறிகுறிகள் குறைவாக உண்டாகின்றன. இந்நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது காணப்படும் அறிகுறிகள் பின்வருமாறு
- தலைவலி.
- குமட்டல்.
- குறைவான இரத்தஅழுத்தம்.
- பலவீனம்.
- தசை பிடிப்புடன் கூடிய தசை வலி.
- தன்னிலையிழத்தல்.
- வலிப்பு மற்றும் சுயநினைவிழத்தல்.
- எரிச்சலூட்டும் விதமான நடத்தை.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
உடலில் இருக்கும் அதிக அளவிலான தண்ணீர் இந்த சோடியம் அளவினை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உடலில் சோடிய தனிமத்தின் இழப்பு அல்லது உடலில் உள்ள தண்ணீரின் இழப்பு காரணமாகவும் இந்த சோடியம் குறைபாடு ஏற்படலாம்.
இந்த சோடியம் குறைபாடு ஏற்பட காரணமான உள்ள வேறு சில காரணங்கள் பின்வருமாறு
- சிறுநீரகங்களின் தேவைக்குக் குறைந்த செயல்பாடு.
- உடலில் உருவாகும் திரவங்களின் காரணமாக ஏற்படுகிறது.
- சோடியம் இழப்பை ஏற்படுத்தும் மருந்துகளை பயன்படுத்துதல்.
- சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும் மனச்சோர்வு அல்லது வலி மருந்துகள்.
- அதிகமாக வாந்தியெடுத்தல் மற்றும் நீர்த்த மலம்.
- தாகம் அதிகரித்தல்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உங்களது உடலில் இருக்கும் திரவங்களில் சோடியத்தின் அளவை அறிய குறிப்பிட்ட சில சோதனைகளை எடுக்க மருத்துவர் உத்தரவிடுவார். இந்நோயினை மதிப்பீடு செய்ய, துவக்க நிலையில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்நோயினால் ஏற்பட்ட அறிகுறிகள் பற்றி வேறு ஏதேனும் நோய் தாக்கம் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள மருத்துவரால் சில கேள்விகள் கேட்கப்படலாம்.உடலில் உள்ள திரவங்களான, இரத்தம் மற்றும் சிறுநீர் ஆகியவை சோடியத்தின் அளவை ஆய்வு செய்ய சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிசோதனைகள் சோடியத்தின் குறைபாடு ஏற்படுவதன் காரணத்தை அறிய எடுக்கசொல்லப்படும் சில சோதனைகள்.
- சீரம் சோடியம்.
- ஆஸ்மோலாலிட்டி சோதனை.
- சிறுநீரில் இருக்கும் சோடியம்.
- சிறுநீர் ஆஸ்மோலாலிட்டி.
வழக்கமாக, இந்நோய் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் நோயின் தீவிர நிலையை கொண்டு இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இந்நோய்க்கான முக்கிய சிகிச்சை அணுகுமுறைகள் பின்வருமாறு
- சிரைவழியாக செலுத்தப்படும் திரவங்கள்.
- அறிகுறியிலிருந்து நிவாரணம் பெற கொடுக்கப்படும் மருந்துகள்.
- குறைவாக நீர் அருந்துவது.
குறிப்பிட்ட சில மருந்துகள் சோடியம் அளவினை அதிகரிக்கும், ஆனால் இது போன்ற மருந்துகளை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சோடியம் மற்றும் உப்பின் அளவை சரிசெய்ய எலக்ட்ரோலைட்ஸ்களைக் குடிப்பது இதற்கான சிகிச்சை முறைகளை உள்ளடக்கியதாகும். சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால், அதிகப்படியான நீரை வெளியேற்ற டயாலிசிஸ் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்.
இந்த சோடியம் குறைபாடு என்பது ஒரு தீவிர குறைபாடு இல்லை என்பதால் உங்கள் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் பாதிக்காமல் இந்நோயினை சரி செய்ய முடியலாம்.