தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்றால் என்ன?
தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது தூக்கம் ஒழுங்கின்மையால் நீங்கள் தூங்கும்போது உங்கள் சுவாசம் தொடர்ச்சியாக, நிறுத்தப்பட்டு தொடங்கப்படுகிறது.மூக்கிலிருந்து சுவாசக் குழாய் வரை உள்ள சுவாச குழாயில் ஏதேனும் ஒரு இடத்தில அடைப்பு காணப்பட்டால் குறட்டை விட தொடங்குவார்.இந்த நிலையை அடைப்பு காரணமாக தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்று கூறுவார்.மத்திய தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது சுவாச தசைகளுக்கு மூளை சுவாச சமிக்ஞைகளை அனுப்பாத ஒரு நிலை ஆகும்.தூக்க மூச்சுத்திணறலால் எல்லாரும் இரவில் குறட்டை வருவதில்லை, அதேபோல் இது நேர்மாறாகவும் இருக்கலாம் எனபதை நாம் முக்கியமாக குறித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
தூக்கத்தின் போது அறிகுறிகள் ஏற்படுவதால், நோயாளிகளுக்கு தங்கள் பிரச்சினைகளைக் கண்டறிய கடினமாக இருக்கும்.
சில அறிகுறிகள் பின்வருமாறு:
- இரவில் சுவாச பிரச்சனை இருப்பதால் நாள் முழுவதும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
- தூக்கத்தின் போது மூச்சுத்திணறல் மற்றும் அடைப்பு ஏற்படுதல்.
- உலர் வாய் மற்றும் காலை தலைவலி.
- சத்தமாகக் குரட்டை.
- அதிகமாக எரிச்சலடைதல் மற்றும் மனம் அலைபாய்தல்.
- நாள் முழுவதும் அரைத்தூக்க நிலை.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
தூக்கத்தில் மூச்சுத்திணறல் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றைப் போன்ற ஒரு அடிப்படை மருத்துவ நிலை காரணமாக ஏற்படுகிறது:
- உடல் பருமன் குறிப்பாக கழுத்து மற்றும் மார்பு பகுதியைச் சுற்றி.
- பெரிய அடிநாச்சதை.
- நரம்புத்தசை சீர்குலைவுகள்.
- சிறுநீரக செயலிழப்பு அல்லது இதய செயலிழப்பு.
- மரபணு நோய்க்குறிகள்.
- குறைமாத குழந்தை.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
உங்களோடு படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நபரிடமிருந்து உங்கள் தூக்க வரலாற்றையும் ஒரு முழுமையான உடல் பரிசோதனையையும் உங்கள் மருத்துவர் மேற்கொள்வார்.தூக்கத்தில் மூச்சுத்திணறல் நோயின் ஒரு உறுதியான நிலையை கண்டறிய தூக்க மையத்தில் வைத்து இரவுநேர கண்காணிப்பு மூலம் சுவாசம் மற்றும் பிற உடல் செயல்பாடுகளை விரிவாக பரிசோதனை செய்வர்.நோக்ட்ர்னல் பாலிசோமனோகிராஃபி டெஸ்ட் (தூக்க ஆய்வுகள்) மூலம் நீங்கள் தூங்கும் போது உங்கள் மூச்சு அமைப்பு, இரத்த ஆக்சிஜன் நிலைகள் மற்றும் இதயம், நுரையீரல் மற்றும் மூளை செயல்பாடு ஆகியவை கண்காணிக்கப்படுகிறது.வீட்டில் தூக்க சோதனை செய்யவேண்டுமென்று உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படலாம்.
லேசான நோய் நிலைகளில், உடல் எடை குறைதல் அல்லது புகைபிடிப்பதை நிறுத்துதல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.கடுமையான நோய் நிலைகளில், ஒரு தொடர்ச்சியான காற்றழுத்தத்தைப் (சி.பி.ஏ.பி) பராமரிக்க ஒரு முகமூடி கொடுக்கப்படுகிறது.நாக்கை பிடித்துக்கொள்ள வாய்வழி உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.தொண்டைக்குப் பிற்பகுதியில் உள்ள திசுக்களை அறுவைசிகிச்சை மூலம் அகற்றுதல் அல்லது தாடையின் நிலைப்பாட்டை மாற்றி அமைத்தல் போன்றவை சுவாசப்பாதையில் அடைப்பை நீக்க பரிந்துரைக்கப்படுகிறது.