தோல் நோய்த்தொற்றுகள் என்றால் என்ன?
தோல் என்பது உடல் முழுவதும் உருவாகும் ஒரு வெளிப்புற பாதுகாப்பு அடுக்கு ஆகும்.அதாவது, இது நம் சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து காரணிகளுக்கும் வெளிப்படுகிறது - வேதிப்பொருள், பாக்டீரியா, மற்றும் பல காரணிகள்.சில சமயங்களில் அதிகப்படியான வெளிப்பாட்டிற்கு தோல் முற்படுகிறது.
இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் காரணத்தின் அடிப்படையில் அறிகுறிகள் அமைந்தாலும், தோல் நோய்த்தொற்றுக்காண பிரத்யேக அறிகுறிகள் சில இருக்கின்றன.அவை பின்வருமாறு:
- அழற்சி காரணமாக சிவத்தல் மற்றும் அரித்தல்.
- தோல் வறண்டு மற்றும் மென்மையாக காணப்படுதல்.
- முற்றிய நிலையில் தோலில் இருந்து இரத்தப்போக்கு அல்லது சீழ் வடிதல்.
- நோய்தொற்று நீடித்தால், தோலில் சிறிய கொப்புளங்கள் மற்றும் தடிப்புகள் காணப்படலாம்.
- மெதுவாக தோல் தனது அடுக்குகளை உதிர்த்து உள்ளிருக்கும் கருநிற அடுக்குகளை வெளிப்படுத்துகிறது மற்றும் இதனால் தோல் நிறம் மாறியதாக தென்படுகிறது.
- சில நோய்த்தொற்று வகைகளில் தோல் செதில்கள் போல மாறும் வாய்ப்புள்ளது.
இதன் முக்கியக் காரணங்கள் என்ன?
தோல் நோய்த்தொற்று என்பது பின்வரும் நுண்ணுயிரி (பாக்டீரியா), நச்சுயிரி (வைரஸ்) மற்றும் பூஞ்சை போன்ற உயிரிகளால் உண்டாகிறது;
- ஹெர்பெஸ் சோஸ்டர் எனப்படும் அக்கி அம்மை போன்று நச்சுயிரிகள் தோல் நோய்த்தொற்றை உண்டாக்குகின்றன. உதாரணமாக., தட்டம்மை மற்றும் அக்கி. மனித பாபிலோமா வைரஸ், பாலுண்ணிகள் போன்ற நோய்த்தொற்றுகளை உண்டாக்குகின்றன.
- சீழ்க்கொப்புளம் மற்றும் பல்வாய்ப்பிளவை போன்ற தோல் நோய்த்தொற்றுகளையும் தோலடி நார்த்திசுவீக்கம் மற்றும் தொழுநோய் போன்ற தீவிர நோய்த்தொற்றுகளையும் நுண்ணுயிரி (பாக்டீரியா) உண்டாக்குகின்றன.ஸ்டாபிலோகோகஸ்/வட்ட நுண்ணுயிரி எனப்படும் நுண்ணுயிரியே பொதுவாக தோல் நோய்த்தொற்றுகளை உண்டாக்குகின்றன.
- பூஞ்சைசார் நோய்த்தொற்றில் படை, இரு திரிபுக் காளான் நோய் மற்றும் அத்லெட்ஸ் ஃபீட் எனப்படும் சேற்றுப்புண் ஆகியவை அடங்கும். பூஞ்சைசார் நோய்த்தொற்றுகள் பொதுவாக நகம் மற்றும் நகக்கண்களையும் பாதிக்கின்றன.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
- ஒவ்வொரு நோய்த்தொற்றும் ஒரு குறிப்பிட்ட தொலியல்சார் படத்தைக் கொண்டிருக்கும், பல சமயங்களில் இதன் அடிப்படையில் தான் நோயறிதல் செயல்முறை செய்யப்படுகிறது.
- உடல் பரிசோதனைக்குப் பின, தோல் காயம் பகுதியின் ஒரு மாதிரி திசு ஆய்வுக்கு எடுக்கப்படலாம்.
- இரத்த ஆய்வு மூலமாகவும் உடலில் நோய்த்தொற்று இருப்பதை உறுதிசெய்யலாம்.
சிகிச்சை
- லேசான தோல் நோய்த்தொற்றுகள் சில வாரங்களில் தானாகவே சரியாகின்றன.
- நுண்ணுயிர் தோல் நோய்த்தொற்றுக்கு நுண்ணுயிர்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.இவை மேலோட்டமாக, வாய் வழியாக அல்லது சிரை வழியாகவும் பல சமயங்களில் தரப்படுகின்றன.
- அதேபோல, பூஞ்சைசார் நோய்த்தொற்றுக்கு ஸ்ப்ரே/தெளிப்பான், ஜெல்/கூழ்மம், கிரீம்/குழைமம் அல்லது மாத்திரை வடிவில் பூசண எதிர்ப்பி மருந்துகள் தரப்படுகின்றன.
- வீக்கத்தை குறைக்க வீக்க நீக்கி மருந்துகள் தரப்படுகின்றன.
- நோய்த்தொற்றுப் பரவிவதைத் தடுக்க, நோயாளிகள் மற்ற நபர்களுடன் நேரடி தொடர்புகொள்வதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் விரைவான சிகிச்சைப்பலனுக்கு தனிப்பட்ட சுகாதாரத்தை நன்றாக பராமரிப்பது அவசியம்.