தோல் சீர்குலைவுகள் மற்றும் நோய்கள் என்றால் என்ன?
தோல் என்பது மனித உடலின் பாதுகாப்பு மற்றும் மிகப்பெரிய உறுப்பாகும். தோலை எரிச்சலடையச்செய்யும் எந்தப் பொருளும் வீக்கம், நமைச்சல், எரியும் உணர்வு மற்றும் தோலின் சிவத்தல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தி தோற்றத்தை பாதிக்கிறது. தோலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஒரு நோயோ அல்லது நோய்த்தொற்றோ கூட காரணமாக இருக்கலாம்.தோல் நிறமி கூடுதல்/குறைதல், புலனுணர்வு, செதிலாக்கல் முதல் கொப்புளங்கள், வேர்முடிச்சுகள், தடிப்புகள் வரை பல அறிகுறிகளால் தோல் சீர்குலைவுகள் வேறுபடும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?
தோல் ஒழுங்கின்மையின் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:
- சீழ்ப்பண்.
- திறந்த காயம்.
- வறண்ட தோல்.
- சீழ் உண்டாகுத்தல்.
- தோல் நிறம் மாறுதல்.
- தடுப்பை மீறிய வளர்த்தி.
- அரிப்பு அல்லது வலியுடன் கூடிய தடிப்புகள்.
- புள்ளிகள்.
- உயர்ந்த சுற்றுவரிப்பட்டை.
- மேல்தோல் பிரியும் தோல்.
- தோலில் மங்கிய புள்ளிகள்.
- சிவத்தல்.
- நீர் நிரம்பிய கொப்புளம்.
- திறந்த புண்.
- சுருக்கங்கள்.
- புடைப்பு.
- தடிப்புகள்.
- மென்மை உணர்வு.
- வீக்கம்.
நோய்தாக்குதலுக்கான முக்கியக் காரணங்கள் என்ன?
தோல் சீர்குலைவுகள் மற்றும் நோயின் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- மருந்துகள், உணவு, மகரந்தப்பொடி அல்லது பூச்சிக்கடிக்கு ஒவ்வாமை.
- வயது.
- கர்ப்பம்.
- தோல் புற்றுநோய்.
- தைராய்டு, ஈரல் அல்லது சிறுநீரக நோய்கள்.
- குறைந்த எதிர்ப்புசக்தி.
- போதிய தோல் துப்புரவு இல்லாமை.
- மரபணு காரணிகள்.
- மருந்துகளின் பக்கவிளைவு.
- தோல் எரிச்சல் உண்டாக்கும் வேதிப்பொருள்.
- தீக்காயம்.
- ஒளியுணர்திறன் இல்லாமை.
- பாலுண்ணிகள்.
- நீரிழிவு நோய்.
- வைரஸ், பூஞ்சை அல்லது பாக்டீரியா கிருமி.
- லூபஸ் போன்ற தற்சார்பு எமக்கோளாறு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
முழுமையான உடல் பரிசோதனை மற்றும் விரிவான வரலாற்றை தவிர, தோல் சீர்குலைவுகள் மற்றும் நோய்களை பின்வரும் முறைகள் மூலம் கண்டறியலாம்:
- திட்டுப் பரிசோதனை - நோய்த்தொற்று இருதலையும், பொருட்களுக்கு எதிர்வினையை கண்டறியவும் செய்யப்படுகிறது.
- வளர்ப்புப் பரிசோதனை- நோய் உண்டாக்கும் பூஞ்சை, பாக்டீரியா அல்லது வைரஸ் இருப்பதைக் கண்டறிய செய்யப்படுகிறது.
- தோலில் புற்றுநோய் திசுக்கள் அல்லது தீங்கிலாக் கட்டி இருப்பதைக் கண்டறிய திசு பரிசோதனை.
தோல் சீர்குலைவு சிகிச்சைகள் அதன் அடிப்படைக் காரணத்தைப் பொருத்தே அமையும். பின்வரும் மருந்துகள் தோல் சீர்குலைவு சிகிச்சைக்கு பொதுவாக உபயோகிக்கப்படுகின்றன:
- மேலோட்டமாக போடப்படும் இயக்க ஊக்கி மருந்துகள்.
- நுண்ணுயிர் கொல்லி களிமம் மற்றும் கூழ்மம்.
- வாய் வழி உண்ணும் இயக்க ஊக்கி மற்றும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள்.
- அல்ட்ரா வயலெட் (யுவி)- ஏ1.
- நாரோபேண்ட் யுவி-பி ஒளி.
- ஒவ்வாமை எதிர்பொருள்.
- களிமம் மற்றும் கூழ்மம்.
- பூஞ்சை எதிர்ப்பு தெளிப்பான்.
- கிளர்வுற்ற ஈரணு மூலக்கூறு லேசர் சிகிச்சை முறை.
- கடைகளில் வங்கக்கூடிய தோல் நல பொருட்கள்.
- குறிப்பிட்ட பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்.
- தேன் போன்ற கை வைத்திய முறைகள்.
- ப்ளூ லயிட் ஃபோட்டோடைனமிக் சிகிச்சை முறை.
- அக்குபங்ச்சர்.
- சோராலென் மற்றும் யுவி லயிட் ஏ (பி.யு.வி.ஏ).
- அறுவை சிகிச்சை.
- இயக்க ஊக்கி (ஸ்டீராய்டு) அல்லது ஊட்டச்சத்து ஊசிகள்.
- மருந்து கலந்த ஒப்பனை.