அதிர்ச்சி என்றால் என்ன?
நேசிப்பவரின் இழப்பு போன்ற சில கலக்கமான, பயமுறுத்தும் அல்லது அதிர்ச்சிகரமான சம்பவங்களை ஒருவர் அனுபவிக்கும்போது அவர் மனஅதிர்ச்சிக்கு உள்ளாவார்.அதிர்ச்சியில் இருக்கும் ஒரு நபர் ஃப்ளாஷ்பேக்குகள் (கடந்தகால நினைவுகள்), கணிக்க முடியாத உணர்ச்சிகள், மற்றும் பரஸ்பர உறவுகள் போன்ற நீண்டகால எதிர்வினைகளை அனுபவிப்பார்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
அதிர்ச்சி நிலையின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- நினைவிழப்பு.
- எளிதில் திடுக்கிடும் தன்மை.
- தீவிர விழிப்புணர்வு மற்றும் ஆபத்து பற்றிய எச்சரிக்கைகளைத் தேடுதல்.
- பீதி தாக்குதல்கள்.
- தூங்குவதில் சிரமம்.
- உணர்ச்சி மரத்த நிலை.
- கவனிப்பதில் சிரமம்.
- கோபம்.
- மனச்சோர்வு.
- நம்பிக்கையின்மை.
- குழப்பம்.
- திகிலூட்டும் நினைவுகள்.
- எரிச்சலடையும் தன்மை.
- பதற்றமூட்டும் கனவு.
- மனம் அலைபாய்தல்.
- பாலியல் செயலிழப்பு.
- மறுப்பு.
- சமாளிக்கும் திறனில் மாற்றங்கள்.
- நிகழ்வுகளின் காட்சி படங்கள்.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மன அதிர்ச்சிக்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- இயற்கை பேரழிவுகள்.
- உள்நாட்டு மற்றும் பணியிட வன்முறை.
- தீவிரவாதம்.
- ஒரு மரணம் அல்லது மற்ற அதிர்ச்சிகரமான சம்பவத்தை பார்த்தல்.
- சிறைதண்டனை.
- கடுமையான காயம் அல்லது நோயுறுதல்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட நோயாளியின் மருத்துவ வரலாறு மற்றும் அறிகுறிகளை குறிப்பதன் மூலம் ஒரு உடல் பரிசோதனையை உங்கள் மனநல மருத்துவர் மேற்கொள்வார்.
பின்வரும் சிகிச்சைகள் மன அதிர்ச்சிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகின்றன:
- புலனுணர்வு மறுசீரமைப்பு: அவமானம் மற்றும் குற்ற உணர்ச்சிகளைத் தடுக்க, அதற்க்கு காரணமான மோசமான நினைவுகளை மறக்க அல்லது ஏற்றுக்கொள்ள இந்த சிகிச்சை உதவுகிறது.
- உளவியல் சிகிச்சை: பேச்சு சிகிச்சை என்றும் அழைக்கப்படும் இந்த சிகிச்சை, 6 முதல் 12 வரை நீடிக்கும் மற்றும் இதில் பல அமர்வுகள் அடங்கும்.இந்த அமர்வுகள் ஒரு மனநல சுகாதார வழங்குநரின் முன்னிலையில் நடத்தப்படுகின்றன.இந்த சிகிச்சையின் உதவியுடன் சேர்த்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு மூலம் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பொறுப்பு, நம்பிக்கை மற்றும் உணர்ச்சிகளைத் தூண்ட முடியும்.
- வெளிப்பாடு சிகிச்சை: இந்த சிகிச்சையானது, நோயாளிகள் தங்கள் அச்சம் மற்றும் கவலைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.எழுதுதல் மற்றும் கற்பனைத்திரன் இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில கருவிகள்.
- மருந்துகள்:
- கோபப்படுதல், கவலைப்படுத்தல், சோகமாக உணர்தல் மற்றும் உணர்ச்சி மரத்த நிலை ஆகிய அறிகுறிகளைக் கட்டுப்படுத்த மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகள்.
- கவலை எதிர்ப்பு மருந்துகள்.
- தளர்வு உத்திகள்: சுவாச பயிற்சிகள், தியானம் மற்றும் யோகா பயிற்சி பழகுதல் மற்றும் தொடர்ந்து வழக்கமான உடற்பயிற்சிகளை செய்தல் போன்ற நுட்பங்கள் மூலம் மன அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு மன நிம்மதி மற்றும் அமைதி கிடைக்கும்.