உணர்ச்சியற்ற நிலை என்றால் என்ன?
உணர்ச்சியற்ற நிலை என்பது விழித்திருக்கும் நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட உணர்வற்று நிலை ஆகும்.இதன்மூலம் ஒருவர் கஷ்டப்படாமல் அல்லது பதட்டப்படாமல் சில வலிமிகுந்த செயல்முறைகள் அல்லது நோயறிதல் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.
இது எதற்காக செய்யப்படுகிறது?
உணர்ச்சியற்ற நிலை என்பது சில மருத்துவ அல்லது நோயறிதல் நடைமுறைகளுக்கு முன்னர் ஒருவரை அமைதிப்படுத்த செய்யப்படுகிறது.இந்த செயல்முறையின் போது நோயாளியை ஓய்வெடுக்கச் செய்ய இது தூக்க நிலையைத் தூண்டுகிறது.உணர்ச்சியற்ற நிலை என்பது இரண்டு வகையானது, விழித்திருக்கும் போது உணர்வற்ற நிலை மற்றும் ஆழ்ந்த உணர்வற்ற நிலை. விழித்திருக்கும் போது உணர்வற்ற நிலை என்பது ஒரு மிதமான தூண்டுதல் வகையாகும், இது வாய்வழி மருந்துகளின் ஒரு சேர்மானமாக அளிக்கப்படுகிறது மற்றும் முக்கியமாக எந்த எண்டோஸ்கோபி செயல்முறையை செய்வதற்கு முன்பு செய்யப்படுகிறது.அறுவைசிகிச்சை முறைகளுக்கு முன் ஆழ்ந்த உணர்வற்ற நிலை செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.காற்றுட்டல் அல்லது பெருமூச்சுக்குழலில் செருகுக் குழல் (எண்டோட்ராக்யேல் டுயுப்) சகிப்புத்தன்மைக்குத் தேவையான முக்கியமான பராமரிப்பு நிலைகளில் மிகுந்த உணர்வற்ற நிலை தேவைப்படுகிறது.
இது யாருக்கு தேவைப்படுகிறது?
உணர்ச்சியற்ற நிலை தேவைப்படும் நபர்கள் பின்வரும் நடைமுறைகளில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்பவர்களாக இருப்பார்கள்.
- பல் பதியம் அல்லது பல் நிரப்புதல்.
- மார்பகங்கள் போன்ற உறுப்புகளில் திசு பரிசோதனை (பையாப்சி).
- கால் எலும்பு முறிவு சரி செய்தல் அல்லது சரும பதித்தல் போன்ற சிறிய அறுவை சிகிச்சைகள்.
- எண்டோஸ்கோபி அல்லது டி ஸ்கேன் போன்ற கண்டறியும் நடைமுறைகள்.
- முதியவர்கள்.
இது எப்படி செய்யப்படுகிறது?
கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் பெண்கள் அல்லது மருந்துகள் அல்லது பிற்சேர்வுகளை எடுத்துக்கொள்பவர்கள், உங்கள் மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்படவேண்டும்.மருத்துவரின் அறிவுறுத்தலின் படி மருந்து சாப்பிடுவது அல்லது ஊசியால் சிரை வழி மருந்தேற்றல் மூலம் உணர்ச்சியற்ற நிலை செயல்முறை செய்யப்படுகிறது.
இப்போது செயல்முறையைப் பொறுத்து, சிகிச்சை பெறுபவர்கள் பேசமுடியும் ஆனால் லேசான மயக்க நிலையில் இருக்க கொடுக்கப்படும் மந்தமான உணர்வற்ற நிலை செயல்முறை செய்யப்படலாம்.இல்லையெனில், சிகிச்சை பெறுபவர்கள் உயிருடன் இருந்தாலும் அவர்கள் தூக்க நிலையில், குறைந்த சுவாசத்துடன் இருப்பர் மற்றும் சிகிச்சை செயல்முறை எதுவும் அவர்கள் நினைவில் இருக்காது.இது ஆழ்ந்த உணர்வற்ற நிலை ஆகும்.
அதிகமான மயக்க மருந்தூட்டல் கல்லீரல் அல்லது சிறுநீரகங்களை சேதப்படுத்தலாம்.செயல்முறைக்குப் பிறகு, மயக்க மருந்து மெதுவாக குறைக்கப்பட்டு, நோயாளி மெதுவாக உணர்வைத் திரும்பப் பெறுகிறார். உணர்ச்சியற்ற நிலை மிகவும் பாதுகாப்பானது;எனினும், இதய துடிப்பில் மாற்றங்கள், குறைந்த சுவாசம், தலைவலி அல்லது குமட்டல் ஆகியவை சாத்தியமான பக்க விளைவுகள் ஆகும்.வெளியேறிய பிறகு ஒருவர் தனது வழக்கமான நடவடிக்கைகள் மற்றும் உணவு ஆகியவற்றை பின்பற்ற முடியும்.