ஸ்கர்வி (சொறிகரப்பான் வியாதி) என்றால் என்ன?
ஸ்கர்வி (சொறிகரப்பான் வியாதி) என்பது அஸ்கார்பிக் அமிலத்தின் நீண்ட கால குறைபாட்டின் காரணமாக காரணமாக ஏற்படுவதாகும், இது பொதுவாக வைட்டமின் சி என அழைக்கப்படுகிறது.வைட்டமின் சி சத்து கொலாஜன் உருவாவதற்கு மிகவும் அவசியம் ஆகும்.இது இரத்த நாளங்கள் மற்றும் உடலின் பிற திசுக்களின் ஆதரவிற்கும் மற்றும் கட்டமைப்பு செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.இன்று ஸ்கர்வி மிகவும் அரிதான நோய் என்றாலும், இந்த நோயினால் ஏற்படும் பொதுவான குறைபாடுகளாக பலவீனம், இரத்த சோகை, பல்லீறு நோய்கள் மற்றும் சருமத்தில் இரத்தக்கசிவு போன்றவை ஏற்படலாம்.மேலும் வைட்டமின் சி யும் ஒரு முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஸ்கர்வி நோயினால் ஏற்படும் அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடுகிறது.
இந்நோயின் ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- பொதுவாக ஏற்படும் பலவீனம் மற்றும் உடம்பு சுகமில்லாதது போல் உணர்தல்.
- சோர்வு.
- குமட்டல்.
- வயிற்றுப்போக்கு.
- காய்ச்சல்.
- மையல்ஜியா (தசை வலி) மற்றும் மூட்டு வலி.
- பசியிழப்பு.
- மயிர்க்கால்கள் தோலில் துல்லியமான இரத்தப்போக்கை காட்டுதல்.
- கை கால்களில் வலி ஏற்படுதல்.
இந்நோய் தாக்கிய பிறகு ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- இரத்த சோகை.
- ஈறு நோய்.
- கண்களில் வீக்கம்.
- செதில் போன்று உலர்ந்து காணப்படும் பழுப்பு நிற தோல்.
- சருமத்தில்உள்ள காயங்கள் மெதுவாக குணமாதல்.
- சருமத்தில் இரத்தக்கசிவு.
- அதிகம் முடிகொட்டுதல், வறண்ட மற்றும் சேதமடைந்த முடி.
- மூட்டுகள் மற்றும் தசைகள் போன்ற உள் உறுப்புகளில் ஏற்படும் இரத்த கசிவின் காரணமாக கைகள் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படுதல்.
- எலும்பு வளர்ச்சியைத் தாமதப்படுத்துதல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஸ்கர்வி நோயானது ஊட்டப்பற்றாக்குறை மிகவும் ஒரு பிரச்சனையாக உள்ள வளர்ச்சியடையாத நாடுகளில் பொதுவாக காணப்படுகிறது.
உட்கொள்ளும் உணவில் உடலுக்கு போதுமான அளவு வைட்டமின் சி சத்து இல்லாத காரணத்தினால் வைட்டமின் சி பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதன் ஆபத்து காரணிகள் பின்வருமாறு:
- போதுமான அளவு உணவு உட்கொள்ளாதவர்கள், குறிப்பாக உணவுகளை குறித்து கவலை கொள்ளாதவர்கள், பசியற்ற உளநோய் (அனோரெக்ஸியா நர்வோசா,) உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள், மனம் மற்றும் உடல் குறைபாடு உள்ளவர்கள், குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்ணக் கூடியவர்கள் அல்லது உணவுப் பழக்கம் அல்லது ஒவ்வாமை உணவுகளை உட்கொள்ளுபவர்கள் இந்நோய் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளை கொண்டிருக்கிறார்கள்.
- சில குறிப்பிட்ட மருத்துவ நோய்களை கொண்ட மக்கள், அதாவது உண்ணும் உணவுகள் உடலில் உறிஞ்சப்படாமை, செரிமானமின்மை, டயலசிஸ் மேற்கொள்ளும் மக்கள், குடல் அழற்சி நோய், மற்றும் பல நோய் உள்ளவர்கள்.
- புகைபிடித்தல் மற்றும் மதுப்பழக்கம்.
- ஊட்டப்பற்றாக்குறை.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மருத்துவ அறிக்கை, உடல் பரிசோதனை,அறிகுறிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஸ்கர்வி ஏற்படுவதற்கான காரணம் கண்டறியப்படுகிறது.
வைட்டமின் சி பற்றாக்குறை உள்ள உணவின் வரலாறு கூட மதிப்பீடு செய்யப்படுகிறது.
இந்நோய்க்கான ஆய்வுகள் பின்வருமாறு:
- வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து அளவினை அளவிட இரத்த பரிசோதனை.
- கை மற்றும் கால் மூட்டுகளில் மேற்கொள்ளப்படும் எக்ஸ் ரே சோதனை.
குறைந்த அறிகுறிகள் மற்றும் வைட்டமின் சி ஊட்ட பற்றாக்குறை ஒருவருக்கு இருப்பின் ஸ்கர்வி இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
இந்நோய்க்கான சிகிச்சை முறை வைட்டமின் சி குறைபாட்டுக்கு ஈடான சிகிச்சையினை உள்ளடக்கியதாகும்.வைட்டமின் சி உள்ளடக்கிய மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.உங்கள் உணவில் வைட்டமின் சி நிறைந்த உணவு பொருட்களை சேர்த்துக்கொள்ளுதல் மற்றும் உணவு மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.இதன் மூலம் இந்நோயினால் ஏற்படும் அறிகுறிகளை பெரிதும் குறைக்கலாம்.பப்பாளி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்றவை வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களாகும்.
இந்நோய் ஏற்படுவதற்கான அடிப்படை நிலைமைகள் மற்றும் மோசமான காரணிகளை உடனே தெரியப்படுத்துவது அவசியமாகும்.