மூக்கு ஒழுகுதல் - Runny Nose in Tamil

Dr. Abhishek GuptaMBBS

February 07, 2019

September 11, 2020

மூக்கு ஒழுகுதல்
மூக்கு ஒழுகுதல்

சுருக்கம்

மூக்கு ஒழுகுதல் என்பது ஒரு பொதுவான மற்றும் எரிச்சல் நிலையானது. பெரும்பாலும் மூக்கு ஒழுகுதலை மருத்துவ ரீதியாக "ரினொரியா" என்று அழைக்கப்படுகிறது. எனினும், இதை துல்லியமாக சொல்ல வேண்டுமெனில், ரினொரியா என்பது மூக்கில் இருந்து மெல்லிய மற்றும் தெளிவான வெளியேற்றத்தை குறிக்கிறது.

சைனஸ் (கண் துளைகள், கன்னங்கள், மற்றும் நெற்றியில்) அல்லது காற்றுப் பாய்ச்சலின் காரணமாக அதிகப்படியான சளி உருவாகும் நிலை ஏற்படுகிறது. சைனஸ் பகுதி என்பது ஒரு குகை போன்ற அமைப்புடையதாகும், அது முகத்தின் எலும்புகளுக்கு பின்னால் உள்ளது மற்றும் நாசிப் பகுதியை இனைக்கும் இடத்தில் சளி குவிக்கப்பட்டிருக்கும். உடலில் சளி உருவாவதிற்கு காரணம், வைரஸ்களினால் ஏற்படும் ஜலதோஷம் அல்லது காய்ச்சல் ஆகும். மூக்கு ஒழுகுதலின் முக்கிய அறிகுறிகள் மூக்கு பகுதியில் தும்மலுடன் சேர்ந்த வெள்ளை திரவ சளி வெளிவருதல் மற்றும் மூக்கு பகுதிகளில் சிவத்தல் ஆகியவையாகும். இந்த நிலைமையானது தானாக குணமடையக்கூடியது, பெரும்பாலும் இதற்கு மருத்துவ உதவிகள் தேவையில்லை.

மூக்கு ஒழுகுதல் என்ன - What is Runny Nose in Tamil

உடலில் இயற்கையாகவே பாதுகாப்பு அமைப்புகாக சளி உற்பத்தி செய்வதுண்டு அதனால், ஒவ்வாமை அல்லது தொற்று காரணமாக மூக்கு ஒழுகுதல் ஏற்படலாம். அதிகப்படியான சளி உருவாக்கத்தினால் கூட தொண்டை வலி, தொண்டை வீக்கம் மற்றும் இருமல் ஆகியவை ஏற்படலாம். அடிக்கடி ஏற்படும் மூக்கு ஒழுகுதலுக்கு குறைந்தபட்ச மருத்துவ உதவிகளினால் குணப்படுத்த இயலும். ஆனால், அது சில நோய் கண்டறியபடா மருத்துவ நிலையின் அடிப்படையாகவும் இருக்கக்கூடும். மேலும் அறிய கீழே படிக்கவும். 

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

மூக்கு ஒழுகுதல் அறிகுறிகள் என்ன - Symptoms of Runny Nose in Tamil

மூக்கு ஒழுகுதலின் முக்கியமான அறிகுறியானது, மூக்கில் இருந்து பொங்கி வழிகின்ற சளியாகும்.

மூக்கு ஒழுகுதல் உடன் பின்வரும் அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், காது, மூக்கு, மற்றும் தொண்டை (ஈஎன்டி) நிபுணரிடம் சென்று நீங்கள் ஆலோசிக்க வேண்டும்: 

  • கண்களுக்கு கீழ் வீக்கம், கன்னங்களில் தடிப்பு அல்லது மங்கலான மற்றும் சிதைந்த பார்வை போன்றவையாகும்.
  • தொண்டை வலிகள் அல்லது உள் பகுதியில் (டன்சில்ஸ்) வெள்ளை மஞ்சள் நிறத்தில் வளரலாம்.
  • மூக்கின் ஒரு பக்கத்தில் இருந்து வரும் ஒரு விரும்பத்தகாத வாசனை மற்றும் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தை தவிர வேறுபட்ட வண்ணத்தில் சளி வெளியேறுதல்.
  • 7-10 நாட்களுக்கு தொடர்ச்சியான இருமல் மற்றும் மஞ்சள், பச்சை அல்லது அழுக்கு வெள்ளை நிற கோழை (சளி) வெளியேற்றம்.

மூக்கு ஒழுகுதல் சிகிச்சை - Treatment of Runny Nose in Tamil

பெரும்பாலும், எந்த மருத்துவ தலையீடு இல்லாமல் குணப்படுத்த மூக்கு ஒழுகுதலை ஆரம்பத்தில் எளிமையான சிகிச்சைகள் மூலம் வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில சமயங்களில் நிலைமை கடுமையானதாக இருக்கும் போது, சளியின் ஓட்டத்தை கட்டுப்படுத்த மருந்து தேவைப்படுகிறது.

  • வழக்கமாக, ஒழுகும் மூக்கு ஜலதோஷம் காரணமாக ஏற்படுகிறது. ஜலதோஷம் குணமாகும் வரை அதன் அறிகுறிகள் இருக்கும். பொதுவாக ஜலதோஷத்துக்கு மிகவும் குறைவாகவே மருந்துகள் உள்ளன மற்றும் மருத்துவர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதோடு நிறைய திரவங்கள் குடிக்கவும் அதோடு சேர்த்து நன்கு  போதுமான ஓய்வு எடுக்கவும் பரிந்துரைக்கின்றனர். ஜலதோஷம் தானே சரி ஆக 6 முதல் 7 நாட்கள் எடுக்கும்.
  • மருத்துவர் சில ஆண்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்கலாம். இருப்பினும், ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்றவை வைரஸ்கள் காரணமாக ஏற்படுகின்றன, ஆகையால், நுண்ணுயிர் எதிர்ப்பு  மருந்துகள் ஜலதோஷத்துடன் காய்ச்சழும் இருந்தால் நோய்த்தொற்றுக்கான நிவாரணத்தை மட்டுமே பெற உதவும். உங்களுக்கு கடுமையான காய்ச்சல் இருந்தால், மருத்துவர் சில வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைக்கலாம். வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் ஜலதோஷத்திலிருந்து விடுபடும் செயல்பாட்டினை விரைவுபடுத்துகின்றன, ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு அது தேவையில்லை என்று ஆராய்ச்சி குறிப்புகள் கூறுகின்றன. கடுமையான நிலைமைகள் கொண்ட நோயாளிகளுக்கு மட்டுமே வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

மருத்துவ சிகிச்சை

டாக்டரைக் கலந்தாலோசிக்காமல் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறீர்கள். சில மருந்துகள் இந்த நிலைமையை மீண்டும் ஏற்படுத்துதல் மற்றும் மேலும் மோசமாகுதல் போன்ற விரும்பத்தகாத பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன.

  • ஆராய்ச்சி, ஒரு ஒவ்வாமை காரணமாக ஏற்படும் தும்மல் மற்றும் ஒழுகும் மூக்கு ஆகியவற்றை ஆண்டிகோலினெர்ஜிக் நாசில்  அலர்ஜி ஸ்ப்ரேகள் பயன்படுத்துவதன் மூலம் நன்றாக குணப்படுத்தலாம்.
  • டிபின்ஹைட்ரமைன் மற்றும் குளோர்பினிரமைன் மருந்துகள் போன்ற சில ஒவ்வாமை எதிர்ப்பு (ஆன்டிஹிஸ்டமைன்ஸ்) மருந்துகளை  தும்மல் மற்றும் ஒழுகும் மூக்கு போன்ற அறிகுறிகளைக் கட்டுப்படுத்த டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். எனினும், இந்த மருந்துகள் தூக்கம் மற்றும் தலைச்சுற்றலை தூண்டுகிறது.
  • மூளை மற்றும் காது அடைப்புக்களுக்கு நிவாரணம் அளிக்க ஸுடோஎபிட்ரின், ஆக்ஸிமெட்டாசோலின் போன்ற  அடைப்புகளை நீக்கும் ஸ்பிரேக்களான மருந்துகளும் எடுத்துக் கொள்ளப்படலாம். எனினும், இந்த மருந்துகள் அதிக இதய துடிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகளை கொண்டு வரலாம். மேலே குறிப்பிட்டுள்ள மருந்துகளை மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமலும் மற்றும் 3 நாட்களுக்கு மேலும்  எடுத்துக்கொள்ளாதீர்கள்.

சுய பராமரிப்பு

  • உப்பு நீர் -
    உப்பு நீர் கொண்டு மூக்கினை சுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இதைச் செய்வதன் மூலம் நாசி துவாரங்களிலுள்ள அடைப்பு நீக்கப்பட்டு, சரியாக சுவாசிக்க முடியும். மேலும், உப்பு நீர் கொண்டு உங்கள் நாசி பாதையை சுத்தம் செய்யும்போது வைரஸ் வெளியே வரலாம் என்று நம்பப்படுகிறது. உப்பு நீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு, மனதில் வைக்க வேண்டிய ஒன்று; மூக்கினை சுத்தம் செய்வதற்கு முன்னர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அறை வெப்பநிலைக்கு கொண்டு வர வேண்டும். அதை அடிக்கடி ஓரிரு துளிகள் மூக்கில் விட்டுக் கொண்டால், விரைவில் மூக்கு ஒழுகுவது நிற்கும்.
  • ஆவி பிடித்தல் -
    நீராவி பிடிப்பது அடைபட்ட நாசி அடைப்பை நீக்க மிகவும் உதவியாக இருக்கிறது; அது ஒழுகும் மூக்கினை குணப்படுத்த உதவுகிறது. நீராவி பிடிப்பதின் மூலம் சிறந்த பயனை பெற, ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீர் வைத்து பின்னர் உங்கள் முகத்தை பாத்திரத்திற்கு நெருக்கமாக கொண்டு சென்று, பின்னர் உங்கள் தலையில் மற்றும் பாத்திரத்தை சுற்றி ஒரு துண்டு அல்லது தடிமனான துணியை வைத்து நன்கு மூடிக்கொள்ளவும். குளியலறையில் ஒரு சூடான ஷவர் குளியலுக்கு சென்று ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடுவதன் மூலம் நீராவி பிடித்தலில் ஒரு நல்ல அளவு எடுத்துக்கொள்ளலாம்.
  • வைட்டமின் சி -
    வைட்டமின் சி உட்கொள்வதன் மூலமும் ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தப்படலாம், எனவே ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழங்களை உட்கொள்ளலாம்.
  • யூக்கலிப்டஸ் எண்ணெய் -
    ஒரு பெரிய பாத்திரத்தில் சூடான தண்ணீரை எடுத்து யூகலிப்டஸ் எண்ணெயில் ஒரு சில துளிகள் சேர்க்கவும். அதற்குப் பிறகு, மேலே குறிப்பிட்டபடி, ஒரு துண்டு கொண்டு மூடவும். யூக்கலிப்டஸ் எண்ணெய் மூக்கடைப்பு மற்றும் மூடுபனி ஒழுகும் மூக்கிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
  • படுக்கை ஓய்வு -
    முறையான தூக்கம் மற்றும் முழுமையான ஓய்வு ஆகியவற்றால் நோயிலிருந்து குணமாகும் நேரம் குறைகிறது.


மேற்கோள்கள்

  1. American College of Allergy, Asthma & Immunology, Illinois, United States. Runny Nose, Stuffy Nose, Sneezing
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Stuffy or runny nose - adult
  3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Common Cold and Runny Nose
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Common Colds: Protect Yourself and Others
  5. National Health Service [internet]. UK; Cold, Flu, or Allergy?

மூக்கு ஒழுகுதல் க்கான மருந்துகள்

Medicines listed below are available for மூக்கு ஒழுகுதல். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.