ரூபெல்லா என்றால் என்ன?
ரூபெல்லா அல்லது ஜெர்மன் தட்டம்மை (மூன்று நாள் தட்டம்மை) என்பது ரூபெல்லா வைரஸ் ஏற்படுத்தும் ஒரு தொற்று நோயாகும்.குழந்தைகள் இதன் காரணமாக காய்ச்சல் மற்றும் தடிப்பினால் பாதிக்கப்படுகின்றனர். இது கர்ப்பிணிப் பெண்ணை பாதித்தால், இது கருச்சிதைவு, குழந்தை செத்துப் பிறத்தல், இறப்பு அல்லது பிறவி ரூபெல்லா நோய்க்குறி காரணமாக கொடிய அபாயங்களுக்கு வழிவகுக்கக்கூடும்.
இதன் பரவுதல் தன்மையினால், தும்மல் மற்றும் இருமல் மூலம் நோய்த்தொற்று எளிதில் பரவும்.இந்த தொற்றுநோய்க்கு மனிதர்கள் மட்டுமே ஒரு விருந்தோம்பியாய் இருக்கிறார்கள்.எனினும், ஒரு நபர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், நோயெதிர்ப்பு அமைப்பு எந்தவொரு அடுத்தடுத்த நோய்த்தாக்கத்தையும் ஒடுக்குகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ரூபெல்லா நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகள்:
- முகத்தில் தடிப்பு காணப்படும், அவை உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும்.
- காய்ச்சல்.
- வீங்கிய சுரப்பிகள்.
- இளம் பெண்களுக்கு மூட்டு வலி ஏற்படுகிறது.
நோய் தீவிரமாய் இருக்கும் சந்தர்ப்பங்களில், இது போன்ற சில சிக்கல்கள் ஏற்படலாம்
- மாதவிடாய் பிரச்சினைகள்.
- மூட்டு நோய்.
- மூளை நோய்த் தொற்று.
குழந்தைகளில், இந்த நிலைமை பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.
- 39 ° செல்சியஸ்-க்கு கீழே மிதமான காய்ச்சல்.
- விழி வெண்படல அழற்சி.
- குமட்டல்.
- வீங்கிய நிணநீர் சுரப்பிகள்.
வைரஸ் ஒரு வாரத்திற்குள் விரைவாக உடலில் பரவுகிறது மற்றும் இரண்டு வாரங்களின் இறுதியில் அறிகுறிகள் ஆரம்பமாகின்றன.
ருபெல்லா நோய்த்தொற்று முதல் மூன்று மாதங்களில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு வருமானால், அது ஆபத்தானது. இந்த தொற்று நோயானது பிறவி ரூபெல்லா நோய்க்குறிக்கு வழிவகுக்கிறது, மேலும் இது பிறந்த ஒரு வருடத்திற்கு பிறகு குழந்தையை வைரஸை வெளியேற வைக்கிறது.அதேப் போல், கருவிலேயே ஏற்படக்கூடிய பிற குறைபாடுகள் பின்வருமாறு:
- இதய கோளாறுகள்.
- பார்வை இழப்பு.
- மண்ணீரல் அல்லது கல்லீரல் சேதம்.
- மனவளர்ச்சிக் குறை.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மற்ற அனைத்து வைரஸ் தொற்றுகளைப் போலவே, ரூபெல்லா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து இருமும் தும்மம் போதும் வெளிவரும் துளிகளின் மூலமாகப் பரவுகிறது.இதன் நோயரும்புகாலம் மிகவும் நீண்டது, குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு பின்னரே இதன் அறிகுறிகள் தோன்றும்.குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு, நோய்த்தாக்குதலைத் தவிர்க்க ஒரு முகமூடி (ஏர் மாஸ்க்) அணிந்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இந்த நோய்த் தொற்றினால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, இந்த வைரஸை எதிர்க்கும் வகையில் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளவைது அவசியமாகும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ரூபெல்லா நோய்த்தொற்றின் அறிகுறிகள் வைரல் தடிப்புகளோடு நெருக்கமாகப் பொருந்துகின்றன.எனவே, நோய்த் தொற்று இருப்பதை கண்டுபிடிப்பதற்கு பல்வேறு ஆய்வக சோதனைகள் நடத்தப்படலாம்.வைரஸ் கல்சர் சோதனை அல்லது இரத்த பரிசோதனையின் மூலம் ரூபெல்லா எதிர்மங்கள் இரத்த ஓட்டத்தில் இருப்பதை உறுதிப்படுத்தலாம்.
ரூபெல்லாவிற்கு எந்த குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லை, அது அதன் சொந்த போக்கை எடுக்கிறது.இதற்கான சிகிச்சை அறிகுறிகளை நிர்வகிப்பதே ஆகும். காய்ச்சலை கட்டுபடுத்த காய்ச்சலடக்கி மருந்துகள், அரிப்பைக் குறைக்க ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் விஷயத்தில் அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
தட்டம்மை, தாளம்மை மற்றும் ரூபெல்லா ஆகியவற்றை தடுக்க, எம்.எம்.ஆர் எனப்படும் கூட்டு தடுப்பூசி வழக்கமாக ஒரு தற்காப்பு யுக்தியாக வழங்கப்படுகிறது.எம்.எம்.ஆர் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
ரூபெல்லாவை தடுக்கக்கூடிய இரண்டு தடுப்பூசிகள் உள்ளன.அவை பின்வருமாறு:
- எம்.எம்.ஆர் தடுப்பூசி, ரூபெல்லா தட்டம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கி (தாளம்மை) ஆகியவற்றிலிருந்து குழந்தைகளையும் பெரியவர்களையும் பாதுகாக்கிறது.
- எம்.எம்.ஆர்.வி தடுப்பூசி, ரூபெல்லா, தட்டம்மை, தாளம்மை, மற்றும் சின்னம்மை ஆகியவற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது.