பிறந்த குழந்தைகள் சார்ந்த சுவாச பாதிப்பு நோய்த்குறி என்றால் என்ன?
புதிதாக பிறந்த குழந்தைகள் சார்ந்த சுவாச பாதிப்பு நோய்த்குறி (ஆர்.டி.எஸ்) என்பது, குறிப்பாக குறை பிரசவ குழந்தைகள் மற்றும் பிறந்த குழந்தைகளில் காணப்படும் ஒரு நிலை ஆகும், இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.இந்நோய் பெரியவர்களில் அரிதாக தோன்றும் மற்றும் இது ஒரு குறுகிய சுவாச பாதிப்பு நோய்த்குறி (எ.ஆர்.டி.எஸ்) ஆகும்.இது குறிப்பாக நோய் மற்றும் காயம் ஏற்பட்ட 24 மணி நேரத்திலிருந்து 48 மணிநேரத்திற்குள் ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஆர்.டி.எஸ் நோயின் அறிகுறிகளானது குழந்தை பிறந்த சில நேரங்களில் அல்லது பல மணி நேரங்கள் கழித்து காணப்படுகிறது.இதன் அறிகுறிகள் பின்வருமாறு:
- விரைவான மற்றும்/அல்லது ஆழமற்ற சுவாசம்/மேலோட்டமான சுவாசம்.
- குறுகிய சுவாசம் அல்லது மூச்சு நிறுத்தம் (சுவாசம் நின்று விடுதல்).
- சுவாசிக்கும்போது உறுமல் சத்தம் வருதல்.
- அசாதாரண சுவாச இயக்கம்.
- நாசி எரிச்சல்.
- சிறுநீர்ப் போக்குக் குறைதல்.
- சருமம் மற்றும் சளி சவ்வுகளில் நீலம் பாய்தல் (சயனோசிஸ்).
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
முழுமையாக வளர்ச்சி அடையாத நுரையீரல் பிறந்த குழந்தைகளில் ஆர்.டி.எஸ் நோயை உருவாக்குகிறது மற்றும் இந்நோய் முக்கியமாக பற்றாக்குறையுள்ள பறப்பியங்கிகளின் (முதிர்ந்த மற்றும் வளர்ந்த நுரையீரலில் இருக்கும் வழுகும் தன்மையுள்ள காப்புப் பொருள்) உற்பத்தி குறைவு காரணமாக ஏற்படுகிறது.இது நுரையீரலில் காற்றை நிரப்ப உதவி காற்று பைகள் சுருங்குவதிலிருந்து நுரையீரலை பாதுகாக்கிறது.நுரையீரல் வளர்ச்சியின் போது ஏற்படும் மரபணு குறைபாடு காரணமாகவும் இந்த ஆர்.டி.எஸ் நோய் உருவாகலாம்.பொதுவாக இந்நோய் நிறைமாத குழந்தைகளில் காணப்படுவதை விட குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் அதிகம் காணப்படுகிறது.மெகோனியம் ஆஸ்ப்பிரஷன், அதாவது., குழந்தை கருப்பையில் இருக்கும் போது தற்செயலாக அதன் கழிவை உட்கொள்ளல் கூட இந்த ஆர்.டி.எஸ் நோய் ஏற்பட வழிவகுக்கும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மருத்துவர் ஒரு முழுமையான உடல் பரிசோதனையை மேற்கொண்ட பிறகு பரிந்துரைக்கப்படும் சோதனைகள் பின்வருமாறு:
- நோய் தொற்றினை அறிய செய்யப்படும் இரத்தப்பரிசோதனை.
- மார்பக எக்ஸ்-கதிர்கள் சோதனை, நுரையீரலில் பனியோட்டம் போல் படர்ந்திருக்கும் பிரத்தியேகமான நிலையைக் கண்டறிய செய்யப்படுகிறது, இது குழந்தை பிறந்த 6 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரத்திற்கு பிறகு தோன்றுகிறது.
- இரத்த வாயு பகுப்பாய்வு, உடல் திரவங்களில் உள்ள அசாதாரண ஆக்சிஜன் நிலைகள் மற்றும் அமில அளவுகளைக் கண்டறிய செய்யப்படுகிறது.
இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பிறந்த குழந்தைகள் அதிக ஆபத்தில் இருப்பதால் இவர்களுக்கு முக்கிய கவனிப்பு மற்றும் ஒரு நிபுணரின் கண்காணிப்பு தேவைப்படுகிறது.ஒரு குழந்தைகளை சீரான உடல் வெப்பநிலையில் வைத்திருக்கும் போது அவர்களை மென்மையாக கையாளுவதுடன் ஒரு அமைதியான சூழ்நிலையும் அவர்களுக்கு தேவைப்படுகிறது.அங்கு குழந்தைக்கு தேவையான திரவங்கள் மற்றும் ஊட்ட சத்துக்கள் நன்றாக நிர்வகிக்கிக்கப்பட்டு வேறு ஏதேனும் தொற்று இருந்தால் அவற்றிக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.இந்நோயின் பல்வேறு புலனுணர்வு வகை மேலாண்மை முறைகள் பின்வருமாறு:
- கவனமான மேற்பார்வையின் கீழ் பிறந்த குழந்தைகளுக்கு வெதுவெதுப்பான, ஈரப்பதமுள்ள ஆக்ஸிஜன் வழங்குதல் மற்றும் அவர்களை தொடர்ந்து கண்காணித்தல்.
- கூடுதலாக அல்லது செயற்கைப் பறப்பியங்கிகள் அளிப்பது, இது பொதுவாக குழந்தையின் சுவாச பாதையின் வழியாக நேரடியாக வழங்கப்படுகிறது.
- சில சமயங்களில் சுவாச இயந்திரம் பயன்பாடு:
- இரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகமாகவும், ஆக்ஸிஜன் அளவு குறைவாகவும் உள்ள போது அறிவுறுத்தப்படுகிறது.
- குறைந்த இரத்த பி.எச் அளவு (அமிலத்தன்மை) உள்ள போது அறிவுறுத்தப்படுகிறது.
- சுவாசத்தில் அடிக்கடி மூச்சுத் தடை இருக்கும்போது அறிவுறுத்தப்படுகிறது.
- தொடர் நேரிய காற்றுப்பாதை அழுத்தம் அல்லது சி.பி.எ.பி என்பது சுவாச இயந்திரம் சிகிச்சை முறைக்கு பதில் கொடுக்கப்படும் மற்றோரு சிகிச்சை முறை ஆகும்.இதன் மூலம் காற்று மூக்கிற்குள் செலுத்தப்படுவதால் இதற்கு சுவாச இயந்திர உதவி தேவைப்படுவதில்லை.