சுவாச மன அழுத்தம் என்றால் என்ன?
சுவாச மன அழுத்தம் என்பது ஹைப்போவென்டிலேஷன் என்றும் அழைக்கப்படுகிறது, இது மெதுவான மற்றும் செயலூக்கமில்லாத சுவாசத்தினால் உடலில் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு மற்றும் மிக குறைந்த ஆக்சிஜென் அளவுகள் ஆகியவற்றைக் கொண்டு வகையறுக்கப்படும் ஒரு சுவாசக் கோளாறு ஆகும்.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
இந்நிலையின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் அதன் தீவிரத்தை பொறுத்து வேறுபடுகின்றது. லேசானது முதல் மிதமான நிலையுடைய வழக்குகளில் ஏற்படும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- மூச்சு திணறல்.
- களைப்பு அல்லது சோர்வு.
- நாள் முழுவதும் தூக்கம் வரும் உணர்வு.
- மெதுவான மற்றும் ஆழ்ந்த சுவாசம் (வேகமான சுவாசத்தல் அரிதாக காணப்படுகிறது).
- மன அழுத்தம்.
இந்நிலை கடுமையானதாக மாறுவதுடன் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கப்பதால் ஏற்படும் பின்வரும் அறிகுறிகள் கவனிக்கப்படலாம்:
- தலைவலி.
- குழப்பம்.
- உதடுகள், விரல்கள், அல்லது கால்விரல்கள் ஆகியவைகள் உதா நிறமாக மாறுதல்.
- வலிப்புகள்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
சுவாச மன அழுத்தம் ஏற்படுவதன் முக்கியமான காரணம்
- அதிக எடை அல்லது பருமனாக இருக்கும்போது சுவாசிப்பதற்கு கூடுதல் முயற்சிகள் தேவைப்படும்.
- தூக்கத்தின் போது சுவாச வழி சுருங்குதல் என்பது கட்டுப்பாடான தூக்கம் மூச்சுத்திணறல் என்றும் அழைக்கப்படுகிறது.
- மார்பு சுவர் தொடர்பான சில குறைபாடுகள், முறையாக சுவாசிக்கும் திறனில் இடையூறு செய்கின்றன.
- சில நீண்டகால அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய்கள் சுவாச வழியில் அடைப்பு ஏற்பட வழிவகுக்கின்றது [எ.கா., நாள்பட்ட கட்டுப்பாடான நுரையீரல் நோய் (சிஓபிடி), சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்].
- மூளையில் காயம் ஏற்படும் காரணத்தால் சுவாசித்தல் போன்ற அடிப்படை செயல்பாடுகளின் கட்டுப்பாட்டில் ஏற்படும் தொந்தரவு.
- நரம்புத்தசை நோய்கள் காரணமாக பலவீனமடைந்த தசைகள் சுவாசத்தலை கட்டுப்படுத்துதல்.
- சில மருந்துகள், ஓபியாய்டுகள், மயக்க மருந்துகள், பார்பிச்சுரேட்ஸ், பென்ஸோடையாஸ்பைன்ஸ், அல்லது மத்திய நரம்பு மண்டல டிப்ரசன்ட் மருந்துகளை அதிகமான அளவில் உட்கொள்தல்.
- அதிகமாக மது அருந்தும் பழக்கம்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
மருத்துவர், அறிகுறிகளுக்கான முழுமையான வரலாற்றை குறித்துக்கொள்வதை தொடர்ந்து முழுமையான உடலியல் பரிசோதனையை மேற்கொள்வார்; அதன் பிறகு இந்நிலைக்கான காரணத்தை தீர்மானிக்க பின்வரும் சோதனைகள் அறிவுறுத்தப்படலாம்:
- இரத்த பரிசோதனைகள்
- இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனின் அளவை சரிபார்க்க பல்ஸ் ஆக்சிமெட்ரி டெஸ்ட் மேற்கொள்ளப்படலாம்.
- இரத்தத்தில் ஆக்ஸிஜனை கொண்டிருக்கும் உயிரணுக்களின் அளவை சரிபார்க்க ஹீமாடாக்ரைட் மற்றும் ஹீமோகுளோபின் மதிப்பீடு செய்தல்.
- இரத்த வாயு சோதனை என்பது கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆக்ஸிஜன் அளவுகளுடன் இரத்தத்தின் ஆசிட் /பேஸ் சமநிலையை சரிபார்க்க பயன்படுத்துவது.
- மார்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை வெளிப்படுத்த எக்ஸ்-கதிர்கள் சோதனைகள்.
- நுரையீரல் செயல்பாட்டு சோதனை.
- தூக்கம் தொடர்பான கோளாறுகளை வெளிப்படுத்த தூக்க ஆய்வு (தூக்கத்தில் மூச்சுத்திணறல்).
சுவாச மன அழுத்தத்தின் பராமரிப்பு ஹைப்போவென்டிலேஷன் ஏற்படுத்துவதற்கான காரணத்திற்கு சிகிச்சையளிப்பதை பொறுத்தது. அதற்கான சில சிகிச்சைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
- அதிக எடை அல்லது பருமனாக இருப்பவர்களின் எடை இழப்பு.
- மார்பு குறைபாட்டுக்கு சிகிச்சையளிக்க செய்யப்படும் அறுவை சிகிச்சை.
- திறமையாக சுவாசப்பதற்கான ஆக்சிஜன் தெரபி.
- நாள்பட்ட நுரையீரல் நோய் சிகிச்சை.
- சுவாசவழிகளை திறப்பதற்கான மருந்து.
- தூண்டுதல் காரணிகளாக செயல்படும் மருந்துகள் நிறுத்தப்படுதல்.
- தொடர்ச்சியான நேர்மறை காற்றுப்பாதை அழுத்தம் (சி பி ஏ பி) அல்லது பைலேவெல் காற்றுப்பாதை அழுத்தம் (பைபிஏபி) போன்ற சாதனங்கள் காற்றுப்பாதை திறந்திருப்பதை பராமரிக்க உதவுகிறது.