இனப்பெருக்க மண்டல நோய்த்தொற்றுகள் என்றால் என்ன?
இனப்பெருக்க மண்டல நோய்த்தொற்றுகள் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரின் இனப்பெருக்க உறுப்பின் பாதையிலும் பாதிப்பேற்படுத்தக்கூடிய நிலையாகும். பொதுவாக, இவை உடலில் வாழக்கூடிய நுண்ணுயிரிகளாலோ அல்லது சுற்றுப்புறத்தினால் அறிமுகமாகிய நுண்ணுயிரிகளாலோ ஏற்படக்கூடியது. இந்த நோய்த்தொற்றுகள் பாலியல் உறவு பரிமாற்றம் அல்லது பாலியல் உறவு அல்லாத பரிமாற்றம் என வகைப்படுத்தப்படுகிறது. இதன் இரண்டாவது நிலை பெண்களின் இடையே மிக பொதுவாக ஏற்படக்கூடியது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
பெரும்பாலும் இவை அறிகுறிகளற்றவையாகவோ அல்லது அறிகுறிகள் அடையாளம் காணமுடியாததாகவோ இருப்பதால், பெண்களில் இந்த தொற்றுகள் அதிகமாக ஏற்படுகின்றது. இருப்பினும், வெஜினல் வெளியேற்றம் என்பது பெண்கள் மத்தியில் காணப்படும் மிகவும் பொதுவான அறிகுறியாகும். பெண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க மண்டல நோய்த்தொற்றின் மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- பிறப்புறுப்பில் ஏற்படும் வலி.
- சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு தன்மை.
- பிறப்புறுப்பில் ஏற்படும் புண்.
- மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலி.
- அடிவயிற்றில் ஏற்படும் வலி.
- வலி மிகுந்த உடலுறவு.
ஆண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க மண்டல நோய்த்தொற்றின் அறிகுறிகள் பின்வருமாறு:
- ஆணுறுப்புலிருந்து ஏற்படும் வெளியேற்றம் துர்நாற்றத்தை கொண்டிருத்தல்.
- அழற்சி மற்றும் அரிப்பு.
- வலி.
- தோல் புண்கள்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
இந்த நோய்த்தொற்றுகள் அதன் காரணங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன:
- கேன்க்ராய்ட், கிளமீடியா, கொனொரியா, ஹெர்பெஸ், சிஃபிலிஸ் மற்றும் மனித நோய் எதிர்ப்பு குறைப்பாடு வைரஸ் (எச் ஐ வி) தொற்று போன்ற பாலியல் உறவால் பரிமாற்றம் செய்யப்படும் நோய்கள்.
- பெண்களின் பிறப்புறுப்புப் பாதையில் பொதுவாக இருக்கும் உயிரினங்களின் அதிகப்படியான வளர்ச்சியின் காரணமாக ஏற்படக்கூடிய எண்டோஜெனஸ் நோய்த்தொற்றுகள் இந்நிலைக்கு காரணமாக இருக்கலாம் எ.கா., வால்வோவஜினல் கேண்டிடியாஸ், பாக்டீரியா வஜினோசிஸ்.
- மோசமான டெலிவரி செயல்முறைகள் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு போன்ற தவறான மருத்துவ நடைமுறைகளால் ஏற்படக்கூடிய ஐயோட்ரோஜெனிக் நோய்த்தொற்றுகள்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
இனப்பெருக்க மண்டல நோய்த்தொற்றுக்களின் அறிகுறிகளை பொறுத்தே கண்டறிதல் இருக்கக்கூடும். இந்நிலைக்கான கண்டறிதலில், உடலியல் பரிசோதனையானது ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலினரிடமும் மேற்கொள்ளக்கூடிய பொதுவான நடவடிக்கை ஆகும்.
உடல் பரிசோதனையைத் தவிர, அறிகுறிகளின் சரியான காரணத்தைக் அடையாளம் காண மருத்துவர் வெஜினல் வெளியேற்றம், சிறுநீர் சோதனை, பெண்களின் அடிவயிறு மற்றும் இடுப்பில் எடுக்கப்படும் சோனோகிராபி போன்ற நுண்ணுயிர் பரிசோதனைகளை பரிந்துரைக்கலாம்.
அறிகுறிகளின் அடிப்படை காரணத்தை தீர்மானிக்க சிறுநீர் பகுப்பாய்வு, ஆணுறுப்பு வெளியேற்றத்திற்கான நுண்ணுயிர் பரிசோதனை, ஆண்களின் இடுப்பு பகுதி மற்றும் வயிற்றில் எடுக்கப்படும் சோனோகிராபி ஆகியவைகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
நோய்த்தொற்றின் சரியான காரணத்தை பொறுத்து சிகிச்சை வேறுபடலாம். இது பொதுவாக இந்நிலையின் அறிகுறிகளை கையாளுவதில் ஈடுபடக்கூடியது. செஃபிரியாக்ஸோன், எரித்ரோமைசின் மற்றும் அமொக்சிகில்லின் போன்ற ஆண்டிமைக்ரோபியல் மருந்துகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகின்றன.
சில தடுப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு:
- பலருடன் பாலியல் உறவு வைத்து கொள்தலை தவிர்த்தல்.
- சிறந்த தனிப்பட்ட சுகாதாரத்தை பேணிக்காத்தல்.
- பாலியல் உறவினால் பரிமாற்றம் செய்யப்படும் நோய் மற்றும் ஆணுறைகளின் பயன்பாடுகளை பற்றிய சமூக கல்வியளித்தல்.