ரேனாய்டு இயல் (தோற்றப்பாடு) - Raynaud's Phenomenon in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 12, 2019

March 06, 2020

ரேனாய்டு இயல்
ரேனாய்டு இயல்

ரேயினூட்டின் நிகழ்வு என்றால் என்ன?

ரேயினூட்டின் நிகழ்வு (ஆர் பி) என்பது மிகுந்த குளிர்ச்சியான காலநிலையில் வெளிப்படும் போதோ அல்லது மன அழுத்தத்தின் காரணத்தினாலோ இரத்த ஓட்டத்தின் அளவு மிகவும் குறைந்துவிடுவதால் கைவிரல்கள் மற்றும் கால்விரல்களில் ஏற்படும் நிற மாற்றங்களை (வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு) பண்பிடக்கூடிய ஒரு நிலையாகும். இந்நிலை இதன் அடிப்படை காரணத்தை பொறுத்து முதன்மை நிலையாகவோ அல்லது இரண்டாம்நிலையாகவோ கருதப்படுகிறது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

இந்நிலைக்கான அறிகுறிகள் இடைவிட்டு ஏற்படக்கூடியது, ஒருவர் இந்நிலையை எதிர்கொள்ளும் போது, ​​அவற்றுள் அடங்கும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் எதிர்கொள்ள நேரிடும் உணர்வுகள் பின்வருமாறு:
    • வலி.
    • பின்கள் மற்றும் ஊசிகளைக் கொண்டு குத்துவது போன்ற உணர்வுகள்.
    • உணர்வின்மை.
    • கூச்ச உணர்வு.
    • அசௌகரியம்.
  • நீலம், வெள்ளை அல்லது சிவப்பு போன்ற நிறமாற்றங்கள் மூலம் பண்பிடக்கூடியது.
  • பாதிக்கப்பட்ட பகுதியை அசைப்பதற்கு சிரமப்படுதல்.

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

ரேயினூட்டின் நிகழ்வு ஏற்படுவதன் அடிப்படை காரணம் ஒரு சிலரின் கைவிரல்கள் மற்றும் கால்விரல்களில் இருக்கும் இரத்த நாளங்களின் அதிகமான உணர்திறன் ஆகும். முதன்மை நிலையான ரேயினூட்டின் நிகழ்வு என்பது இடியோபாதிக் ஆகும்(காரணம் அறியப்படாத இடத்தில்), அப்படி இருக்கையில் இரண்டாம் நிலை வடிவத்தின் காரணங்களுள் அடங்குபவை:

  • ஆட்டோ இம்யூன் கோளாறுகள் மற்றும் கீல்வாதம் போன்ற சில நிலைகள்.
  • தோலுறைவு ஏற்படுதல்.
  • மருந்துகள், பீட்டா பிளாக்கர்கள் மற்றும் சில வேதியல் ஆய்வியலுக்கான மாத்திரைகள் ஆகியவை இந்நிலைக்கான காரணங்களுள் அடங்குபவை.
  • இயங்குவதில் ஏற்படும் நடுக்கம்.
  • அதெரோஸ்லிரோசிஸ் (தமனிகளை குறுகச்செய்வதோடு கடினமாக்குதல்).
  • புகைப்பிடித்தல்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

ஒரு முழுமையான மருத்துவ வரலாறு மற்றும் முழுமையான உடல் பரிசோதனை அடிப்படையில் கண்டறிதல், பின்வருவன அடங்கும் சோதனைகள்:

  • ஆட்டோ இம்யூனிட்டி இருப்பதைப் தெரிந்துக்கொள்ள இரத்த பரிசோதனைகள்.
  • நெயில் ஃபோல்ட் காபில்லெரோஸ்கோபி என்றழைக்கப்படும் சோதனை மூலம் விரல் நகங்களின் கீழே உள்ள இரத்த நாளங்களின் மதிப்பாய்வு.
  • விரல் நகத்தின் திசுக்களை கொண்டு எடுக்கப்படும் நுண்ணுயிரியல் பரிசோதனை.
  • குளிர் தூண்டுதல் சோதனை.

இந்நிலைக்கான பராமரிப்புகளுள் அடங்குபவை:

  • வாழ்க்கை முறை மாற்றங்களுள் அடங்குபவை பின்வருமாறு:
    • இந்நிலை தாக்குதளுக்கான முதல் அறிகுறி தோன்றுகையில் உடனடியாக மிதமான சூடு உடைய நீரில் கைகளை ஊறவைத்தல்.
    • குளிர் காலங்களில் கைகளையும் கால்களையும் சூடாக வைத்துக்கொள்வதற்கு கையுறைகளையும் ஹாண்ட் வார்மர்ஸ்களையும் பயன்படுத்ததுதல்.
    • மன அழுத்தம் மற்றும் சில மருந்துகள் போன்ற தூண்டுதல் காரணிகளை தவிர்த்தல்.
    • ரேயினூட்டின் நிகழ்வுகளை தடுப்பதற்கான முக்கிய மாற்றம் புகைபிடிப்பதை நிறுத்துதல்.
  • மருந்துகள்:
    • கால்சியம் சேனல் பிளாக்கர்கள் மற்றும் ஆஞ்சியோடென்சின்-ஏற்பி பிளாக்கர்கள் போன்ற இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், இரத்தக் குழாய்களை விரிவுபடுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்படுகிறது.
    • இந்நிலையினால் ஏற்படும் சிக்கல்களை (புண்கள்) சில்டெனாபில் அல்லது புரோஸ்டேசிக்ளினைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்க முடியும்.
    • அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெற பயன்படுத்தும் மருந்துகள் பின்வருமாறு:
      • மேற்பூச்சு கிரீம்கள்.
      • தேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் மறுபயிற்சிகள் (SSRI கள்).
      • கொலஸ்ட்ரால் குறைப்பதற்கான (ஸ்ட்டின்) மருந்துகள்.



மேற்கோள்கள்

  1. Rheumatology Research Foundation [Internet]. Georgia: American College of Rheumatology. Raynaud’s Phenomenon.
  2. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Raynaud's phenomenon.
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Raynaud's Disease.
  4. National Health Service [Internet]. UK; Raynaud's.
  5. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; Raynaud's.
  6. National Health Portal [Internet] India; Raynaud's Phenomenon.