தோல் சீழ்நோய் என்றால் என்ன?
தோல் சீழ்நோய் (பி.ஜி) என்பது சருமத்தில் வலிமிகுந்த புண்கள் காணப்படும் ஒரு அரிய தோல் வியாதியாகும். இந்த புண்கள் குணமடைய நீண்ட காலமாகும். சில நேரங்களில் இதனால் வடுகள் கூட ஏற்படும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
தோல் சீழ்நோய் பொதுவாக கால்களில் காணப்படும். இருப்பினும், உடலில் மற்ற இடங்களிலும் இது ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலைக்கான சில பொதுவான தாக்கங்களும் அறிகுறிகளும் பின்வருமாறு:
- சிறிய, சிவப்பு அல்லது ஊதா நிறத்திலான, வேகமாக பரவும் புடைப்புகள் அல்லது கொப்புளங்கள்.
- நன்கு வரையறுக்கப்பட்ட, நீலம் அல்லது ஊதா நிற பார்டர் உடைய வெவ்வேறு அளவுகள் மற்றும் ஆழங்களைக் கொண்ட புண்கள் (வீக்கமான, திறந்த புண்கள்).
- சில நேரங்களில் புண்கள் பரவலாக வளர்ந்து மிகவும் வேதனையளிக்கக்கூடும். அவை சிகிச்சை இல்லாமல் குணமடையலாம் அல்லது பாதிக்கப்படாமல் கூட இருக்கலாம்.
- நோய்த்தொற்று இருந்தால் காய்ச்சல் ஏற்படலாம்.
- மூட்டுகளில் வலி அல்லது குறிப்பிட்ட இடத்தில் தொடு வலிவுணர்வு காணப்படலாம்.
- பலவீனம் அல்லது உடல்நலக்குறைவு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இந்த நிலை ஏற்படுவதற்கான உறுதியான காரணம் இன்னும் தெளிவாக இல்லை (காரணம் அறியப்படாத நோய் என அழைக்கப்படுகிறது). எனினும், இதன் பின்வருவனவற்றுடன் தொடர்பாக கூட இருக்கலாம்:
- தன்னுடல் தாக்கு நோய் (உடல் ஆரோக்கியமான திசுவுக்கு எதிரான பிறபொருளெதிரிகளை உருவாக்குகிறது).
- வயிற்று அழற்சிநோய், சில இரத்தக் கோளாறுகள் மற்றும் சில வகையான கீல்வாதம்.
- இரண்டாந்தரமான அதிர்ச்சி அல்லது அறுவை சிகிச்சை.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மருத்துவர் நோய் சார்ந்த ஒரு விரிவான வரலாற்றை எடுத்து நோயாளியை மருத்துவ ரீதியாக மதிப்பீடு செய்து பிற சாத்தியமுள்ள நிலைகளை அகற்றி நோயைக் கண்டறிவார். சில பரிசோதனைகள் இதற்காக பரிந்துரைக்கப்படும் சில நோய் கண்டறிதல் சோதனைகள் பின்வருமாறு:
- சேதமடைந்த திசுவின் திசுப் பரிசோதனை.
- நோய்த்தொற்றினால் இந்த காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய ஸ்வாப் சோதனை.
- தொடர்புடைய நிலைமையைக் கண்டுபிடிக்க சில இரத்த பரிசோதனைகள்.
- காயங்கள் ஏற்படுவதற்கான காரணத்தை அறிய ஸ்கின் ப்ரிக் சோதனை.
தோல் சீழ்நோய் சிகிச்சையானது கடினமாக இருக்கும், நோய் குணமாகும் செயல்முறையானது நீண்ட காலம் எடுக்கக்கூடும். முழுமையாக நோயிலிருந்து விடுபட பல சிகிச்சை வகைகள் தேவைப்படுகின்றன. பொதுவாக, மாற்றுத்தோல் அறுவைசிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகள் தவிர்க்கப்படுகின்றன, ஏனெனில் அவை புண் விரிவடைய வழி வகுக்கும். பி.ஜி தீவிரத்தை பொறுத்து குறிப்பிட்ட இடத்தில் அல்லது மேற்பூச்சு சிகிச்சை அல்லது உடலமைப்பு முழுதுஞ் சார்ந்த சிகிச்சை மூலம் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படலாம்.
- மேற்பூச்சு சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- வலியைக் குறைப்பதற்கு புண்கள் மீதும் அதைச் சுற்றியும் பின்வரும் மருந்துகளை பயன்படுத்தத்தலாம்:
- வலுவான ஸ்டீராய்டு ஏற்பாடுகள்.
- கால்சிநியூரின் தடுப்பான்கள் (டக்ரோலிமஸ்).
- வலியைக் குறைப்பதற்கு புண்கள் மீதும் அதைச் சுற்றியும் பின்வரும் மருந்துகளை பயன்படுத்தத்தலாம்:
- உடலமைப்பு முழுதுஞ் சார்ந்த சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- நோய்த்தொற்று இருப்பின், மோனோசைக்லைன் அல்லது டாப்ஸோன் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள்.
- வீக்கத்தை குறைக்க மெத்தில்பிரைட்னிசோலோன் மற்றும் ப்ரிட்னிசோன் போன்ற ஸ்டீராய்டுகள் வாய்வழியாக அல்லது தசையூடான அல்லது பாதிக்கப்பட்ட பகுதியில் ஊடுருவக்கூடிய ஊசிகளாக வழங்கப்படுகின்றன.
- சைக்ளோஸ்போரின், அஸ்த்தோபிரைன், ஈனப்ழிக்ஷிமப், ஆதளிமுமாப் மற்றும் மைகோபெனோல்ட் மூஃபிடில் போன்ற நோய்த்தடுப்பு மருந்துகள் உடலின் நோயெதிர்ப்பு எதிர்வினையை குறைக்க உதவும்.
- மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் கீழ்கண்ட மருந்துகள் மூலமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன:
- சைக்ளோபாஸ்பைமடு.
- உயிரியல் சிகிச்சைகள்.
- நரம்பு வழி ஸ்டீராய்டுகள்.
- எதிர்ப்புப்புரதங்கள்.
- இந்த நிலை குறித்த வரலாற்றைக் கொண்டவர்கள்அறுவை சிகிச்சைக்கு முன் இயக்க ஊக்கி மருந்துகளுடன் நோய்த்தடுப்பு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேணடும். அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டும் இந்த நிலை ஏற்படலாம் என்பதால் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
- சற்று வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த உப்பு நீரில் பஞ்சை நனைத்து காயத்திற்கு மருந்து வைத்து கட்டு போடுதல்.