கிளாமிடியாசிட்டகோசிஸ் நோய் (கிளிநோய்) என்றால் என்ன?
கிளாமிடியாசிட்டகோசிஸ் நோய் அல்லது கிளிநோய் எனப்படுவது கிளாமிடியா சிட்டகி எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய்த்தொற்றாகும். இந்த பாக்டீரியா பறவைகளை, பிரத்யேகமாக கிளிகள், கோழிகள், வான் கோழிகள், நீண்ட வாலுடைச் சிறு கிளிவகை, புறாக்கள், காக்கடீல் கிளிகள் மற்றும் மற்ற பறக்கும் பறவைகளைத் தொற்றுகிறது. கிளி நோய்த்தொற்றுள்ள பறவையுடன் தொடர்பு கொண்டால் மனிதர்களுக்கும் இந்நோய்த் தொற்று பரவக்கூடும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் எந்த அறிகுறியும் தாக்கங்களையும் காட்டாமல் இருக்கலாம், எனினும் நோயரும்பு காலம் முடிந்த பின் கிளாமிடியாசிட்டகோசிஸ் நோய் பின்வரும் பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளது:
- சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் சில்லிடுதல் மற்றும் காய்ச்சல்.
- குமட்டல் மற்றும் வாந்தி.
- வயிற்றுப்போக்கு.
- சோர்வு மற்றும் பலவீனம்.
- மூட்டு மற்றும் தசை வலி.
கிளிநோய் பொதுவாக சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுத்துகிறது. எனினும், முன் கூறிய பறவைகள் அதுவும் வனப்பறவைகளுடன் தொடர்பு ஏற்பட்ட 9-15 நாட்களுக்குள் அறிகுறிகள் துவங்கும் என்பதை நாம் நினைவில் வேண்டும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கிளிநோய் வர முக்கிய அல்லது குறிப்பிட்டுக் கூறினால், இதற்கான ஒரே காரணம், நோய்தொற்றுள்ள பறவையுடன் ஏற்படும் தொடர்பே ஆகும். ஒரு பறவைக்கு கிளாமிடியா சிட்டகி நோய்த்தொற்று இருப்பதைக் கண்டறிய சுலபமான வழி பின்வரும் அறிகுறிக்களுக்காக பறவைகளை கண்காணிப்பதே ஆகும்:
- நடுக்கம் கண்களிலும் மூக்கிலும் இருந்து திரவம் வெளியேறுதல்.
- மந்தம், தூக்க மயக்கம்.
- குறைவாக உண்ணுதல் அல்லது முழுவதுமாக உணவு உட்கொள்ளாமல் இருத்தல்.
- நிறம்மாறிய (பச்சையின் பல வகைகள்) சிறுநீர் அல்லது மலைக்கழிவு.
- வயிற்றுப்போக்கு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
கிளிநோய் கண்டறிதல் சாதாரணமானது அல்ல. பாதிக்கப்பட்டவர் பறவையுடனான தொடர்பை/தொடுதலைப் பற்றி மருத்துவரிடம் கூற வேண்டும். கிளிநோய் கண்டறிய மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் சாதாரண இரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்பூடம் கல்சர் சோதனை ஆகியவை ஆகும்.
பிறபொருளெதிரி டைட்டர் சோதனை பாக்டீரியாவுக்கான பிறபொருளெதிரியின் இருப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படுகிறது. உடலின் நோயெதிர்ப்பு மண்டலம், நோயெதிர்ப்பு அமைப்பானது உடலில் பாக்டீரியா போன்ற அயல் பொருள் (ஆன்டிஜென்) இருந்தால், அதனை எதிர்க்கும்படியாக பிறபொருளெதிரிகளை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. உடலில் உள்ள பிறபொருளெதிரியின் வகை மற்றும் அதன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றின் அடிப்படியில் கிளி நோய்க்கான கண்டறிதல் உறுதிப்படுத்தப்படுகிறது.
சிகிச்சை பிறபொருளெதிரிகள் மூலம் - டாக்சிசைக்ளின் மற்றும் டெட்ராசைக்ளின் ஆகிய இரண்டும் பொதுவாக கிளிநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. பிறபொருளெதிரிகள் உட்கொள்ளுதல் நீண்ட காலத்திற்கு அதாவது காய்ச்சல் விலகிய பின்னும் பல நாட்களுக்கு தொடர்தல் வேண்டும். நோயிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஆனால் சிகிச்சையானது நோயிலிருந்து முழுமையாக குணமடையச்செய்கிறது.