புரோட்டின் குறைபாடு என்றால் என்ன?
புரதம், மனித உடலின் கட்டுமானப் பகுதியாக இருக்கின்றன. புரதத்தின் குறைபாடு என்பது ஒரு மிகவும் பொதுவான நிலை, குறிப்பாக சைவ உணவு உண்பவர்களிடமும் சைவர்களிடமும் புரதம் குறைவாக உள்ளது. மில்லியன் கணக்கான பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் தினசரி புரதம் உட்கொள்வதிலிருந்து தவறுவதால் இந்த நிலையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குவாஷியோர்கர் என்பது கடுமையான புரதம் குறைபாடு மற்றும் குழந்தைகளிடம் இது மிகவும் பொதுவானது காணப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஹார்மோன்கள் மற்றும் என்சைம்களின் உற்பத்தி மற்றும் திசுக்களின் கட்டமைப்புக்கு தேவையான மனித உடலின் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் புரதங்கள் ஒன்றாகும். கை குழந்தை மற்றும் குழந்தைகளில் புரதமின்மை குன்றிய வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இந்த நிலையுடன் தொடர்புடைய பொதுவான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- வீக்கம் அல்லது வீங்கிய தோற்றத்தை கொடுக்கும் தோலின் அடியில் தேங்கும் திரவம். இது குவாஷியோர்கர் நோய்கான தனிப்பட்ட அறிகுறி ஆகும்.
- தேவையான புரத உட்கொள்ளலை சந்திக்க தவறினால், உடலில் உள்ள கொழுப்பைக் கடத்தி செல்லும் லிப்போபுரோட்டின் உற்பத்தியில் குறைபாடு ஏற்படலாம். இத்தகைய நிலைமையால் உடல் பருமன் மற்றும் பெரும்பாலும் கொழுப்பு கல்லீரலில் தஙு்கிவிடும் அபாயம் உருவாகும். இதன் தீவிர நிலைகளில், கல்லீரல் தோல்வி ஏற்படலாம்.
- புரதங்கள் தோல், முடி மற்றும் நகங்களின் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். புரதம் குறைபாட்டால் முடி இழப்பு மற்றும் உலர்ந்த, சீரற்ற தோல் ஏற்படலாம். நகங்கள் மீது வெண்மை அல்லது கரடு முரடான தன்மை புரதம் குறைபாட்டைக் குறிக்கின்றன.
- களைப்பு.
- தசை மற்றும் மூட்டு வலி.
- தசை சுருக்கம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
புரதங்களின் குறைபாடு ஒரு சமநிலையற்ற உணவிலிருந்து போதுமான புரதம் உட்கொள்ளாமை அல்லது உடலில் சில குறைபாடுகளின் காரணமாக ஏற்படலாம், இதனால் புரதங்கள் ஒழுங்காக ஒருங்கிணைக்கப்படாமலோ அல்லது ஒழுங்காகப் பயன்படுத்தப்படாமலோ இருக்கின்றன. புரதம் குறைபாடு அல்லது ஹைபோபிரோடீனியாவின் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
-
ஊட்டச்சத்துக்குறை:
வளரும் அல்லது வளர்ச்சியடையாத நாடுகளில் புரதம் குறைபாட்டின் பிரதான காரணம் ஊட்டச்சத்தின்மை ஆகும், அங்கு உடலுக்கு தேவையான புரதம் உணவில் சரியான அளவு இல்லை. -
சிறுநீரக செயலிழப்பு
சிறுநீரகங்களின் நெப்ரான்ஸ் சேதமடைந்து புரதத்தை சிறுநீரில் வெளியேற்றுவதைத் தடுக்க தவறுவதால், சிறுநீரகத்தின் செயலிழப்பு ஏற்படும். -
அடிப்படை மருத்துவ நிலைமைகள்
புண்ணுறு பெருங்குடல் அழற்சி அல்லது க்ரோன் நோய் போன்ற குடல் அழற்சி நோய்கள் குடலை பாதிக்கின்றன மற்றும் புரதங்களின் உறிஞ்சுதலை தடுக்கின்றன.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
ப்ரோட்டீன் குறைபாடு அறிகுறியை ஒரு நபரில் பார்த்தால், உடலில் புரதம் அளவை மருத்துவர் மதிப்பிடுவார், அதனுடன் சேர்ந்து கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடும் பரிசோதிக்கப்படும்.
ஒரு சீரான உணவு முறையை பின்பற்றுவது உடலுக்கு தேவையான புரதத்தை மீண்டும் பெற நாம் செய்யவேண்டிய முதல் படியாகும். ஒரு நபரின் எடை மற்றும் நோய் நிலையின் தீவிரத்தன்மையின்படி ஒரு உணவு அட்டவணை தயாரிக்கப்படுகிறது. தினமும் சாப்பிடுவதற்கு தேவையான உட்கொள்ளும் பொருட்களும் பட்டியலிடுகிறது. சிவப்பு இறைச்சி, அசைவ உணவு உண்பவர்களுக்கு புரதம் ஒரு வளமான ஆதாரமாக உள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு காய்கறிகள், கொட்டைகள், விதைகள், சோயா, பருப்புகள் மற்றும் பீன்ஸ் ஆகியவை அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டும். சில புரத பிற்சேர்ப்புகள் மற்றும் மருந்துகள் ஆபத்தான நிலையில் பரிந்துரைக்கப்படுகின்றன.
வேறு சில அடிப்படை காரணங்களால் புரத குறைபாடு இருக்கும் நிலையில், புரதச் சேர்க்கையுடன் அந்த நிலைமையை சரி செய்வது ஒரு சிறந்த சிகிச்சையாகும்.