குழந்தைப்பேறுக்கு பிந்தைய இரத்தப்போக்கு என்றால் என்ன?
குழந்தைப்பேறுக்கு பிந்தைய இரத்தப்போக்கு என்பது யோனி வழியாக இரத்த இழப்பு ஏற்படும் ஒரு சாதாரண செயல்முறை ஆகும். இது யோனி மற்றும் கருப்பை மேற்திறப்பு (சிசேரியன்) வழி பிரசவம் ஆகிய இரண்டிலும் ஏற்படுகிறது. பிரசவத்திற்குப் பிறகு முதல் நாளில் இரத்த இழப்பு மிகக் கடுமையாக இருக்கும், அதன் பிறகு சற்று குறைந்துவிடும், இறுதியாக ஒரு சில வாரங்களுக்கு பிறகு முற்றிலும் நின்றுவிடும். பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு (பி.பி.ஹெச்) என்பது பிரசவத்திற்கு பிந்தைய 24 மணி நேரத்திற்குள் 500 மில்லி இரத்த இழப்பு யோனி வழி பிரசவத்திலும் மற்றும் 1000 மி.லி. இரத்த இழப்பு கருப்பை மேற்திறப்பு வழி பிரசவத்திலும் இருக்கும் அதிகப்படியான இரத்தப்போக்காகும். இது பேற்றுக்குப்பின் சுரப்பு என்றும் அறியப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் மிகவும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- குறைந்த இரத்த அழுத்தம்.
- அதிகபடியான இரத்தப்போக்கு.
- அதிகரித்த இதய துடிப்பு.
- இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைதல்.
- யோனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம் மற்றும் வலி ஏற்படுதல்.
- பலவீனம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பிரசவத்திற்குப் பிறகு, கருப்பை சுருங்குவதால், அது யோனி வழியாக நஞ்சுக்கொடியை (சூல்வித்தகம்) வெளியே தள்ளுகிறது. நஞ்சுக்கொடியை வெளியேற்றிய பின்னர் கருப்பை சுருங்கியே காணப்படுகிறது. கருப்பை போதுமான அளவு சுருங்க முடியாத போது பி.பி.ஹெச் ஏற்படலாம். பிரசவத்திற்குப் பிறகும் நஞ்சுக்கொடியின் சிறிய பகுதிகள் கருவறையில் இணைந்திருந்தால் கூட இந்த நிலை நிகழலாம். இதற்கான காரணங்கள் சில பின்வருமாறு:
- ஈமோஃபீலியா அல்லது வைட்டமின் கே குறைபாடு போன்ற இரத்த உறைவு சார்ந்த குறைபாடுகள்.
- நஞ்சுக்கொடி கோளாறுகள்.
- யோனி அல்லது கர்ப்பப்பையில் ஏற்படும் காயம்.
- இரத்த நாளங்களில் ஏற்படும் காயம்.
- இடுப்பு இடைவெளிகளில் ஏற்படும் இரத்தப்போக்கு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோய் கண்டறிதல் பின்வருமாறு நிகழ்கிறது:
- உடல் பரிசோதனை.
- இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவீடு.
- இரத்தக் அணுக்களின் எண்ணிக்கையை கண்டறிய இரத்த பரிசோதனைகள்.
- இரத்த இழப்பு மதிப்பீடு.
சிகிச்சையின் முக்கிய நோக்கம் இரத்தப்போக்குக்குரிய காரணத்தை அடையாளம் கண்டு அதற்கு சிகிச்சையளிப்பதே ஆகும். இதற்கான சிகிச்சை முறைகள் சில பின்வருமாறு:
- கருப்பையை மசாஜ் செய்தல் அல்லது மருந்துகள் மூலம் கருப்பை சுருக்கத்தை தூண்டுதல்.
- கருப்பையில் இருந்து நஞ்சுக்கொடி இழையங்களை அகற்றுதல்.
- இரத்தம் கசியும் இரத்த நாளங்களை மூடுவதற்காக கருப்பை சுருக்கம்.
- வயிற்றறை திறப்பாய்வு (இடுப்புகளில் சிறிய கீறல்கள் மூலமாக சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளுதல்).
- கருப்பை நீக்க அறுவை சிகிச்சை (கருப்பை நீக்கம்).
பி.பி.ஹெச்-ல் அதிகப்படியான திரவ இழப்பு ஏற்படுவதால், அந்த திரவங்களை மீண்டும் கிடைக்கச்செய்தலே சிகிச்சையின் முக்கிய அம்சமாகும். நரம்பு வழியாக திரவங்கள், இரத்தம் மற்றும் இரத்த அணுக்களை அதிகரிக்கும் பொருட்களை உட்செலுத்துவது தேவையான திரவங்களைக் கிடைக்கச்செய்கிறது.