நுரையீரல் அழற்சி என்றால் என்ன?
நுரையீரல் அழற்சி என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் கோளாறு மற்றும் நோய்த்தொற்று அல்லாத காரணங்களால் நுரையீரலில் ஏற்படும் வீக்கமே ஆகும். இது நுரையீரலில் குறுகிய காலம் அல்லது நீண்ட காலத்துக்கு வீக்கம் ஏற்படுத்தி அதன் செயல்பாட்டை பாதிக்கும் குறிப்பிட்ட பொருட்களை எதிர் கொள்வதினால் ஏற்படுகின்றது. இதனை சரியான நேரத்தில் சரியான விதத்தில் கையாளாவிட்டால் நுரையீரலுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
நுரையீரல் அழற்சியின் அறிகுறிகள் மற்றும் தாக்கங்கள் பின்வருமாறு:
- சுவாசிப்பதில் சிரமம்.
- காய்ச்சல்.
- சோர்வு.
- சில்லிடுதல்.
- மார்பகங்களில் இறுக்கம்.
- வறட்டு இருமல்.
- பசியின்மை.
- எடை இழப்பு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
நுரையீரல் சுற்றுச்சூழலில் உள்ள குறிப்பிட்ட பொருட்களின் பாதிப்புக்கு தொடர்ந்தோ அல்லது அடுத்தடுத்து பல முறையோ உட்படும் போது வீக்கம் ஏற்பட்டு நுரையீரல் அழற்சி உண்டாகிறது. நுரையீரல் அழற்சியைத் தூண்டும் பின்வரும் முகவர்கள் இருப்பின், நுரையீரல் அதனை எதிர்கொள்ளும் பொருட்டு நுரையீரல் வீக்கம் போன்ற மிகையுணர்திறன் எதிர் வினைகளை உண்டாக்குகிறது:
- புரதம்.
- ரசாயனங்கள்.
- வைக்கோல்.
- விலங்குகளுக்கான உணவு.
- மாசடைந்த உணவுப் பொருள்கள்
- காற்றுச்சீரமைப்பி மற்றும் காற்றோட்ட அமைப்புகள்.
- விலங்கின் மென் மயிர்.
- பறவைகளின் இறக்கை அல்லது எச்சம்.
- மரத் துகள்கள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உடல் பரிசோதனைக்குப் பிறகு பின் வரும் பரிசோதனைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பர்:
- இரத்தத்தில் உள்ள வெள்ளணுக்கள் மற்ற பிற எதிர்ப்பு சக்தி அணுக்களின் உயர்ந்த அளவுகளைக் கண்டறிய இரத்தப் பரிசோதனைகள்.
- நுரையீரலை தெளிவாக காண சி.டி ஸ்கேன் மற்றும் மார்பக எக்ஸ்ரே.
- நுரையீரலின் செயல்பாட்டை கண்டறிய நுரையீரல் செயல்பாட்டுப் பரிசோதனை.
- நுரையீரலில் சேர்ந்திருக்கும் திரவத்தை சேர்த்து அதில் இரத்த வெள்ளணுக்கள் உள்ளதா என்பதை கண்டறிய ப்ரான்கோஅல்வியோலர் லாவேஜ்.
நுரையீரல் அழற்சிக்கான சிகிச்சை பின்வருவனவற்றை உள்ளடக்கும்:
- இயக்க ஊக்கி மருந்துகள் மற்றும் எதிர்ப்புசக்தியொடுக்க மருந்துப்பொருட்கள்.
- மூச்சு இரைச்சல் சமாளிக்க ஓபியோடிட்கள்.
- நுரையீரல் தசைகளை தளர்த்த மூச்சுக் குழாய்த் தளர்த்தி.
- பிராணவாயு சிகிச்சை மூலம் பிராணவாயு உள்ளிழுக்கும் அளவை அதிகப்படுத்துதல்.
ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை சுற்றுச்சூழலிலிருந்து நீக்குவது, ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களில் இருந்து விலகி இருப்பது, பணியிடத்தை மாற்றுவது போன்றவை இந்நோய்த்தொற்றினை சமாளிப்பதற்கான பிற முறைகள் ஆகும்.