நியூமோகோக்கல் நோய் என்றால் என்ன?
நியூமோகாக்கஸ் எனப்படும் நுண்கிருமியால் நியூமோகோக்கல் நோய் ஏற்படுகிறது. இது பலவிதமாக வெளிப்படலாம், அனால் இது குணமடையக்கூடியது மற்றும் 90% நிகழ்வுகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்படுத்தாது. இதன் வெவ்வேறு வடிவங்களை எதிர்த்து தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் இதன் தாக்குதலைத் தடுக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?
பாதிக்கப்பட்டிருக்கும் உள்ளுறுப்பின் அடிப்படையில் இதன் அறிகுறிகள் வேறுபாடும், எடுத்துக்காட்டாக காதுகளுக்கு பாதிப்பு இருந்தால் காதுகளின் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்நோயினால் ஏற்படக்கூடிய வெவ்வேறு நிலைகள் பின்வருமாறு:
- ஊடுருவா நியூமோகோக்கல் நோய்: காது நோய்த்தொற்று, மூச்சுப் பிரிகுழல் அழற்சி மற்றும் காற்றுப்புரையழற்சி போன்ற மூச்சு சம்பந்தப்பட்ட கோளாறுகள்.
- ஊடுருவும் நியூமோகோக்கல் நோய் : இரத்தத்தில் ஏற்படும் பாக்டீரியல் நோய்தொற்று காரணமாக ஏற்படும் குளிர் மற்றும் காய்ச்சல்; நிமோனியா எனப்படும் குலைக்காய்ச்சல், மூச்சுக் கோளாறுடன் மார்பக வலி மற்றும் காய்ச்சல் ஏற்படுத்தும்; கழுத்தில் விறைப்பு, தன்னிலை இழத்தல், ஒளியைக் காண இயலாமை ஆகியவற்றை எற்படுத்தும் மூளைக்காய்ச்சல் மற்றும் வியர்வை மிகுந்த தோல், தன்னிலை இழத்தல், இதயத் துடிப்பு வீதம் அதிகரித்தல் மற்றும் தீவிர வலி ஆகியவற்றை ஏற்படுத்தும் இரத்தநச்சுப்பாடு.
நோய்தாக்குதலுக்கான முக்கியக் காரணங்கள் என்ன?
நியூமோகோக்கல் பாக்டீரியாவும் உடலின் அந்த பாக்டீரியா பரவுதலும் இந்நோய்க்கான முக்கிய காரணங்களாகும். இந்நுண்ணுயிர் கிருமி (பாக்டீரியா) காற்றின் மூலம் பரவி மூக்கு அல்லது வாய் மூலம் உடலில் நுழைந்து தொண்டை வழியாக நுரையீரல், காதுகள் மற்றும் மூளை போன்ற வெவ்வேறு பாகங்களை அடைகிறது. ஒரு இணக்கமான நோயெதிர்ப்பு அமைப்பு இல்லை எனில் இந்த நுண்ணுயிர்க்கிருமி பற்பல நிலைகளையும் அதைச் சம்பந்தப்பட்ட அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோயை கண்டறிய முதலில் உடல் பரிசோதனை மூலம் துவங்குவது நோய்த்தொற்றைப் பற்றிய தெளிவான கருத்தை தரும். உடல் நிலை தீவிரம் அடைய நேர்ந்தால், மருத்துவர்கள் நுரையீரல், மூட்டுகள் அல்லது எலும்புகளில் இருந்து திரவம் எடுத்து பரிசோதித்தல் மற்றும் மார்பக எக்ஸ்-கதிர்கள் சோதனை போன்ற சோதனைகளை பரிந்துரைப்பார்.
நியூமோகோக்கல் நோயிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் பொதுவான முறை தடுப்பூசிகள் ஆகும். ஒருவேளை நோயாளிக்கு ஏற்கனவே நோய்த்தாக்கம் ஏற்பட்டிருந்தால் முதல்நிலைச் சிகிச்சை, அறிகுறிகளின் தன்மையைப் பொறுத்து அமையும்.
உடலில் நோய் பரவி இருக்கும் நிலையின் அடிப்படையில் சிகிச்சை முறைகள் வேறுபடும். சில மிதமான நிலைகளில், மருத்துவம் ஏதும் இல்லாமல் அல்லது குறைந்த நுண்ணுயிர்க்கொல்லிகள் உட்கொள்ளுதல் மூலம் ஒருவரால் குணமடைய முடியும். அனால் ஊடுருவும் நியூமோகோக்கல் நோய்க்கு அதிக மருந்தளவிலான மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். சில தீவிர வகைகளில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமணையில் சேர்க்க நேரிடலாம்.