முகப்பரு என்றால் என்ன?
முகப்பரு என்பது பொதுவான தோல் நிலையாகும், இது பருக்கள் என அழைக்கப்படும் காயங்களின் சிதைவு, முகம், தோள்கள், கழுத்து, முதுகு மற்றும் மார்பு பகுதியில் பொதுவாக ஏற்படும் கரும்புள்ளிகள் அல்லது வெண்புள்ளிகள் ஆகியவற்றின் மூலம் பண்பிடப்படப்படுகிறது. இந்நிலை உடல் நலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் அளவிற்கு தீவிரமானது இல்லையென்றாலும், தோலில் நிரந்தர அடையாளம் ஏற்படக்காரணமாக இருப்பதோடு தோலின் தோற்றத்தையும் குலைக்கிறது. முகப்பரு என்பது பெண்களிடத்தில் குறிப்பாக பொதுவாக காணப்படுவது, அதிலும் குறிப்பாக பருவ வயதுடைய பெண்களிடம் காணப்படும்.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
சருமத்தில் முகப்பருவிற்கான வெளிப்பாடு பின்வரும் வடிவங்களில் தோன்றலாம்:
- கரும்புள்ளிகள் அல்லது வெண் புள்ளிகள் அல்லது சிறிய வீக்கம் (பருக்கள்) போன்று தோன்றலாம்.
- சிறிய கொப்புளம் (கொப்புளங்கள்) அல்லது சிகப்பு தளம் மற்றும் சீழ் நிறைந்த கொப்புளங்கள் போன்ற வடிவத்தில் தோன்றலாம்.
- வலிமிகுந்த சிறிய வட்டமான கட்டிகள்(நொதில்கள்), அவை தோலில் ஆழமாக அமைந்திருப்பதன் விளைவால் வடுக்கள் உருவாக காரணமாக இருக்கிறது.
- நீர்கட்டிகள் அல்லது துவாரங்கள் முக்கியமாக சீழ் நிரம்பியதாக இருப்பதோடு குணமடைந்த பின் தளும்பை ஏற்படுத்தக்கூடியது.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
முகப்பருக்களை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகளுள் அடங்குபவை பின்வருமாறு:
- பாக்டீரியா பி. ஆக்னஸ்களின் விரைவான வளர்ச்சி.
- ஆண் (அன்ரோஜன்கள்) மற்றும் பெண்(ஈஸ்ட்ரோஜென்) பாலின ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தின் விளைவால் முகத்திலிருக்கும் சிறு துவாரங்களில் அடைப்பு மற்றும் அழற்சி உண்டாகிறது.
- பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் உபயோகப்படுத்துவதில் ஏற்படும் மாற்றத்தினாலும் (உட்கொள்ள துவங்கும் போது அல்லது நிறுத்தும் போது) கர்ப்பகாலத்திலும் ஏற்படும் ஹார்மோனல் மாற்றம்.
- பாலிசிஸ்டிக் கருப்பை நோய் (பிசிஓடி).
- வாழ்க்கைமுறை காரணிகளுள் அடங்குபவை:
- உடற்பருமன்.
- மனஉளைச்சல்.
- ஆரோக்கியமற்ற உணவுமுறை.
- உடற்பயிற்சியின்மை.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
- பாதிக்கபட்ட பகுதியை முழுமையாக பரிசோதிப்பதின் உதவியால் முகப்பருவை கண்டறியமுடியம். முகப்பருக்களை அதன் காரணத்தை கொண்டு கண்டறிய பின்வரும் சோதனைகள் அறிவுறுத்தப்படுகின்றன:
- இரத்த பரிசோதனைகள் மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள் பிசிஓடி ஐ கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன.
முகப்பரு சிகிச்சை முறை, குணப்படுத்துதலுக்கு நீண்டகால செயல்முறையாக இருக்கின்றது, குறிப்பாக இதற்கு சிறந்த தோல் பராமரிப்பும் தேவைப்படுகிறது.
மருத்துவர் பரிந்துரை செய்யும் பயனுள்ள முகப்பரு கட்டுப்பாட்டு முறைகள் பின்வருமாறு:
- ஆண்டிபயோட்டிக்ஸ் பயன்பாடு; இது வாய் வழியாகவோ அல்லது மேற்புறமாக உபயோகிக்கலாம் (தோலில் நேரடியாக பூசுவது), இது எதிர்ப்பு அழற்சி விளைவுகளை கொண்டது மேலும் முகப்பரு உருவாக காரணமாக இருக்கும் பாக்டிரியாவை குறைக்க உதவுகிறது.
- சாலிசிலிக் அமிலம் மற்றும் பென்சோயில் பெராக்சைடு மேற்புற பூச்சு ஆகியவை பொதுவாக லேசாக உள்ள முகப்பருக்களுக்கு சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படுகிறது.
- ஐசோட்ரீட்டினோயின் மாத்திரைகள்; இவை கடுமையான முகப்பருக்கள் இருக்கும் வழக்குகளில் பயன்படுத்தப்படும் மிகவும் பயனுள்ள சிகிச்சை ஆகும், இது முகத்தில் இருக்கும் சிறு துவாரத்தில் ஏற்படும் அடைப்பை நீக்குவதோடு, மேலும் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகின்றது, இதனால் எண்ணைபசை குறைந்து மென்மையான சருமம் ஏற்பட உதவுகிறது.
- லைட் அல்லது பயோஃபோட்டானிக் தெரபி லேசானது முதல் மிதமான அழற்சியுடைய முகப்பருவிற்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
- ஹார்மோன்-நெறிப்படுத்தும் தெரபியில் குறைந்த அல்லது மிக குறைந்த அளவு ஈஸ்ட்ரோஜன் மற்றும் எதிர்ப்பு ஆன்ட்ரோஜன் கர்ப்பத்தடை மாத்திரைகள் பெண்களின் முகப்பருவிற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
- மேற்புற மற்றும் வாய்வழி ரெட்டினாய்ட்கள் சிறு துவாரங்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கவும் புதிய அடைப்பை தடுக்கவும் பயன்படுகிறது.
- ரெட்டினாய்டுகள் மற்றும் பென்சோயில் பெராக்சைடு சேர்க்கை சிகிச்சையும் பயன்படுத்தப்படுகிறது.
சில சுய-பாதுகாப்பு குறிப்புகள்:
- முகத்தை ஓரு நாளிற்கு இரண்டு முறை மிருதுவான “சோப் ஃபிரீ” திரவ க்ளீன்சர்களை கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
- ஆழமாக சுத்தப்படுத்த உதவும் கடினமான பொருட்கள்(தேய்ப்புப் பொருட்கள்) மற்றும் ஆல்கஹால் இல்லாத க்ளீன்சர்களை தேர்வு செய்யவும்.
- முக க்ளீன்சர்களின் பிஹெச் அளவு சமச்சீரானதாக இருக்க வேண்டும்.
- சிறு துவாரங்களை அடைக்காமல் இருக்கும்(துளைகள்) உபயோகப்படுத்தி சோதித்து பார்த்த பொருட்களையே சருமத்தில் பயன்படுத்தவேண்டும்.