சுருக்கம்
மூலநோய், பயில்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு மலக்குடல் மற்றும் ஆசனவாயில் வீங்கிய மற்றும் நொதிக்கப்பட்ட நரம்புகள் உண்டாவதால் ஏற்படும் நிலை ஆகும். எளிமையாக இதை ஆசனவாய் மற்றும் மலக்குடலின் 'சுருள் சிரை நாளங்கள்' என்று கூறலாம். மூல நோய் உள் (மலக்குடலுக்குள் வளரும்) அல்லது வெளிப்புறமாக (ஆசனவாயை சுற்றிய தோலில்) இருக்க முடியும்.
பல காரணங்களால் மூல நோய் ஏற்படக்கூடும், இருப்பினும் சரியான காரணம் பெரும்பாலும் தெரியவில்லை. அவை மலம் கழிக்கும்போது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதாலோ அல்லது கர்ப்ப காலத்தில் மலக்கழி நரம்புகளில் அதிகரித்த அழுத்தம் காரணமாகவோ இருக்கலாம். மூல நோயின் தீவிரத்தை பொறுத்து அறிகுறிகள் லேசான அரிப்பு மற்றும் அசௌகரியம் போன்றவற்றிலிருந்து இரத்தப்போக்கு வரை வேறுபடுகின்றன. சிகிச்சையானது அறிகுறிகளையும் மூல நோயின் தீவிரத்தையும் பொறுத்தது. சிகிச்சையானது, வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்வது, நார்ச்சத்துள்ள உணவை உண்பது, வலி நிவாரணிகளை பயன்படுத்துவது போன்ற சில எளிய வழிமுறைகளை உள்ளடக்கியது அல்லது அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மூல நோயில் சிக்கல்கள் பொதுவாக அரிதானவை. சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், மூல நோய் நாள்பட்டதாகவும் அழற்சியாகவும் மாறிவிடும் மற்றும் இரத்த உறைவு மற்றும் புண்களை உருவாக்கும்.
மூல நோய் பொதுவாக ஆபத்தானது அல்ல, அது மிகவும் தொந்தரவாக இருந்தால் மட்டுமே சிகிச்சை செய்யப்பட வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற மூல நோய் வழக்கமாக பிரசவத்திற்க்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும். மலச்சிக்கல் காரணமாக ஏற்படும் மூல நோய், உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் முக்கியமான மாற்றங்கள் கொண்டுவருவதால் ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்யப்படுவதும் கூட திருப்திகரமான முடிவுகளை அளிக்கிறது.